நெருப்பு விழுங்கும் காதல் !!!

ரிமலைக்குழம்பாய் பலவருடம்...
இறுகிய பாறையாய் சில வருடம்....
இப்பாறை இனி உடையாது என்று
இறுமாப்புற்றிருந்த என்னுள் ,,,,,
நான் எதிர் பாரமால்
என் அருகில்
வந்து நீ உதிர்த்த
ஈரப்புன்னகையில் தெறித்து வீழ்ந்த
சிறு எச்சில் துளியில் ,
உடைந்து சிதறிப் போனது
என் கர்வம் !!!!
ப்படி !
உந்தன் ஒற்றைப் பார்வையில்
உருகிப்போனது இந்த பாறை ?

ப்படி !
உந்தன் வார்த்தையற்ற மவுனத்தில்
கரைந்து போனது என்
முரட்டுத்தனமான வார்த்தைகள்?

நெருப்புக் குழம்பின்
பாதம் கூட கடக்க மறுத்த
இந்த உள்ளத்தின் பாதைகளில்
இன்று மெல்லிய இதழ் கொண்ட
மலர்களின் சிரிப்பு சத்தம் .!!!ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.19 மறுமொழிகள் to நெருப்பு விழுங்கும் காதல் !!! :

Unknown said...

கவிதை நன்று!

Praveenkumar said...

கவிதை மிகவும் ரசிக்கும்படியாய உள்ளது. அருமை..! மலர்களால் எரிமலையையே அடங்கிப்போகும் இந்த பனிமலை எம்மாத்திரம்..??
நீ பார்க்கத்தான் எரிமலை பழகிப்பார்த்தால் பனிமலை..! அதிலிருந்து தெறிக்கும் துளிகளை என்றும் நான் நேசிக்கிறேன்..! உன் நட்பை போல்... அதுவும்
மென்மையானது தான்..

கே. பி. ஜனா... said...

ஆஹா கவிதை பிரமாதம்!.

கே. பி. ஜனா... said...

ஆஹா கவிதை பிரமாதம்!.

க ரா said...

கவிதை நல்லாருக்குங்க. சீக்கிரம் கல்யாணம் பன்னுங்க :-).

ஹேமா said...

காதலின் சக்தி அபாரம்.எதுவும் நடக்கலாம் எந்நேரத்திலும்.

'பரிவை' சே.குமார் said...

எப்படி எப்படியெல்லாம் எழுதமுடிகிறது சங்கர்.

பூவின் மீது பனித்துளியாய் உங்கள் கவிதை அருமை.

க.பாலாசி said...

//நான் எதிர் பாரமால்என் அருகில் வந்து நீ உதிர்த்த ஈரப்புன்னகையில் தெறித்து வீழ்ந்தசிறு எச்சில் துளியில் ,உடைந்து சிதறிப் போனது என் கர்வம் !!!!//

மிக அழகாய் வந்திருக்கிறது சங்கர்...

அருமை..அருமை...

Jeyamaran said...

*/எப்படி !
உந்தன் ஒற்றைப் பார்வையில்
உருகிப்போனது இந்த பாறை ?/*

என்னுடைய இருப்பு நெஞ்சையே ஒரு பெண் உருக்கிவிட்டால் பாறை உருகாதா என்ன!!

priyamudanprabu said...

நன்று!

vasu balaji said...

ப்ரமாதம்.
/நெருப்புக் குழம்பின் பாதம் கூட கடக்க மறுத்த இந்த உள்ளத்தின் பாதைகளில் இன்று மெல்லிய இதழ் கொண்ட மலர்களின் சிரிப்பு சத்தம் //

Unknown said...

மிகவும் அருமை.

ஜோதிஜி said...

ஹேமாவே சொல்லிட்டாங்க. வேற என்ன வேண்டும் சங்கர்.

உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. அதாங்க ஜனநாயக கடமை.

சுந்தரவடிவேலன் said...

அழகிய கவிதை

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை...

Unknown said...

கவிதை ஆக்கம் அருமை.
வாழ்த்துக்கள் சங்கர்.

நிலாமதி said...

காதல் மகத்தான் சக்தி....முழுமையான் இதயத்தை பெண்ணிடம் கொடுத்தால் ,
எதோ ஒருவகையில் உடைத்து விடுவாளாம் . உடைந்த உள்ளத்தை பெண்ணிடம்,கொடுத்தால் முழுமையாக்கி தருவாளாம். வாழ்த்துக்கள்.

சுசி said...

கடைசி அசத்தல்..

முனியாண்டி பெ. said...

மிகவும் அருமை
http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html