இன்று ஒரு தகவல் 7 - மாவீரன் பகத் சிங் !!!

''அடங்க மறு , அத்து மீறு” இன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்றுஅவன் தூக்கிலிடப்பட்ட நாள் .இந்திய விடுதலைப் போராட்டம்' என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.

 நம்மில் பலருக்கு ஞாபக மறதி அதிகம். அதனால்தான் ஒரு வீரனின் தியாகம் மறக்கப்பட்டு விட்டது. நாமே மறந்துவிட்ட ஒன்றைநாம் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ? நம் முந்தைய தலைமுறைநமக்கு இதை சொல்ல மறந்ததால்தான் நாம்   சூடு,சுரணை ,மானம் ,வெட்கம் எல்லாம் மறந்து வேடிக்கை மனிதர்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவரது கதை ஆயிரமாயிரம் முறை பேசப்பட்டுவிட்டதுஎன்றாலும், அவரது தியாகத்தை நினைவு கூறும்வகையில் மீண்டும் ஒரு முறை பேசுவோம்.

ந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.
சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்


ளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.
வரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

ட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.
வர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!
தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:

“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”
ரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம்.

ரு சேகுவேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங்.


ன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல் அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

35 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 7 - மாவீரன் பகத் சிங் !!! :

பிரேமா மகள் said...

நல்ல சிந்தனை உங்களுக்கு..

புலவன் புலிகேசி said...

பகத்சிங் எனக்குப் பிடித்த மாமனிதர்...

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு நண்பரே.

பனித்துளி சங்கர் said...

பிரேமா மகள் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் புலவன் புலிகேசி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Rose said...

My Dear,
Always give good information in your website so i am would like to give oscar award " GOOD WRITER IN TAMIL"

அண்ணாமலையான் said...

நல்ல கருத்து.. மாவிரந்தான்

வரதராஜலு .பூ said...

//முந்தைய தலைமுறைநமக்கு இதை சொல்ல மறந்ததால்தான் நாம் சூடு,சுரணை ,மானம் ,வெட்கம் எல்லாம் மறந்து வேடிக்கை மனிதர்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//

நமது சிந்தனைகள் அப்படி மழுங்கடிக்கப்படுகின்றன. நித்தி மேட்டர் போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பகத்சிங் போன்றவற்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. மிகவும்
வருத்தத்திற்குரிய விஷயம். :(

உங்கள் அசத்தல் தொடர்கிறது. மேன்மேலும் தொடரட்டும்

settaikkaran said...

நினைவூட்டல் என்னும் கடமையைத் தவறாமல் செய்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள்!! பகத்சிங் புகழ் வாழ்க!!

Menaga Sathia said...

சூப்பர் பதிவு!! பகத்சிங் பற்றி மேலும் தெரிந்து கொண்டதில் சந்தோஷம்.பகிர்வுக்கு நன்றி!!

ஒரு சந்தேகம் ப்ரொபைலில் உங்க வயது 1991 ந்னு போட்டிருக்கிங்களே, எனக்கு புரியலை என்னன்னு சொல்லுங்க...

Jaleela Kamal said...

பனித்துளி என்று சொல்வதை விட சிந்த்தனை துளி என்று சொல்லலாம், ரொம்ப அருமையான பகிர்வு, இதெல்லாம் சேகரித்து கோர்வையா எழுதுவது பெரிய விஷியம்.

வாழ்த்துக்கள்.

(என் பகுதிக்கு வந்து அருமையா வாழ்த்தி இருக்கீங்க,நன்றி.

Jaleela Kamal said...

அப்பா எம்மாடியோவ் மொத்தம் 600 பதிவுகளா வியக்க வைக்கிறது.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Rose அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் சேட்டைக்காரன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

Jaleela அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

Mrs.Menagasathia அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{Mrs.Menagasathia said...
சூப்பர் பதிவு!! பகத்சிங் பற்றி மேலும் தெரிந்து கொண்டதில் சந்தோஷம்.பகிர்வுக்கு நன்றி!!

ஒரு சந்தேகம் ப்ரொபைலில் உங்க வயது 1991 ந்னு போட்டிருக்கிங்களே, எனக்கு புரியலை என்னன்னு சொல்லுங்க...}}}}}}}}}}}}}}}}}}}}மன்னிக்கவும் ஏதோ தவறு நிகழ்ந்து இருக்கிறது .சரி செய்துவிடுகிறேன் !

karthik said...

பயனுள்ள பதிவு நண்பரே பணி சிறக்க வாழ்த்துக்கள்

Unknown said...

ஒரு சல்யூட்...
மாவீரன் பகத் சிங்-க்கு

மாவீரன் பகத் சிங் பற்றி
படிக்கும் போதே
மனத்தில் ஒரு வீரஉணர்வு
இவனை போல் மாநிலத்துக்கு ஒருவன் இருந்தால்,
நாம் நாடு எப்பவோ வல்லரசு நாடக உருவாகி இருக்கும்.


என்றும் ப்ரியமுடன் M.MEENU

பனித்துளி சங்கர் said...

நண்பர் karthik அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் meenavan அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

அன்புடன் மலிக்கா said...

அருமையா தொகுத்து வழங்கியிருக்கீங்க பனித்துளி.
சூப்பர்... வாழ்த்துக்கள்

டிராகன் said...

மீண்டும் வருவான் சங்கர் !!!!!!!!!!!!

பனித்துளி சங்கர் said...

அன்புடன் மலிக்கா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் shankar அவர்களுக்கு உங்களின் வருகைக்கு அளித்து நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

டிராகன் said...

மீண்டும்,மீண்டும் வருவான் சங்கர்!!!!!!!!!!!!!!!!!!!

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்.

மிக நல்ல பகிர்வு

Raghu said...

அருமையான‌ ப‌கிர்வு ச‌ங்க‌ர் :)

Unknown said...

மாவீரன் பகத்சிங்கிற்கு வீர வணக்கங்கள்

சுதந்திரன் said...

பகத்சிங்கின் வரலாறு மட்டுமல்ல... பொதுவாகவே புரட்சியாளர்கள் வரலாறு அனைத்துமே மறைக்கப்பட்டு கொண்டுதான் இருந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை புரட்சியாளர்களே இந்திய விடுதலையின் முக்கிய ஆணிவேர்கள். அவர்களை எதிர்க்க முடியாததாலும் அவர்கள் மேல் உள்ள கோபத்தாலும் ஆங்கிலேயர்கள் மிதவாதிகளிடம் நாட்டைக் கொடுத்து புரட்சியாளர்களை தீவிரவாதிகள் என்று மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி வெற்றியும் கண்டுவிட்டார்கள். இதற்கு நமது மிதவாதிகள் என்று அழைக்கப்படும் பலரும் துணை போனதுதான் துரோக வரலாறு. பகத்சிங்கின் இறுதிக்கடிதத்தையும், இறுதி நிமிடத்தையும் என் வலைப்பூவில் பதிந்துள்ளேன். நேரத்தை மிச்சப்படுத்தி படித்துப் பாருங்கள். நன்றி;
http://sethiyathope.blogspot.com/2009/08/blog-post_15.html

Jerry Eshananda said...

பெயரில் பனியாய்...பதிவில் புயலாய்...."இப்படி பட்டாசு கிளப்புறீங்களே."

துபாய் ராஜா said...

பகத்சிங் எனக்கு பிடித்த உலகப் புரட்சியாளர்களில் முதன்மையானவர்.

அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள் சங்கர்.