வாழும் நாட்களில் வாழாமல்
வாழ்வின் எல்லைவரை ஓடிவிட்டு
இன்று வாழும் கணங்கள் தீர்ந்துபோன
பொழுதுகளின் விளிம்பில் நின்று
குவிந்து கிடக்கும் பிணங்களில்
தனது உறவுகளின் அடையாளங்களை
ஆவேசமாய் தடவித் தடவி தேடும்
ஒரு பார்வையற்ற பெண்.
நெருப்பைக் குடித்து
தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருகும்
இவளின் இந்த தனிமை .
அனைத்தும் இருந்தும்
எப்பொழுதும் குறை குடமாய் தளும்பி குதிக்கும்
எதோ ஒன்றின் மேலான
சொல்ல முடியாத சோகம் சுமந்த
அதே நாட்கள்
எதுவுமற்ற இன்றைய வெறுமையிலும்
இவளுடன் தொடர்கிறது .......
இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்.
குடிசைகளில் சொருகப்பட்டிருக்கும்
ஓலைகளின் யதார்த்த உரசலில் தெறிக்கும் சத்தத்தில்.
மீண்டும் மெல்ல எட்டிப் பார்த்துக்கொள்கிறது
தான் பார்வையற்றவள் என்பதையும் மறந்து
இவளின் எஞ்சிய உறவுகளின்
மரண பயம்....!!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
23 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள் - ஊமை விழிகள் !!! :
//இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்.//
Excellent Kavithai.
//நெருப்பைக் குடித்து தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் இவளின் இந்த தனிமை.//
பார்வையற்றவரின் தனிமையின் கொடுமையை உணரவைக்கும் நெஞ்சை வருடும் வரிகள்....
படித்தபின் மனம் கனத்துப்போனது..!!
கவிதை சூப்பரப்பு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கவிதை அருமை ..!!
குடிசைகளில் சொருகப்பட்டிருக்கும்
ஓலைகளின் யதார்த்த உரசலில் தெறிக்கும் சத்தத்தில்.
மீண்டும் மெல்ல எட்டிப் பார்த்துக்கொள்கிறது
தான் பார்வையற்றவள் என்பதையும் மறந்து
இவளின் எஞ்சிய உறவுகளின்
மரண பயம்....!!!//
கவிதை அருமை ..!!
அருமைங்க, ஒரு பார்வையற்ற பெண்ணின் நிலையை உணர முடிகிறது
//இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்.//
நல்ல வரிகள்
//குடிசைகளில் சொருகப்பட்டிருக்கும்
ஓலைகளின் யதார்த்த உரசலில் தெறிக்கும் சத்தத்தில்.
மீண்டும் மெல்ல எட்டிப் பார்த்துக்கொள்கிறது
தான் பார்வையற்றவள் என்பதையும் மறந்து
இவளின் எஞ்சிய உறவுகளின்
மரண பயம்....!!!//
யதார்த்தமான கற்பனை..
நல்ல பதிவு
இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள். ....!!!!
அட்டகாசமான கற்பனை...!! அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!
கவிதைகள் நல்லா இருக்கு நண்பரே..
அருமையாக இருந்தது நண்பரே!!
ம்ம்.நல்லாருக்கு
இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்.
அருமை
மிக அருமையான வரிகள் சங்கர்
மிகவும் ரசித்தேன்
டெம்லேட் மாற்றீனீர்களா?
என் கணிணியில் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக அருமை....தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
///இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்////
வலிமை மிக்க வரிகள்..
நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
நன்று! நன்று! தொடர்ந்து எழுதுங்கள் சங்கர்!
இரவின் இறுதி சொட்டு..கிரேட்.
நல்லாருக்கு சங்கர்.
அருமையான உணர்வுகள். மனதை ஒரு நொடி கணக்க செய்யும் வார்த்தைகள்...
அருமையான வரிகள் இரவின் இறுதி சொட்டு..... வாழ்த்துக்கள்....!
கவிதை எப்போதும் அட்டகாசமா எழுதுறிங்க....அதை புத்தகமா போடா பாருங்கள்...உங்க கவிதை என்றும் அருமை வாழ்த்துகள்
Post a Comment