அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக அட்லஸ் ATLAS பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம் . பொதுவாக அட்லஸ் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டால் அது உலக வரைபடம் என்பார்கள், இன்னும் சிலர் அட்லஸ் சைக்கிள் என்பார்கள் இன்னும் சிலர் அவர் ஒரு நடிகர் என்பார்கள் இப்படி ஒவ்வொருவரும் ஒரு பதில்களுடன் இந்த அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார்கள் . சரி அப்படி என்றால் இந்த அட்லஸ் ( ATLAS ) என்றால்தான் என்ன இந்த அட்லஸ் ( ATLAS ) என்ற வார்த்தைக்கான சிறப்பு என்ன ? எதற்க்காக இதற்கு இந்த பெயர் வந்தது என்று கேட்டால் இந்த அனைத்துக் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கக் கூடும் . இந்த அட்லஸ் ( ATLAS ) பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கத்தின் விளைவுதான் இந்த பதிவு. சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம் .
முதலில் இந்த அட்லஸ் ( ATLAS ) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். நிலவியல் வரை படங்களின் தொகுப்பிற்குத்தான் அட்லஸ் என்று பெயர் . இதை உலக வரை படம் என்று அனைவருக்கும் தெரிந்த வகையிலும் சொல்லலாம் . இங்கு இரண்டு விஷயங்களை தெளிவாக சொல்லியாகவேண்டும் ஒன்று நிலவியல் என்றால் என்ன ? மற்றொன்று வரைபடம் என்றால் என்ன ? .
சரி இப்பொழுது முதலில் நிலவியல் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். நிலவியல் என்பது பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியில், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. இந்த நிலவியல் என்ற ஒரே வார்த்தையில் பல வேறுபட்ட பிரிவுகளும் இருக்கின்றன அது இப்பொழுது நமக்குத் தேவை இல்லை.
அடுத்ததாக வரைபடம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம் வரைபடம் என்பது ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் , பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு பார்வைக்குரிய அடையாள பிரதியாகும். வரைபடங்களுள் பல, முப்பரிமாண பரப்பின், நிலையான புவியியற்பிழையற்ற இருபரிமாண பிரதிகளாகவும், இன்னும் சில, சக்திவாய்ந்த ஊடுதலைக் கொண்ட முப்பரிமாண பிரதிகளாகவும் உள்ளன. இப்பொழுது அனைவருக்கும் நிலவியல் வரைபடம் என்பது பற்றி தெளிவாக புரிந்திருக்கக் கூடும் இவை அனைத்தையும் பற்றிய விரிவான வரைபடங்களின் தொகுப்பிற்குதான் அட்லஸ் என்று பெயர் .
சரி இப்பொழுது இந்த அட்லஸ் என்ற பெயர் எப்படி இந்த உலக வரைபடம் மற்றும் நிலவியல் வரைபடங்களின் தொகுப்பிற்கு வந்தது என்று பார்க்கலாம் . மிகவும் பழமை வாய்ந்த கிரேக்கப் புராணத்தின் அட்லசு என்பவன் கிரேக்க புராணங்களில் கூறப்படும் ஓர் அசுரன் (Atlas Titans).
ஒரு முறை அரக்கர்களுக்கு இடையிலான போரில் அட்லஸ் ( ATLAS ) கலந்து கொண்டு எதிரிகளுக்கு சாதகமாக செயல் பட்டதால் கோபம் கொண்ட கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான ஜீயஸ் விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி அட்லசிற்கு தண்டனையை வழங்கினாராம் . பின்னாளில் அதே அட்லசை கிரேக்கர்கள் அனைவரும் சொர்க்கத்தை தாங்கி நிற்கும் கடவுளாகவும் வணங்கினார்களாம் . அது மட்டும் இல்லாது அந்த காலக் கட்டத்தில் இருந்த மன்னன் ஒருவன் சிறந்த கணித வல்லுனராகத் திகழ்ந்ததாகவும் அவனின் பெயரும் அட்லஸ் என்றும் கிரேக்கப் புராணங்களில் குறித்து வைத்திருக்கிறார்கள் .
உலக வரைப்படத்தை உருவாக்கிய டச்சு நாட்டுக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீரன் உலகை தாங்கிப் பிடிதிருப்பதுபோல் பல ஓவியங்களை வரைந்திருகிறார்கள் பின்னாளில் அந்த வீரனுக்கு அட்லஸ் என்றும் பெயரிட்டு அழைத்து வந்திருகிறார்கள் . பின்னாளில் அனைவரும் இந்த அட்லசை டச்சு வணிகர்ளுடன் இணைத்து பேசி இருக்கிறார்கள் . டச்சு நாட்டவர்களும் இவற்றை உண்மையாக்கும் பொருட்டு ஆம்ஸ்டர்டாமில் உள்ள உலக வணிக மையக் கட்டடத்தில் அட்லசு உலகைத் தாங்கி நிற்பது போன்ற சிலை ஒன்றையும் அமைத்து இருக்கிறார்கள் . அந்தக் காலக் கட்டத்தில்தான் உலக வரை படமும் வரைந்து முடிக்கப் பட்டு பெயர் சூட்டுவதற்க்காக தயார் நிலையில் இருந்திருகிறது . இதை அறிந்த டச்சுக் காரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உலக வரைபடத்திற்கு அட்லஸ் ( ATLAS ) என்றே பெயர் சூட்டினார்களாம்.
காலப்போக்கில் இதே அட்லஸ் என்ற சொல் ஒருபொருட் பன்மொழியாக ஒரே காரணத்தால் பல பொருட்களையும் குறிக்கப் பயன்பட்டது. அட்லசு எனும் சொல் குறிக்கும் பொருட்களாவன : உலக வரைபடம், World Map உலகைத் தாங்கி நிற்கும் டைட்டன், மனித உடலின் முதல் முதுகெலும்பு. போன்ற பலவற்றைக் குறிப்பது போன்று மாற்றம் பெற்றது .
அத்துடன் நின்றுவிடாமல் இந்த அட்லஸ் ( ATLAS Experiment ) , World Atlas அறிவியலின் பல வளர்சிக்கு பின்பும் அனைவரும் வியக்கும் ஒன்றிற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது .நம் உடலில் கபாலத்தைத் தாங்கி நிற்பது முதுகெலும்பு. மனித உடலில் மொத்தம் உள்ள 33 முதுகெலும்புகளில் முதலாவது முதுகெலும்பு அட்லசு எனவும் இரண்டாவது எலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது.அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பும் அட்லசின் நினைவாக அவன் பெயரிலேயே இன்றும் மருத்துவத் துறைகளில் புகழ் பெற்று விளங்குகிறது . என்ன நண்பர்களே அட்லஸ் ( ATLAS ) என்ற ஒரு சிறிய வார்த்தை எவளவு துறைகளில் கொடிகட்டி பறக்கிறது என்பதை இந்த தகவலின் வாயிலாக நீங்களும் அறிந்துகொண்டிருபீர்கள் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
20 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 41- அறிந்துகொள் அட்லஸ் ( ATLAS ) அதிசயம் !!! :
நல்ல தகவல்கள்.இது போன்ற பலதுறை சம்பந்தப் பட்ட தகவல்களை அடிக்கடி வழங்கவும்.நன்றி,நன்றி. காலிங்கராயர்.
நல்ல தகவல்கள்.இது போன்ற பலதுறை சம்பந்தப் பட்ட தகவல்களை அடிக்கடி வழங்கவும்.நன்றி,நன்றி. காலிங்கராயர்.
நல்ல தகவல்கள்.இது போன்ற பலதுறை சம்பந்தப் பட்ட தகவல்களை அடிக்கடி வழங்கவும்.நன்றி,நன்றி. காலிங்கராயர்.
நல்ல தகவல்கள்.இது போன்ற பலதுறை சம்பந்தப் பட்ட தகவல்களை அடிக்கடி வழங்கவும்.நன்றி,நன்றி. காலிங்கராயர்.
நிச்சயம் அருமையான பதிவு அண்ணா .. தொடர்ந்து எழுதுங்க ..
உங்களிடமிருந்து மீண்டும் ஒரு அருமையான பதிவு. மேன்மேலும் தொடருங்கள்
மிக மிக நல்ல பதிவு.
அருமையான பதிவு.
நல்ல தகவல்கள்.
தொடர்ந்து எழுதுங்க.
நீங்கள் தொடர்ந்து இப்படி நல்ல தகவல் எங்களுக்கு சொல்லி தருவதற்கு நன்றி நண்பரே
thanks 4 sharing dear buddy
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
ஏன் இன்னும் இன்ட்லி பட்டனை இணைக்காமல் உள்ளீர்கள்
நல்ல தகவல்.
நன்றி.
விரிவான அலசல்... பகிவிற்கு நன்றி..
எங்கப்பா எனக்கு 5-ம் வகுப்பு படிக்கிறப்ப அட்லஸ் கிஃப்ட் பண்ணாங்க ஆனா இப்பத்தான் இவ்வளவு விசயம் தெரிஞ்சுகிட்டேன்... நன்றி
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.
நல்லா இருக்குங்கோ......
நல்ல பதிவு நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
வியக்கவைக்கும் புதுமையான தனவல்கள் அட்லஸ் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்து இருக்கீங்க நண்பரே..! தொடர்ந்து கலக்குங்க.. தல...!
Hi Shankar,
I have been searching for such wonderful blog posts, Really amazed to read all the informative contents in your blogs. Believe you would continue your fabulous work.
great compilations.
keep it up.
Althaf.
Post a Comment