- Home
- ஈழம்
Panithuli shankar Kavithaigal - தமிழ் ஈழம் கவிதைகள்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/22/2013 08:33:00 PM
குறிச்சொல் Eelam Poems, Kavithaigal New, new poems in tamil 2014, Tamil New Kavithai, ஈழம், கவிஞர், கவிதைகள், புதியக் கவிதை
குறிச்சொல் Eelam Poems, Kavithaigal New, new poems in tamil 2014, Tamil New Kavithai, ஈழம், கவிஞர், கவிதைகள், புதியக் கவிதை
உயிரின் வலி கவிதை - கவிஞர் பனித்துளி சங்கர்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/19/2013 08:52:00 PM
குறிச்சொல் Haikkoo, PANITHULI SHANKAR KAVITHAIGAL, Tamil Kavithaigal, ஈழம், கவிதைகள், தமிழன், மரணம், ஹைக்கூ
குறிச்சொல் Haikkoo, PANITHULI SHANKAR KAVITHAIGAL, Tamil Kavithaigal, ஈழம், கவிதைகள், தமிழன், மரணம், ஹைக்கூ
ஈழம் கவிதைகள் - தமிழா தமிழா
18
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/11/2010 05:29:00 PM
குறிச்சொல் EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila, இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள்
குறிச்சொல் EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila, இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள்
தமிழா ! தமிழா !
இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!!
உன் உறவுகள் அழிந்தது போதாதா..??!
அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!!
ஈழம் கவிதைகள் - சிறைப்பட்ட சுவாசங்கள்
23
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
8/23/2010 12:12:00 PM
குறிச்சொல் EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila, இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள்
குறிச்சொல் EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila, இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள்
கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!
உடல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
முள்வேலி முகாம்களில்
பனித்துளி சங்கர் கவிதைகள் - கானல் நீர் தமிழன் !!!
16
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
7/16/2010 03:31:00 PM
குறிச்சொல் Eelam, KAVITHAIGAL, PANITHULI SHANKAR KAVITHAIGAL, ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள், புனைவு
குறிச்சொல் Eelam, KAVITHAIGAL, PANITHULI SHANKAR KAVITHAIGAL, ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள், புனைவு
கானல் நீர் !!!
எதிரியின் தோட்டாவிற்கு
தப்பித்து ஓடிய வழிகளில்
தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது
எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !.
என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி
தூரத்தில் தெரிந்த
கானல் நீரின் மீது வைத்த
நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது
மீண்டும் ஒரு
தமிழனின் உயிர் .!!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
பனித்துளிசங்கர் கவிதைகள் - ஊமை விழிகள் !!!
22
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
7/14/2010 12:40:00 PM
குறிச்சொல் KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal, ஈழம், ஊமை விழிகள், கவிதைகள், பயம், பனித்துளிசங்கர் கவிதைகள்
குறிச்சொல் KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal, ஈழம், ஊமை விழிகள், கவிதைகள், பயம், பனித்துளிசங்கர் கவிதைகள்
வாழும் நாட்களில் வாழாமல்
வாழ்வின் எல்லைவரை ஓடிவிட்டு
இன்று வாழும் கணங்கள் தீர்ந்துபோன
பொழுதுகளின் விளிம்பில் நின்று
குவிந்து கிடக்கும் பிணங்களில்
தனது உறவுகளின் அடையாளங்களை
ஆவேசமாய் தடவித் தடவி தேடும்
ஒரு பார்வையற்ற பெண்.
நெருப்பைக் குடித்து
தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருகும்
இவளின் இந்த தனிமை .
அனைத்தும் இருந்தும்
எப்பொழுதும் குறை குடமாய் தளும்பி குதிக்கும்
எதோ ஒன்றின் மேலான
சொல்ல முடியாத சோகம் சுமந்த
அதே நாட்கள்
எதுவுமற்ற இன்றைய வெறுமையிலும்
இவளுடன் தொடர்கிறது .......
இரவின் இறுதி சொட்டு தீர்ந்துபோகும் வரை
விடியலை தேடி அலையும்
இவளின் ஊமை விழிகள்.
குடிசைகளில் சொருகப்பட்டிருக்கும்
ஓலைகளின் யதார்த்த உரசலில் தெறிக்கும் சத்தத்தில்.
மீண்டும் மெல்ல எட்டிப் பார்த்துக்கொள்கிறது
தான் பார்வையற்றவள் என்பதையும் மறந்து
இவளின் எஞ்சிய உறவுகளின்
மரண பயம்....!!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
இருந்துவிட்டு போ தமிழன் என நீயும் !!!
25
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/30/2010 10:49:00 AM
குறிச்சொல் Eelam, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal, ஈழம், கவிதைகள், தமிழர்கள், பனித்துளிசங்கர் கவிதைகள்
குறிச்சொல் Eelam, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal, ஈழம், கவிதைகள், தமிழர்கள், பனித்துளிசங்கர் கவிதைகள்
நீயும் நானும் பேசுவது தமிழ்தான்
நாம் இருவருமே தமிழர்கள் தான்
இதைவிட நமக்குள் என்ன ஒற்றுமை?
போராட்டங்கள் மட்டுமே
வாழ்வாகி போனது எனக்கு
போராட்டமா அப்படி என்றால்
என்கிறாய் நீ...
சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் நாங்கள்
வெந்துவிட்ட இதயங்கள்..
தொலைந்துவிட்ட சொந்தங்கள்...
சந்ததியே வேரறுந்து ...
நிம்மதியை தானிழந்து ..
இத்தனையும் இழந்தாலும்
இழக்கவில்லை நம்பிக்கை..
கூடிழந்த பறவைகளாய் நாங்கள்
கூடி வாழும் குருவிகளாய் நீ
ஆனாலும் என்னவோ
உன்மீது எனக்கு துளியேனும்
பொறாமை வரவில்லை
நீயேனும் நன்றாக இருக்கிறாய்
அது போதும் .
ஒரு வேளை சோற்றிற்கும் ,
ஒண்ட ஓரமாய் சிறிது இடத்திற்கு
நாங்கள் சிந்தியக் குருதிகளும் , உணர்வுகளும் ,
கத்தலும் , கதறலும் ,மொத்தமாய்
இந்த முற்கம்பி வேலிக்குள்ளேயே
புதைந்து போகட்டும்
வேண்டாம் இனியும்
எந்த எதிரிக்கும் இந்த அவல நிலை.!
நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே .!
தமிழ் அன்னை ஈன்றெடுத்த
மக்கள் தானே நாம்!
இதிலாவது நமக்குள்
ஒற்றுமை ஒன்று
இருந்துவிட்டு போகட்டும் !!
தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மரணத்தின் விளிம்பில் மழலையின் வாசகங்கள் !!!
30
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/24/2010 10:28:00 AM
குறிச்சொல் KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal, அம்மா, ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள், புனைவு
குறிச்சொல் KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal, அம்மா, ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள், புனைவு
என்னதவம் செய்துவிட்டேன் என் தாயே
உன்னை தாயாக நான் அடைய !
சிறுவயதில் உனக்கும் எனக்கும்
அடிக்கடி சண்டை!
செய்யாதே என நீயும் செய்வேன் என நானும்
போர்க்களம் ஆகும் வீடே!
புரிகிறது இப்போது சிற்பியாய் நீ இருந்து
செதுக்கி இருக்கிறாய் என்னை!
புரியவில்லை அப்போது மன்னித்துவிடு என்னை
என் அன்புத்தாயே!
நான் நோய்வாய்ப்பட்டால்
உருக்குலைந்து போவதென்னவோ நீதான்!
நான் அழநேர்ந்தால் உன் கண்ணிலும்
கண்ணீர்த்துளி!
என் சிரிப்பில் உன் முகத்தில் தெரியும்
ஒரு சூர்யோதயம் !
ஆனால் இன்றோ
முகவரி தொலைத்தக் கடிதமாய்
வீதிகளில் விழுந்துக் கிடக்கிறேன் .
மனித உடல் கொண்ட மிருகங்களின்
இந்த சுய நல பூமியில் இன்னும்
ஒரு நொடி உயிர் வாழ
நான் விரும்பவில்லை .
கா த்திரு தாயே
நானும்
வந்துவிடுகிறேன் விரைவில்
இவர்களில் யாரேனும் ஒருவரால்
கொல்லப்பட்டு
காத்திருக்கும் இந்த கழுகின்
பசி தீர்த்துவிட்டு .!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Subscribe to:
Posts (Atom)