இன்று ஒரு தகவல் 39 - அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!!

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .

ரு காலத்தில் சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள் இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் . அதைப் பார்த்து வியந்துபோன ஒரு வழிப்போக்கன் அந்த நாட்டவரிடம் எதற்க்காக ஒவ்வொரு குதிரையையும் ஒரு கோணத்தில் வடிவமைத்து இருகிறிர்கள் என்றுக் கேட்க அதற்கு பதில் தந்த அந்த நாட்டவர் .

குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம் என்றும் !

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம் என்றும் !

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம் என்றும் பதில் அளித்தாராம் . இதற்குப் பெயர்தான் பேசும் சிலைகளோ என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கடந்து சென்றானாம் அந்த வழிபோக்கன் .

மிழில் ஒரு பல மொழி சொல்வார்கள் வாத்தியார் புள்ள மக்கு , போலிஷ் புள்ள திருடன் என்று அதுபோல் உலகத்தில் அனைவரையும் மிகவும் வியப்பில் ஆழ்த்திய உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை வடிவமைத்த வால்டிஸ்னி எலியைக் கண்டால் நடுங்கிவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . இவர்தான் இப்படியென்றால் இவரையும் மிஞ்சியவர் ஒருவர் இருந்தார் . இன்றும் அனைவர்க்கும் பெரும் சவாலாக விளங்கும் கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின் உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி கொண்டவராம் .

லகத்தில் இப்பொழுதெல்லாம் இயற்கையாக இறப்பவர்களைவிட செயற்கையாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் அதிலும் விபத்துகளினால்  கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது . இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில் ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் .

நாம் என்னதான் செம்மொழி தமிழ் மொழி என்று மாநாடும் போட்டு பேசினாலும் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி பதினான்காவது இடத்தில்தான் இருக்கிறதாம் .

ம் எல்லோருக்கும் பல பல்கலைக் கழகங்கள் பற்றி தெரியும் . ஆனால் எப்பொழுது தொடங்கப் பெற்றது என்றுக் கேட்டால் யாருக்கும் தெரியாது .அதிலும் உலகத்தில் பழமைவாய்ந்த பல்கலைக் கழகம் எது என்றுக் கேட்டால் அவளவுதான் . இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் உலகின் மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம் மொரோக்கோ நாட்டின் கருயின் நகரில் இருக்கிறது . இந்தப் பல்கலைக் கழகத்தை 859-லே தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ம் அனைவர்க்கும் குவைத் என்ற ஒரு நாட்டை நன்றாகத் தெரியும் . அங்கும் நமது இந்தியர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் . குவைத் என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களில் யாரிடமாவதுக் கேட்டால் பலருக்கு பதில் தெரியாது . இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள் குவைத் என்றால் அரபி மொழியில் சின்னக் கோட்டை என்று அர்த்தமாம் .

ன்ன நண்பர்களே இன்றையத் தகவல்கள் அனைத்தும் உங்களை மகிழ்வித்திருகும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

18 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 39 - அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!! :

செல்வா said...

///உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிகிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் //
அப்படின்னா சனிக்கிழமை கொஞ்சம் கவனமா இருக்கணும் ..!!

anuthinan said...

அண்ணே பதிவில் தகவலுக்கும் சுவாரசியதுக்கும் பஞ்சமே இல்லை!!!

தொடரவும் உங்கள் சேவை

Unknown said...

நாளந்தா பல்கலைக்கழகம் இதற்க்கும் முன்னால் இருந்தது. உலகின் முதல் பல்கலைக்கழகம் நாளந்தா

vasu balaji said...

பகிர்தலுக்கு நன்றி. நியூட்டன் விபரம் புதுசு:)

தமிழ் உதயம் said...

நிறைய தகவல்கள். நிறைவான தகவல்கள்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

மதுரை சரவணன் said...

தகவல் அருமை. வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

நிறைவான தகவல்கள் நிறைய..!

Anonymous said...

நல்ல தகவல்....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தகவல்களுக்கு நன்றி...!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

beer mohamed said...

அதிரடி செய்தி சொல்வது
அண்ணே நேற்று காமராஜ் பிறந்தா நாள், இன்று கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து இதை பற்றி இன்று ஒரு தகவலில் போட்டு இருக்கலாமே

Geetha6 said...

nice.
thanks!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நல்ல தகவல்...

siragu said...

தகவல்கள் எங்க இருந்து சுட பட்டது.மிகவும் நல்ல தகவல்கள்.

http://rkguru.blogspot.com/ said...

அருமையான தகவல்...வாழ்த்துகள் சங்கர்...

Mohamed Faaique said...

//சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின் உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி கொண்டவராம் .///
ஆனால் உலகம் என்றும் அவரை நினைவில் வைத்திருக்கிறது..

குவைத்தில் மட்டுமல்ல , அமீரகத்திலும் இந்தியர்கள்தான் அதிகம்..
36 % இந்தியர்கள், 8 % அமீரகத்தவர்கள்,

பிரியம் said...

நன்றாக இருக்கு நண்பா உன்னது தொகுப்பு ...வாழ்த்துக்கள்