உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

லகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு மிகவும் சாதாரணமாக பதில் சொல்லிடுறாங்க காணவில்லை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று . அதே பிரச்சனை காலப்போக்கில் கண்டுபிடிக்காமலே காணமல் போய்விடுகிறது . இப்படியெல்லாம் அவ்வப்பொழுது நடக்கத்தான் செய்கிறது . அதார்க்கு இப்ப என்னவென்ருதானே கேக்குறீங்க விசயம் இருக்கு சொல்கிறேன் . உலகத்தையே தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் வல்லரசு நாடான அமெரிக்க தேனீக்களைக் காணவில்லை என்று பரபரப்புடன் தேடிக்கொண்டு இருக்கிறார்கலாம் .
தேனீக்களைக் காணவில்லையாம் !.
இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .
தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .

தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .

தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .

தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.

தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .

இப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

50 மறுமொழிகள் to உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! :

lolly999 said...

மிக முக்கியமான விடயம் இது. உலகைப் பற்றிய கவலை யாருக்கு இப்பொழுது இருக்கிறது. உங்களை போல ஒரு சிலரைத் தவிர, நன்றி இப்பதிவிற்கு ....

அண்ணாமலையான் said...

நல்ல விஷயம்.. வாழ்த்துக்கள்...

வரதராஜலு .பூ said...

தேனி சிறுசுதான். ஆனாலும் விஷயம் எவ்வளவு சீரியசாசானது? இன்னும் என்ன என்னவெல்லாம், எப்படி எப்படியெல்லாம் சோதனை வரப்போறிதோ நம் மனித இனத்திற்கு?

பனித்துளி சங்கர் said...

நண்பர் lolly999 அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

karthik said...

கடுகு சிறுத்தலும் காரம் குறையுமா
இன்றுதான் தேனி எவ்வளவு முக்கியம் என்று அறிந்துகொண்டேன்
பாராட்டுகளுடன் வாழ்த்துகளும்

பனித்துளி சங்கர் said...

நண்பர் karthik அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விஷயம்....

பனித்துளி சங்கர் said...

////////Sangkavi said...
நல்ல விஷயம்.... ////////பதிவை படித்துவிட்டுத்தான் மறுமொழி போட்டு இருக்கீங்களானு ஒரு சந்தேகம் ?

Unknown said...

**** மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .?*****

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயற்சி செய்யும் முயற்சி தான் ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது??????

பா.வேல்முருகன் said...

உண்மையிலேயே சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்தான்.

மகரந்தச் சேர்க்கைக்கு இனிமேல் ரோபோ தேனீ கண்டுபிடிப்பார்கள்.

இயற்கையைத்தொலைத்து விட்டு என்னதான் தேடிக்கொண்டிருக்கிறோம் இந்த உலகில் ?

வின்சென்ட். said...

காலத்திற்கேற்ற மிக அவசியமான பதிவை தந்துள்ளீர்கள். என்னதான் செயற்கை வந்தாலும் இயற்கைக்கு ஈடு தர இயலாது. இது போன்ற நிறைய பதிவுகளை எதிர்பார்கிறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

super

Thekkikattan|தெகா said...

நல்ல கட்டுரை, பனித்துளி! மக்களாகிய நாம் நினைக்கலாம், நவீன முறைகளைக் கொண்டு நாமே மகரந்தச் சேர்க்கைக்கும் உதவி விட முடியுமென்று, ஆனால் தேனீக்கள் போன்று டைவர்சிடி பெருகுவதற்கு தனிப்பட்ட ஒன் ஆன் ஒன் முறையில் எந்த நவீன அணுகு முறையும் தாவரங்களுக்கு உதவி விட முடியாதென்றே கருதுகிறேன்.

மாதேவி said...

தேனீக்களின் அழிவு பற்றிய நல்ல இடுகை.

இயற்கை அழிப்பால் நீங்கள் கூறியதுபோல இன்னும் எத்தனை உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீராம். said...

என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?//

நல்ல பதிவுன்னுதான் சொல்றேன். இயற்கையின் முன்னேற்றங்களால் ஏற்படும் அழிவைத் தடுப்பது கடினம்தான்

Shyam said...

பயனுள்ள பதிவு, வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

நல்ல கருத்துகள்

இளமுருகன் said...

காலத்திற்கேற்ற நல்ல பதிவு சிந்திப்போம் செயல்படுவோம்.

BALACHANDAR said...

நன்றி நண்பரே..... உங்களை போல் சிலர் கவலை கொண்டு என்ன செய்வது..... இருக்கும் அரசியல்வாதி, ஓட்டிற்கு பணம் வாங்கும் இந்த ஏழைகள் என்ன செய்வார்கள் ? இவர்களுக்கு எல்லாம் தேர்தல் வந்தால் கண்டிப்பாக பிரியாணி, நூறு ருபாய் பணம் வந்தால் போதும் ,,,,,,,, இதை பற்றி எவரும் கவலை பட போவது இல்லை......கண்டிப்பாக நம் அனைவர்க்கும் இறக்கை அன்னை பதில் சொல்வாள்......... பொறுத்திருந்து பார்ப்போம் நண்பரே,,,,,

நண்பர் Sangkavi அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் priya அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Vels அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் வின்சென்ட். அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் ஸ்ரீராம். அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி மாதேவி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Thekkikattan|தெகா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Shyam அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் இளமுருகன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் BALACHANDAR அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் சந்தனமுல்லை அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

அன்புடன் நான் said...

மிக சிறந்த கருத்துங்க.... உங்க ஆதங்கம் நேர்மையானது.... என்ன நடக்குமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி.. said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
போட்டு தாக்குங்க !
//

யாரை..????

lolly999 said...

மிக சிறந்த கருத்துங்க.... உங்க ஆதங்கம் நேர்மையானது.... என்ன நடக்குமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.

இதற்கு பதில்:::-----சாப்பிடுவதற்கு உணவு உற்பத்தி இல்லாவிட்டால் ஆளை ஆள் பிடித்து உண்ண வேண்டியது தான் !!!!!!

ஜீவேந்திரன் said...

மிக நல்ல பதிவு. (எல்லாத்திலேயும் குத்திப்புட்டேன் தல- வாக்கை சொன்னேன் )

ஆராய்வு

prabhadamu said...

நல்ல விஷயம்!

பயனுள்ள பதிவு!!

உங்கள் பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் நண்பா!!!

அரங்கப்பெருமாள் said...

//செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள்//

உண்மையா?

பனித்துளி சங்கர் said...

நண்பர் சி. கருணாகரசு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் lolly999 அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் jeevendran அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் prabhadamu அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{அரங்கப்பெருமாள் said...
//செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள்//

உண்மையா? }}}}}}}}}}}}}}}}}}}}}

உண்மைதான் நண்பரே !

நண்பர் அரங்கப்பெருமாள் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

KANNAN RAJENDRAN said...

நல்ல விஷயம் பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.......

Anonymous said...

இந்தக் கட்டுரையை ஞானியின் ஓ பக்கங்களில் படித்ததாக நினைவு.

Unknown said...

இந்த கருத்தை பற்றி நான் முதலில் யோசிக்கவில்லை. நான் சிறு பிள்ளையாய் இருக்கும்போது எங்கள் வீட்டில் அறுவடைக்கு பின் ஒரு மிகப் பெரிய நெற்கதிர் கட்டினை வாசலில் கட்டி வைத்திருப்பார்கள் . அதை சிட்டு குருவிகள் சிறுக சிறுக ஒரு ஆறு ஏழு மாதங்களுக்கு கொறித்துக் கொண்டிருக்கும். அந்த குருவிகளையும் மேலும் கிராமங்களில் சற்று பெரிய மரங்களின் உச்சியில் உள்ள தேன் கூட்டில் இருந்து தேனையும் வழக்கம்போல் திருடி சாப்பிட்டுவிட்டு இப்போ இல்லாத அந்த தேனீக்களையும் காணமுடியவில்லையே என்று பார்த்து பின் அதன் காரணம் ............................