அனைவருக்கும் வணக்கம் . தினம்தோறும் நாம் ஒவ்வொருவரும் பல ஆயிரக் கணக்கான வார்த்தைகளை நம் இதழ்களில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம் . அதில் கோபத்துடன் பல வார்த்தைகள் , மகிழ்ச்சியுடன் பல வார்த்தைகள் , காதலில் பல வார்த்தைகள் , காமத்தில் பல வார்த்தைகள் என இப்படி அடுக்கிகொண்டேப்போகலாம் . எது எப்படி இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் பல வார்த்தைகளில் பல வினோதங்கள் மறைந்து இருக்கிறதுஅதை பற்றி ஆராயத் தொடங்கினால் இது போன்று இன்னும் எத்தனையோ ஆயிரம் பதிவுகளை அதற்காக செலவிட நேரிடலாம் !. சரி அப்படி என்றால் எதற்காக இந்த பதிவு என்ற உங்களின் வினாவிற்கான விடை இதோ தொடங்குகிறது .
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் பல காரணங்களும் , கதைகளும் இருக்கின்றது . அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது பாலின்ட்ரோம் ( Palindrome ) .சரி இந்த பாலின்ட்ரோம் ( Palindrome ) என்றால் என்ன அர்த்தம் முதலில் அதைப் பாப்போம் . எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ ( Palindrome ) என்பதாம் .
தமிழை விட ஆங்கிலத்தில்தான் இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம்கள் அதிகமாக பயன்படுத்தி பலர் உரையாடி இருக்கிறார்கள் . இதைவிட இதில் இன்னும் என்ன சிறப்பு என்றால் . தமிழில் நாம் இதுபோன்ற வார்த்தைகளை கண்டு பிடிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதரணமாக வேறு எந்த வார்த்தைகளின் கலப்புமின்றி இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை வைத்து கவிதையே எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!. இதோ அந்த கவிதையின் வரிகள் சில உங்களுக்காக But no repaid diaper on tub! இந்த கவிதை உலகத்தில் அதிகமான ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
இப்படிதான் ஒரு முறை பிரிட்டனில் கார் பந்தய வீரர் ஒருவரிடம் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து பேட்டி எடுக்க சென்றிருந்தார்கலாம் .அப்பொழுது அவரிடம் பல கேள்விகளை வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக வீசி இருக்கிறார்கள் நம் பத்திரிக்கையாளர்கள் . அதற்கு அவர் பதில் அளித்து முடிக்கும் வரை எந்த மாற்று வார்த்தைகளும் பயன் படுத்தாமல் அணைத்து பதில்களையும் பாலின்ட்ரோம் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் அளித்திருக்கிறார் . அதைப் பார்த்து அணைத்து பத்திரிக்கையாளர்களும் வியந்து போனார்களாம் .
இதோ அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளும் , பதில்களும் .!
அந்த வீரரின் பெயர் ராட்காட் . இவர் பிரிட்டனில் பிறந்தவர் . இவரின் பிறப்பிலே ஒரு வினோதம்தான் . ஆம் இவரின் பிறந்த தேதியே 9 / 3 /39 - ( Palindrome ) பாலின்ட்ரோம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சரி இனி அவரிடம் கேட்டகப்பட்டக் கேள்விகளுக்கு வருவோம் .
உங்களுக்கு எந்த கார் பிடிக்கும் என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Race Car என்று பதில் அளித்து இருக்கிறார் .
அடுத்தக் கேள்வி ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரணக் கார் வாங்க நேர்ந்தால் எந்த வகையானக் காரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்களாம் அதற்கு அவர் என்று ' A Toyota ' என்று பதில் அளித்து இருக்கிறார் .
அடுத்தக் கேள்வி நீங்கள் சினிமா பார்க்க விரும்பினால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்பிர்களா ?. இல்லை வீட்டில் இருந்து டீவியில் சினிமா பார்ப்பீர்களா ? .என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Same nice Cinemas என்று பதில் அளித்து இருக்கிறார்.
இது மட்டும் இல்லை இது வரை எந்த மாநிலத்தின் மொழியின் பெயரில் இல்லாத சிறப்பு மலையாளத்திற்கு ( MALAYALAM ) இருக்கிறதாம் . எப்படிஎன்றால் ஆங்கிலத்தில் MALAYALAM என்பதே ஒரு ( Palindrome ) பாலின்ட்ரோம் அடிப்படையில்தான் வைத்திருக்கிறார்கள். சந்தேகம் என்றால் வாசித்துப்பாருங்கள்.
தமிழில் அதிகமானவர்களுக்கு தெரிந்த ஒரே பாலின்ட்ரோம் ( Palindrome ) வார்த்தை விகடகவி என்பதுதான் . நானும் முயற்சித்து சில வார்த்தைகளை தமிழில் இணைத்திருக்கிறேன் . இன்னும் இதுபோன்று பல வார்த்தைகளை உருவாக்கலாம் ஆனால் பல வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும் .
இதுபோன்ற உங்களுக்குத் தெரிந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை தெரியப்படுத்தலாம் . இன்னும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
31 மறுமொழிகள் to ! இன்று ஒரு தகவல் 37- அதிசய வார்த்தைகள் (பாலின்ட்ரோம்) !!! :
nice information shankar
நல்ல அரிய தகவல்கள்...
பகிர்வுக்கு நன்றி..
தமிழில் இத்தனை பாலின்ட்ரோம் வார்த்தைகளா? வெரி இன்ட்ரஸ்டிங்.
தமிழில் இவ்வளவு பாலின்ட்ரோம்! வார்த்தைகள் உள்ளதா!!! பல அறிய ஆச்சிரியமான தகவல்கள் தந்துள்ளீர்கள்.
Palindrome என்பதற்கு தமிழில் என்ன நண்பரே?
பகிர்வுக்கு நன்றி..
very interesting post!!
பயனுல்ல பாலின்ட்ரோம் !
அறியாத தகவல்கள்
இவ்வளவு வார்தைகள் இருக்க. இதை பதிவ போட்டதற்கு ரொம்ப நன்றி நண்பரே
இதோ ஒரு தமிழ் பாலின்ட்ரோம்:
தேடுதே
அறிவுக்கு நல்ல விருந்து
வித்தியாசமான பதிவு
தொடருங்கள்!!!
அரிய தகவல்கள் - தமிழில் இத்தனை இருக்கிறதா - இன்னும் தேடுவோம் - கிடைக்கும்
நல்வாழ்த்துகள் சங்கர்
நட்புடன் சீனா
அசத்துறிங்க சங்கர். ரேடியோக்கு ஒரு தென்கச்சு சுவாமிநாதன்னா , வலை உலகத்திற்க்கு ஒரு பனித்துளி சங்கர் :).
அரிய தகவலை தந்துள்ளீர்கள்.
பாலின்ட்ரோம். இவ்வளவு விசயங்கள் அடங்கிய வார்த்தை என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
பயனுள்ள பகிர்வு.
வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்
அடி சக்கை. அருமை
இதன் தமிழ் பதம் மறந்து விட்டது 5ம் வகுப்பு தமிழ் தேர்தலில் நான் திகதி மற்றும் விகடகவி எழுதியதாக ஞாபகம்..
அறியாத தகவல்... பகிர்விற்கு நன்றி..
இன்னும் அதிக விவரங்களுக்கு - http://norvig.com/palindrome.html
:-)
Nice .. voted
நல்ல பகிர்வு.
‘மாறுமா’. மாறுமோ என இருக்கிறது. கவனியுங்கள்:)!
Nice Post Shankar. Thanks for the information on Palindrom.
நல்ல அரிய தகவல்கள்...
பகிர்வுக்கு நன்றி..
அருமை அருமை
பனித்துளிக்கு வாழ்த்துகள்
1) 'திருமால் மாருதி'
2) " நீ வாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ"
-- நன்றி :மின்தமிழ்
இது எப்படின்னு சொல்லுங்க
பாலின்ட்ரோம் தமிழ் வார்தைகள் சூப்பர் தல...! எங்கே கண்டுபிடிட்சிங்க... உங்க ஆய்வு அருமை
நானும் படிக்கும் போதே தமிழில் விகடகவி என்றுபெயர் வந்தது என்று நினைத்தேன் நீங்க சொல்லிட்டிங்க....
ஒரு கட்சியின் சார்ந்த ஒரு ஊர் இருக்கிறது. 'கமுதி' இத அப்படியே திருப்பி போட்டு பாருங்க தெரியும்....(இது பாலின்ட்ரோம் இல்லை)
நன்றி..! வாழ்த்துகள்
Nallan - a tamil name
NALLAN - a tamil name
MAYAM, MAHAMAHAM.....
தமிழை நேசிக்கும், சுவாசிக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
Remember a reading a thirupugazh song (in sujatha's posts in weekly mag) like
maayaa yaamaa
பாலிண்ட்ரோமை தமிழில் இருவழி ஒக்குஞ்சொல் என்பார்கள். அது பற்றி நான் இட்ட பதிவு இதோ: பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/palindrome.html
ஒரு உதாரணம்:
யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா
தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா
காயாகாழீ யாகாயா
தாவாமூவா தாசாகா
ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ
காசாதாவா மூவாதா
நீவாவாயா காயாழீ
காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா
ழீயாகாயா வாவாநீ
யாகாலாமே யாகாழீ
யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா
ழீகாயாமே லாகாயா
மேலேபோகா மேதேழீ
காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா
ழீதேமேகா பொலேமே
நீயாமாநீ யேயாமா
தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா
மாயாயேநீ மாயாநீ
நேணவரா விழயாசைழியே
வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே
யேழிசையாழவி ராவணனே
காலேமேலே காணீகா
ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ
காணீகாலே மேலேகா
வேரியுமேணவ
காழியொயே
யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே
யேயொழிகாவண
மேயுரிவே
நேரகழாமித யாசழிதா
யேனனியேனனி
ளாயுழிகா
காழியுளானின
யேனினயே தாழிசயா
தமிழாகரனே
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான தொகுப்பு சங்கர். நல்ல பகிர்வு.. நன்றி சங்கர்.. நிறைய தகவல்கள் அறிய தந்துள்ளீர்கள். இதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.
Post a Comment