அனைவருக்கும் வணக்கம், இந்த நூற்றாண்டில் நாம் ஒவ்வொருவரும் படிக்கும் காலங்களில் உலகத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைகளிலும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஏதோ ஒரு பாடல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். காட்டப்படும் அந்த பாடலோ அல்லது சிந்தனையோ மிகவும் ஒரு சிறந்த கருத்தை சொல்லும் ஒன்றாகத்தான் இருக்கும் . அந்த வகையில் நாம் அனைவருக்கும் அறிமுகமான இரண்டு வரிகள்
''நாடு உனக்கென்ன செய்தது என்று கேட்காதே.
நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்.''
இந்த வரிகளை நம்மில் தெரியாதவர்கள் அதிகம் இருக்க இயலாது அந்த அளவிற்கு சிந்தனை விதைகளை உலகத்தில் உள்ள அனைவரின் இதயத்திலும் விதைத்து சென்றது என்று கூட சொல்லலாம் இந்த இரண்டே வரிகள். சரி இந்த இரண்டு வரிக்கும் இன்று ஒரு தகவலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் அனைவரும் கேட்க நினைப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது சொல்கிறேன்.
இந்த இரண்டு வரிகள் இன்னும் அமெரிக்க சுவர்களில் கதவிலக்கத்தைபோல் எங்கு பார்த்தாலும் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த வரிகளின் சிந்தனை எந்த அளவிற்கு உலகத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்திருக்கக் கூடுமென்று .! சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த வரிகளை எழுதியது யார் என்று நம்மிடம் கேட்டால் நம்மில் பலருக்குப் பதில் தெரியாது. இதுவரை உலகத்தில் பலருக்கு இந்த வரிகளை சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜான்கென்னடிதான் எழுதினார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுநாள் வரை நம்மில் பலரும் அப்படிதான். ஆனால் இந்த வரிகளை உண்மையாகவே எழுதியது ஜான்கென்னடி இல்லை. அவர் இருந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது புதிய எல்லைகள் என்ற கட்டுரையில் ஜிப்ரான் என்ற ஒரு புரட்சிக் கவிஞன் எழுதிய வரிகள்தானாம் இவை. இன்னும் எத்தனை பேருக்கு இதைப் பற்றி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இத்துடன் மட்டும் இல்லை அவரின் வரிகளை வாசிக்கும் ஒவ்வொரு உள்ளத்தி லும் நெருப்பாய் சில உணர்ச்சிகள் எழுவது உண்மைதான்.
'' கோழையாய்
அஞ்சி வாழ்வதைவிட
கொடுமைக்கெதிராய்
வாளேந்தி
மடிவதே மேல் !
ஆழ்கிணற்றுக்குள்
அடங்கிவாழும்
தவளையை விட -
தீப்பிழம்போடு
போராடி மடியும்
விட்டிலே
சிறந்ததல்லவா ? ''
இந்த புரட்சிக் கவிஞனை படிக்கும் பொழுதெல்லாம் இரண்டு நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது
என்ன நண்பர்களே..! இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
13 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 40 - ஜிப்ரான் கவிதைகள் அறிமுகம் !!! :
போன வாரம் தினமணியில் ஒரு கார்டூன் பார்த்தேன், தமிழர்கள் தமிழகத்தில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களையும் கண்டுகொள்ளாமல், மழையில் நிற்கும் எருமை மாடுகள் மாதிரி காட்டி இருந்தார்கள்.
http://www.dinamani.com/edition/galleryview.aspx?galleryid=JUiWpEsAXis%3d&keepThis=true&TB_iframe=true&height=550&width=590
பணத்துக்கும், பிரியாணி பொட்டலம் சாராயம் இதற்காக ஓட்டுப் போடும் இவர்களா இந்த மாதிரி வரிகளைப் படித்து வீறு கொண்டு எலப் போகிறார்கள்? தூ..
புதுமையான தகவல்கள்..! அருமை நண்பா..!
நிச்சயம் பயனுள்ள தகவல் ..!!
நல்ல பகிர்வு
நல்லப் பதிவு . வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு...
பயனுள்ள தகவல் ..!
புதுமையான தகவல்கள்..! அருமை நண்பா..!
'' கோழையாய்
அஞ்சி வாழ்வதைவிட
கொடுமைக்கெதிராய்
வாளேந்தி
மடிவதே மேல் !
ஆழ்கிணற்றுக்குள்
அடங்கிவாழும்
தவளையை விட -
தீப்பிழம்போடு
போராடி மடியும்
விட்டிலே
சிறந்ததல்லவா ? ''
சரியான வார்த்தைகள்.
MIKA ARUMAYAANA PATHIVU. UNNMAI THERIYA VANTHATHU,NANTRI.
'' கோழையாய்
அஞ்சி வாழ்வதைவிட
கொடுமைக்கெதிராய்
வாளேந்தி
மடிவதே மேல் ! //
உணர்வுமிக்க வரிகள்... ஒரு புரட்சிக்கவிஞனை... அறிமுக படுத்திய தங்களுக்கு மிக்க நன்றிங்க.
நல்லா இருக்கு......
அன்புடன் வணக்கம்
நிஜமாக இந்த வாசகத்தை சொன்னது ஜான் கென்னடி என்றுதான் இன்று வரை நினைத்தேன் ஏனென்றால் இதை எங்களுக்கு பள்ளியல் 1969 இல் சொல்லிகொடுத்த ஆசரியர் கென்னடி என்றுதான் சொன்னார்.. உங்கள் பதிவை படித்த பின்புதான் உண்மை தெரிந்தது நன்றி நண்பரே.!!வாழ்த்துக்கள்!!
migavum nandraga irukkirathu.
namma kavignar kannadhasanin
kavithaigalil illatha oru
thaththuvama?velinaattukku
poivitteergal?
Post a Comment