ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்."


****


நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.


****

போன் வந்தால் மணிக்கணக்காகப் பேசும் வழக்கம் கொண்டவர் ஜோன்ஸின் மனைவி. அவர் அன்று பத்து நிமிடத்தில் பேசிவிட்டு போனை வைத்துவிட, ஜோன்ஸ் ஆச்சரியமாகக் கேட்கிறார். "என்ன சீக்கிரம் போனை வைத்துவிட்டாய்?""ஆமா.. வேற என்ன பண்றது, ராங் நம்பர் வந்தா!." என அலுத்துகொண்டார் அவர் மனைவி.


****


ஜோக்கர் ஜோன்ஸ் ஒரு கிளினிக்கில் டாக்டரின் அறை முன்னால் அமர்ந்திருக்கிறார். அருகே ஒரு நபர் அழுதுகொண்டிருக்கிறார்.

ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?

நபர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.

ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.

நபர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..

****


ரயில் டிக்கெட் பரிசோதகர் ஜோன்ஸைப் பார்த்தது கேட்கிறார், "டிக்கெட் ப்ளீஸ்!"

ஜோன்ஸ் : (பாக்கெட்டிலும் பேக்கிலும் தடவிப்பார்த்துவிட்டு) ஐயோ.. டிக்கெட்டை எங்க வச்சேன்னு தெரியலையே!

பரிசோதகர் : பரவாயில்லை..உங்களைப் பார்த்தா நல்ல மனுசனாத் தெரியுது. கண்டிப்பா நீங்க எடுத்துருப்பீங்க. நான் அடுத்த ஆளப் பார்க்கிறேன்.(சிறிது நேரம் கழித்து பரிசோதகர் திரும்பி வர, இன்னமும் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்.)

பரிசோதகர் : இன்னுமா தேடுகிறீர்கள்? நான் தான் காண்பிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டேனே!

ஜோன்ஸ் : அடப்போய்யா நீ வேற! டிக்கெட் இருந்தாத்தானே நான் எந்த ஊருல எறங்குறதுன்னு தெரியும்.
0 மறுமொழிகள் to ஜோன்ஸ் ஜோக்ஸ் !!! :