பனித்துளிசங்கர் கவிதைகள் - சாயம்போன கனவுகள் !!!


 வ்வொரு இரவின் நிசப்தத்திலும்
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,
 
தாய் மடியை நினைவூட்டும் 'மெமரிபோர்ம்' மெத்தையும்
'கூஸ்பெதர்' தலைஅணையும்
இப்போதெல்லாம் என்னை ஏனோ
முள்ளாய் மாறி தினம் தினம்
என்னை வதம் செய்கிறது ,,..
  
தூக்கம் வராமல் உருண்டு படுத்து
ஏதோ ஒருநொடியில் உறங்கிப் போனாலும்
நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில்
என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இது எனது மீள் பதிவு !
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

21 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள் - சாயம்போன கனவுகள் !!! :

க ரா said...

நல்லா இருக்கப்பு .. பின்றீங்க...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை நண்பரே!@
- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/

Chitra said...

ஆஹா... மீண்டும் ஒரு கலக்கல் கவிதை.... அருமை!

Unknown said...

//தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்//

அருமை நண்பரே....

Anonymous said...

சும்மா நச்சுனு இருக்கு..
செம கலக்கல் கவிதைகள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

எல் கே said...

/என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,//

அருமை

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே....

Kousalya Raj said...

//தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,//

நல்லா இருக்குங்க...

அருண் said...

ரொம்ப நல்லாயிருக்கு,உணர்ந்து எழுதிய வரிகள்.

சசிகுமார் said...

சூப்பர் தல கலக்குங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான வரிகள்..
கனவிலும் கவிதை.. ஹ்ம்ம்.. :-)))

KUTTI said...

very nice....

mano

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...

அருமையான வரிகள்..!

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க சங்கர்... ரசித்தேன்...

virutcham said...

good

Sugirtha said...

நல்லா இருக்கு :)

மதுரை சரவணன் said...

//என் தேகம் தந்த சூட்டில்
சூடாக்கி போயிருந்த தலையணையை
உன்மார்பு என்றெண்ணிப்புதைந்து
கொள்ளும்போது நெற்றிப்பொட்டில்
அறையும் கரைந்து விட்ட கனவுகளின் சாயம்,,,,,,
//

அருமை, வாழ்த்துக்கள்

அருமை

வெங்கட் நாகராஜ் said...

கனவிலும் அழகிய கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.

Shri ப்ரியை said...

தனிமை தவிப்பின் வெளிப்பாடு ரொம்ப அழகான வார்த்தை நயம்....
அருமைங்க....

நெருப்புப் பூ said...

மெய்யன்பை உள வலியை மீச்சிறப்பாய் எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.

நன்று.

தொடர்க.