சினி சிப்ஸ் !!!

தமிழ் சினிமா பற்றிய ருசிகர தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் உதிரிப் பூக்கள்.


* நடிகை லட்சுமி மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

* இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் திரைப்படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை.

* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் கரங்கள். அவரது 100வது திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் வளையாபதி.

* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் சக்சஸ்... வெற்றி.

* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் கல்லுக்குள் ஈரம்.


* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் பணம் பத்தும் செய்யும்.

* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.


* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர்.

* நடிகை சவுகார்ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. இந்த படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார்.

* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.

* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.

* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் ஏழை படும் பாடு.

0 மறுமொழிகள் to சினி சிப்ஸ் !!! :