அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நம் அனைவரின் மனதிலும் சில எண்ணங்கள் அவ்வப்பொழுது மலர்ந்து நாம் எதிர்பாராமல் உதிர்ந்தும் போய்விடுகிறது. அது போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயல்களும் ஏதேனும் ஒரு காரணத்தால் பலருக்கு சரியாக அமைவது இல்லை. காரணம் என்னவென்று பலரிடம் கேட்டால் இதை நான் பின்பு செய்துக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன் . அல்லது எனக்கு நேரம் இல்லை என்று இப்படி பல காரணங்கள் ஒவ்வொருவரின் பதில்களிலும் கரை புரண்டு ஓடும்.
நாம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் யாரோ ஒருவரின் உதவியையோ அல்லது யாரோ ஒருவரின் ஆலோசனை வேண்டியோ நமது நேரத்தை அந்த காத்திருப்பின் தருணங்களில் நழுவவிட்டு இறுதியில் தோல்வி என்று தலையில் அடித்துகொண்டிருக்கிறோம். இதே
எண்ணம் பலருக்கு தங்களின் குழந்தைகளின் விசயத்திலும் தொடரத்தான்
செய்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு அம்மா என்று உச்சரிக்க கற்றுக்கொடுக்க பலரின் ஆலோசனை வேண்டி காத்திருக்கிறார்கள் இன்னும் நம்மில் பலரின் பெற்றோர் !. இதுபோன்ற தவறுகளை தாங்களே தெரிந்தே செய்துவிட்டு பின்பு தங்களின் குழந்தைகளின் திறமைகளுக்கு மேல் பல குறைகளை வீசிக்கொண்டி இருக்கிறார்கள் .
இப்படித்தான் ஒரு முறை தத்துவமேதை அரிஸ்டாட்டிலைத் தேடி ஒரு இளம் வயதுப் பெண் வந்திருக்கிறாள். அப்பொழுது அவளிடம் வந்த காரணத்தை அரிஸ்டாட்டில் கேட்டபொழுது அதற்கு பதில் கொடுத்த அந்த பெண் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எப்பொழுதில் இருந்து நான் என் குழந்தைக்கு நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்க வேண்டும் என்று கேட்டு செல்வதற்காகவே வந்ததாக கூறியிருக்கிறார். இதைக் கேட்ட தத்துவமேதை அரிஸ்டாட்டில் இப்பொழுது உங்களின் குழந்தைக்கு வயது என்ன ஆகிறது என்று கேட்க, அந்த பெண்ணோ 6 வயது ஆகிறது என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பதில் கொடுத்த தத்துவமேதை அரிஸ்டாட்டிலோ இப்பொழுதே உனது குழந்தையின் ஆறு வருடத்தை
வீணாக்கி விட்டாய் இன்னும் தாமதிக்காமல் உடனே சென்று நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்கு என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.
டிஸ்கி : இதுபோன்று இன்னும் எத்தனையோ பெற்றோர்கள். தங்களின் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை சொல்லிக் கொடுப்பதற்கு கூட இன்னும் பலரின் அனுமதி வேண்டியும் ஆலோசனை வேண்டியும் காத்திருக்கின்றனர். எப்பொழுது குறையப்போகிறதோ இதுபோன்ற எதிர்பார்ப்புகளிலும், காத்திருப்புகளிலும் தெரிந்தே தங்கள் குழந்தைகளின் அறிவை தொலைக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை.!?
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
23 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 36- கால தாமதம் (அரிஸ்டாட்டில்) !!! :
நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் காலந்தாழ்த்திகளாகத்தான் இருக்கோம்
இதை பார்த்தவுடன் என் முதல் பதிவு தான் நியாபகம் வருது "காலந்தாழ்த்திகள் கிளப்"
http://jillthanni.blogspot.com/2010/04/late-club.html
ஒரு முறை படித்து பாருங்கள்
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றிகள்
பகிர்வுக்கு நன்றிகள்
தலை தங்களின் ஓய்வில்லாத தேடலுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நிறைய எழுதுங்கோ. தத்துவம் அருமை.
இப்போது தான் குழந்தைகளின் அறிவு தேடல் முதல் வயதிலிருந்தே பெற்றோரால் திணிக்கப் பட்டு வருகிறதே,
தங்கள் குழந்தைகளுக்கு அம்மா என்று உச்சரிக்க கற்றுக்கொடுக்க பலரின் ஆலோசனை வேண்டி காத்திருக்கிறார்கள்//
இன்னும் நிறைய கற்றுகொடுக்க வேண்டும் சித்தப்பா, பெரியப்பா, இப்படி சொல்லி தரவேண்டும் அங்கள் என்று தான் சொல்லிதராங்க.
நல்ல பயன்படும் தகவல்
பயனுள்ள தகவல்கள் நண்பரே..! மிகவும் சுருக்கமாக சொல்ல வந்த செய்தியை சிறப்பா சொல்லியிருக்கீங்க..!
பேபி ஸ்கூல்ல சேர்த்தா சொல்லித்தருவாங்கன்னு விட ஆரம்பிச்சாச்சே:)
பருவத்தே பயிர் செய்ன்னு சும்மாவா சொன்னாங்க..
மென்பொருள், கணினி, தரவிறக்கம், சொடுக்குதல் என்று தமிழை வளர்க்கப் பாடுபடும் அதே சமயம் டிஸ்கி என்ற
வார்த்தையை எல்லா பதிவர்களும் பயன் படுத்துகிறார்கள். "டிஸ்கி" இதுக்கு அர்த்தம் தான் என்ன? jayadevdas2007@gmail.com
Good
குழந்தைகளின் அடிப்படை அறிவு வளராமலே இன்னும் இருக்கிறது...அது பெருசாயும் தொடர்கிறது...நல்ல பதிவு
உண்மை தான்..குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விசயத்தினை சொல்லி கொடுத்து வளர்க்கவேண்டும்...பகிர்வுக்கும் நன்றி...
நல்ல பதிவு
Excellent Post.
Disky = Disclaimer :)
உங்கள எத்தனையோ தடவை ஃபோலோ பண்ணினாலும் என் டாஸ்போர்டில் எதையுமே காட்டுதில்லை. இப்ப 10வது தடவையாக இணைக்கிறேன். என்ன நடக்கறதுன்னு பார்க்கலாம். ஒவ்வொரு தடவையும் தமிழ்ஷல போய்த் தான் படிக்க வேண்டி இருக்கு, =|
தங்களின் ஓய்வில்லாத தேடலுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நிறைய எழுதுங்கள் பனித்துளி.வாழ்த்துக்கள்
நல்ல சுவை
பகிர்வுக்கு நன்றிகள்
//உடனே சென்று நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்கு //
காலத்திற்கு ஏற்ற ஆலோசனை
உங்கள் பதிவுகள் அனைத்துமே மற்றவற்றிலிருந்து தனிப்பட்டு நிற்கிறது.
உங்கள் தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் எனது பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சங்கர்.
கலக்கிட்டேங்க சங்கர்.... அருமையான எழுத்து நடை.... வாழ்த்துக்கள்.
இப்போ எல்லாம் பிறந்த உடனேயே ஏதாவது class லே சேர்த்து விடறாங்களேன்னு நினைச்சேன். இப்போ தான் தெரியுது எல்லாம் அரிஸ்டாட்டில் உபயம்னு
Post a Comment