சிந்தனை துளிகள் !!!!

வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன?ஊர் ஊராகச் சுற்றி உபதேசம் செய்து விட்டு, தனக்கென்று தலை வைத்துப் படுக்க ஓர் இடமில்லாமல், கடைசியில் சிலுவையில் அறையுண்டு இறந்த ஏசு நாதரை வெற்றியாளர் என்று சொல்லவேண்டுமா, தோல்வியாளர் என்று சொல்லலாமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்து, கால் நடையாகக் காடு மேடெல்லாம் சுற்றி, கடைசியில் இரு வகுப்பினரும் ஒருவரை ஒருவர் கோரமாகத் தாக்கிக்கொண்டிருந்த நிலையில் குண்டு பட்டு இறந்தாரே, அந்த காந்தியடிகள் வெற்றியாளரா, தோல்வியாளரா? அவ்வளவு பெரிய விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம். நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றியாளராகக் கருதப்பட வேண்டுமென்றால், எந்த உரைகல்லில் சோதித்துக் கொள்ளலாம்?ரால்ப் வால்டோ எமர்ஸன் சொல்வதைக் கேளுங்கள்:


● அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது

● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது

● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது

● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது

● நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது

● இயற்கையை ரசிப்பது

● மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது

● ஓர் ஆரோக்யமான குழந்தை

● ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது

● சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது

● உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது

இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே.0 மறுமொழிகள் to சிந்தனை துளிகள் !!!! :