வாழ்க்கைஓர் அமுத மழை
நனைந்து பார்
அதன்
சுகம் புரியும் உனக்கு.

*
நீ வரும்வரை
என்னை
எவரும் கவனிப்பதில்லை
உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது
உன்னோடு கூடவரலாம் நான்


*


காதலை விட காதலர்களே
உனை அதிகமாய் நினைவு படுத்துகிறார்கள்

*

நீவாசிக்கிறாயோஇல்லையோ உன்னால்பலர் வாசிக்கிறார்கள்என் கவிதைகளை

தயவு செய்து சிரித்துவிடாதேகலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்இன்னும் கலைந்துவிடும்


0 மறுமொழிகள் to :