அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்.!!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும, காந்தியாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து....

அக்டோபர் 2, 1931.


ஐன்ஸ்டீன் எழுதியது..


பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி!


என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.

அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை காட்டி வெல்ல முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.உங்களின் எடுத்துக்காட்டு உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பரவும் என்று நம்புவோம். அத்தகைய நம்பிக்கை பன்னாட்டு அதிகாரம் ஒன்று உருவாகவும், அனைவரும் மதிக்கும் படியும், போர் இல்லாமலேயே பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவும் உதவும்.

உண்மையும் வியப்புடனும்,

உங்கள்,

ஆ. ஐன்ஸ்டீன்


நான் உங்களை நேருக்கு நேர் சந்திக்க இயலும் என்று நம்புகின்றேன்

0 மறுமொழிகள் to அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்.!!! :