பறக்க ஆசை
எனக்கு விமானங்கள் வேண்டாம்
சிறகுகள் போதும் .!
ஏழைகளின் பசி தீர்க்க ஆசை
எனக்கு உணவுகள் வேண்டாம்
தானியங்கள் போதும் .!
தினம் விழி மூட மறுக்கும்
இரவுகளின் வறுமை போக்க ஆசை
எனக்கு மாளிகைகள் வேண்டாம்
மர நிழல்போதும் !
எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை
நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும்
இவை அனைத்தும் எனக்கு
தனித்தனியே வேண்டாம் .
கல்வி என்ற ஒன்றைக் கொடுங்கள்
கடந்துவிடுவேன் காலங்கள் பல
வென்றுவிடுவேன் தேவைகள் அனைத்தும் .!
எங்கும் எதிலும் இலவசம்
அதனால்தான் முயற்சிகள் இன்னும்
ஊனமாகவே இருக்கிறது
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
வாடகை கால்கள் , வாடகை சுவாசம் ,
வாடகை இரவுகள் , என இந்த இலவசங்களால்
வாழ்வின் ஒவ்வொரு கணங்களும்
உறக்கத்தில் தொலைத்த கனவாகவே கழிந்துவிட்டது .
எஞ்சிய நாட்களிலாவது விழித்துக்கொள்ளுங்கள் .
இல்லையென்றால் கெஞ்சிக் கேட்பதற்குக்
கூட அஞ்சி நிற்கும் நிலை வரலாம் .!....
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
27 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் - கல்வி கொடு இலவசங்கள் வேண்டாம் !!! :
நல்லாயிருக்கு நண்பா
//எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும் இவை அனைத்தும் எனக்கு தனித்தனியே வேண்டாம் . கல்வி என்ற ஒன்றைக் கொடுங்கள் கடந்துவிடுவேன் காலங்கள் பல வென்றுவிடுவேன் தேவைகள் அனைத்தும் .!////
அருமை நண்பரே..
ஒவ்வொரு வரியும் நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கிறது....
நீங்கள் தொகுத்து தரும் தகவல்கள் ஒரு ரகம். ஆனால் கவிதைகள் தனி ரகம். அருமை.
//எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை
நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும்//
மிகவும் யோசிக்க வைத்த வரிகள்.
//எஞ்சிய நாட்களிலாவது விழித்துக்கொள்ளுங்கள் .
இல்லையென்றால் கெஞ்சிக் கேட்பதற்குக்
கூட அஞ்சி நிற்கும் நிலை வரலாம் .!...//
உரக்க சொல்ல வேண்டிய வரிகள்...... நன்றி.....
கல்வி என்ற ஒன்றைக் கொடுங்கள்
கடந்துவிடுவேன் காலங்கள் பல
வென்றுவிடுவேன் தேவைகள் அனைத்தும் .!
நம்பிக்கை தரும் வரிகள்.
அருமை தோழா.
வாழ்த்துக்கள்.
//வாழ்வின் ஒவ்வொரு கணங்களும்
உறக்கத்தில் தொலைத்த கனவாகவே கழிந்துவிட்டது .
எஞ்சிய நாட்களிலாவது விழித்துக்கொள்ளுங்கள் .//
உண்மை. செதுக்கிய கவிதை.
அருமை நண்பரே!
இலவசம் பற்றிய கவிதை மிகவும் நன்று. நல்ல கருத்து உள்ள கவிதைகள் வாழ்த்துக்கள் நண்பா
ரொம்ப நல்லாயிருக்குங்க.
கவிதை அருமை அண்ணா ..!!
பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்றுத் தாருங்கள். அவனுடைய வாழ்நாள் முழுவதும் பசி இல்லாமல் இருப்பன்
மிக அருமையாக சொல்லியிருக்கீ்ங்க நண்பரே..! இலவசம் என்ற பெயரில் உழைப்பாளியை சோம்பேறியாக்கும் நபர்கள் இதை உணரட்டும்..! சமூகத்திற்கு அவசியமான சிந்தனை வரிகள்..! தொடரருங்கள் தங்கள் விழிப்புணர்வு கவிதைகளுடன்...
கருத்து ஆழம் மிக்க வரிகள்.. வாழ்த்துக்கள் நண்பரே..
நண்பா அருமையா இருக்கு உங்க கவிதை ..எல்லா வரிகளும் அருமை
உண்மையை சொல்லும் நல்ல கவிதை.
//இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்//
இந்த வரி ஒட்டாமல் தனித்து நிற்கிறது.அடுத்து வரும் வரிகள் கடந்த காலத்திலும், இந்த வரி எதிர் காலத்திலும் இருக்கிறது
எடுத்து விட்டால் கவிதை இன்னும் சிறப்புறும்.
நல்லாயிருக்கு சங்கர் :)
அருமை நண்பரே..
அருமை நண்பரே..
ஒவ்வொரு வரியும் நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கிறது....
//எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும்//
ஏனொ தெரியவில்லை இந்த வரிகள் என்னை கலங்க வைக்கின்றன...
வெல்டன் சங்கர்!
கல்வியின் மகிமை
//கெஞ்சிக் கேட்பதற்குக்
கூட அஞ்சி நிற்கும் நிலை வரலாம் .!....
கெஞ்சிக் கேட்பதற்குக்
கூட அஞ்சி நிற்கும் நிலை வரலாம் .!....//
இப்ப இருக்குறதே அந்தநிலமைதான் மற்றபடி உங்களின் கவிதை நாம் விதைத்து நம் சந்ததியனர் அறுவடை செய்யவேண்டும்.
"எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை,நான் வாழும் நாட்களை ஆண்டால் போதும் "
இது கிடைத்தால் உலகத்தையே ஆளலாம் நண்பா...நிறைய எழுதுங்கள் இது போல இன்னமும்...தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
அருமை
Arumaiyana kavithaikal
Arputham
Arumaiyana kavithaikal
Arputham
Post a Comment