அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய நண்பர் பலா பட்டறை ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. சரி இனி விஷயத்திற்கு வருவோம். உலகத்தில் எல்லோரும் உயிர் வாழ என்ன என்ன தேவை ?. என்னடா இவன் ஏதோ பள்ளிக்கூட குழந்தையிடம் கேட்பது போல் கேட்கிறானே என்று யாரும் எண்ண வேண்டாம். காரணம் இருக்கிறது. உங்களால் என்னவென்று கணிக்க முடிகிறாதா..!!?? சரி நானே சொல்லிவிடுகிறேன்.
சுவாசிப்பதற்கு காற்று, உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் சரி இதில் சுவாசிக்க காற்றுக் கிடைத்துவிடும், அடுத்து உடுத்த உடையும் ஏராளம் இப்பொழுது. அதற்கடுத்து இருக்க இருப்பிடமும் கிடைத்துவிடும், சரி ஆனால் உண்ண உணவு !
இதில் என்ன இருக்கிறது அதுதான் கிடைக்கிறதே என்று நாம் சொல்ல நேர்ந்தால் அது நமது அறியாமை. ஆம் நாள் ஒன்றுக்கு அறிவியல் வளர்ச்சியால் உருவாக்கப்படும் இயந்திரமோ, அல்லது செல்போனோ இல்லை உணவு வகைகள். இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம் உணவு தானியங்கள். இந்த உணவு தானியங்கள் மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் நிகழ்வு இல்லை. இதற்கு முக்கியக் காரணம் மழை வருடம்தோரும் உலகத்தில் பொழியக்கூடிய மழையை கணக்கிட்டே நாம் நமக்குத் தேவையான உணவுத் தானியங்களை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், அந்த மழை இனி வரும் வருடங்களில் வரப்போவதில்லை என்றால் நமது நிலை என்னவாகும்?.ஆம். இந்த மிக மோசமான நிலையை விரைவில் எட்டிவிடும் இந்தியாவும்..!
இந்தியா..! என்று நீங்கள் வியப்புடன் கேட்க நேர்ந்தால் அதற்க்கும் காரணம் இருக்கிறது. தங்களிடம் இல்லையே..! என்று ஏங்கும் உலக நாடுகளில், இருப்பதை அழிக்கும் நாடுகளின் வரிசையில் நமது இந்தியாதான் முதல் இடம் . நான் சொல்வது வேறு ஒன்றும் இல்லை இயற்கையைத்தான். இறுதியாக எடுக்கப்பட்ட உலக இயற்கை கணக்கெடுப்பில் மொத்தம் அறுபது விழுக்காடு இயற்கை வளங்களை தொலைத்த (இல்லை இல்லை அழித்த என்று சொல்வதுதான் இங்கு சரி ) அழித்த என்ற பட்டியலில் முதல் இடத்தை எட்டிப்பிடித்த பெருமையை பெற்றிருக்கிறது நமது இந்தியத்திருநாடு .
ஆம். இனி வரும் காலங்களில் இயற்கை என்ற ஒன்றை நமது சந்ததிகள் பாடப்புத்தகங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ மட்டும்தான் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலை விரைவில் வரும். நாம் இன்று அனைவரும் பணத்தாலும் , அறிவியல் வளர்ச்சியாலும் , எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம், என்ற எண்ணத்தில் மரங்களை அழித்து இயற்கை என்ற வார்த்தையை இன்று விதவை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது நமது சமூகம். பணத்தை வைத்து உணவை வாங்கலாம் ஒருவேளை உணவு வியாபாரம் செய்யப்பட்டால். ஆனால், இனி வரும் காலங்களில் விற்பவனுக்கே உண்ண உணவு கிடைக்காமல் திண்டாடும் நிலையில், நாளை மறுநாள் அந்த உணவை உருவாக்கும் விவசாயிக்கு அந்த உணவு இல்லாத நிலையில், இந்த உலகத்தில் உங்களால், உங்கள் பணத்தால் அல்லது இந்த அசுர அறிவியல் வளர்ச்சியால் உங்களுக்குத் தேவையான உணவை வாங்கிவிட இயலுமா..!? சற்று சிந்தித்துப் பாருங்கள். சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இயற்கை அழிவிற்க்கும் இப்பொழுது இந்தியாவில் வெயில் அதிகரித்து இருப்பதற்கும், மழை பொய்த்து போனதற்க்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைக்கலாம் காரணம் உள்ளது.
எல் நீனோ-தெற்கத்திய அலைவு (El Niño-Southern Oscillation) ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் நினோ, லா நினா எனப்படும் இவை கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள். எல் நினோ என்பது எஸ்பானிய மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் பாலன் யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. லா நினா என்னும் சொல் சிறிய பெண்பிள்ளை என்னும் பொருளுடையது. ஒரு பக்கம், அதிக மழை பெய்ய வைத்து வெள்ளத்தையும், இன்னொரு பக்கம் மழையை குறைத்து அதிக வறட்சியையும் ஏற்படுத்தும் இது. வெப்ப நீரோட்டத்தை ஏற்படுத்துவதை "எல் நினோ' என்றும், குளிர்ந்த நீரோட்டத்தை "லா நினா' என்றும் அழைக்கின்றனர். கடலில் ஒரு சமயம், வெப்ப நீரோட்டத்தை ஏற்படுத்தும்; அதனால் வறட்சி நிலை ஏற்படும். இன்னொரு சமயம், குளிர்ந்த நீரோட்டத்தை ஏற்படுத்தும். அதனால், சில நாடுகளில் மழை அதிகமாகி வெள்ளம் ஏற்படும். கடந்த 19 ம் நூற்றாண்டில் "எல் நினோ'வை கண்டுபிடித்தது ஒரு சாதாரண மீனவ சிறுவன் தான். தென் அமெரிக்காவில் ஆன்கோவி தீவில் இருந்த இந்த சிறுவன் தான், கடலில் வித்தியாசமான ஒரு நீரோட்டம் இருப்பதை அறிந்தான். அதன் பின் தான், "எல் நினோ' ஆராய்ச்சி ஆரம்பித்தது.
1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.
எல் நீனோ-தெற்கத்திய அலைவு, உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வரட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை எதிர்வு கூறுவது தொடர்பில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனைஎதிர்வு கூறுவது தொடர்பில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் எல் நீனோ என்பது ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் சமயத்தில் பசுபிக் கடலில் எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரமாகத் தோன்றும் ஒரு வெப்ப நீரோட்டத்தையே குறித்தது. இந்த நீரோட்டம் சில வாரங்களே நீடிக்கும். ஆனால், 3-8 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நீரோட்டம் பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு நீடிக்கும். தற்காலத்தில் இதைதான் எல் நீனோ எனப் பொதுவாகக் கூறப்படுகிறது.உதாரணமாக 1991ல் உருவான எல் நீனோ 1995 வரை நீடித்தது. காலநிலையில் இதனது தாக்கங்கள் உலகளாவியது.
ஓர் எல் நீனோ வருடத்தில், வட ஆஸ்திரேலியாவின் மேலே காற்றழுத்த உயர்வுப்பகுதி தோன்றும். அதே சமயம், பசிபிக்கின் மையப்பகுதியிலும், எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரத்திலும் காற்றழுத்தம் குறைந்த பகுதிகள் தோன்றும். காற்றழுத்தத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றம், வழமையாக தெற்கு அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்றைக் குறைக்கும் அல்லது மறுபுறமாக வீசவைக்கும். இதனால் எக்குடோர், பேரு நாடுகளின் கரையோரத்தில் பூமத்தியரேகையின் வெப்பமான நீர் "தேங்குகிறது". வழமையான குளிர்ந்த சத்துநிறைந்த நீர் கடலடியிலிருந்து மேற்பரப்புக்கு வர வழியில்லாமல் போகிறது. இந்தப் பசிபிக் கடலின் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை இதன் காரணமாக வெகுவாகக் குறையும்.பசிபிக்கின் இந்தப் பக்கத்தில், அதாவது அமெரிக்கப் பக்கத்தில், மழைவீழ்ச்சியும் அதன் காரணமாக வெள்ளப்பெருக்கும் அதிகமாகும். முரணாக, ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் மழைவீழ்ச்சி குறைந்துவிடும். வரட்சியும் அதன் காரணமாக காட்டுத்தீயும் அதிகரிக்கும்.
1960-களில் தான் ஸ்காண்டிநேவிய விஞ்ஞானி ஜாக்கப் ஜெர்க்னஸ் என்பவர், "எல் நினோ'வுக்கும், பசிபிக் மற்றும் இந்துமாக்கடலில் ஏற்படும் வானிலை வானிலை மாற்றத்துக்கும் தொடர்பு உள்ளதை கண்டுபிடித்தார். "சுனாமி' போல இது, வந்த வேகத்தில் போகக்கூடிய இயற்கை சீற்றம் அல்ல; மாதக்கணக்கில் நீடிக்கும். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் "எல் நினோ' பாதிப்பை இப்போதே சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஆம், 1998ல், ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளில் பெரும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி, வறட்சியை தாண்டவமாட வைத்த "எல் நினோ'வுக்கு இரண்டாயிரம் பேர் பலியாயினர்; பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சமீபத்தில், ஆஸ்திரேலிய வானிலை மையம் இந்தாண்டுக்கான "எல் நினோ' அறிக்கையை வெளியிட்டதை அடுத்து, இந்தியாவுக்கு பெரும் அச்சம் தொற்றிக்கொண்டு விட்டது. "பசிபிக் கடலில் ஏற்பட் டுள்ள மிக உச்சகட்ட வெப்ப நீரோட்டம் (எல் நினோ), அதன் தொடர்ச்சியான வானிலை மாற்றம் இப்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை தான். "எல் நினோ' இப்போது நடுத்தர நிலையில் தான் உள்ளது. அதன் வேகம் மிதமாகத்தான் உள்ளது. "இனி வரும் மாதங்களில் அதன் வேகம் அதிகமாகும்; பாதிப்பும் பரவும்' ஆஸ்திரேலிய வானிலை இயக்குனர் ஆன்ட்ரூ வாட்கின்ஸ் தெரிவித்தார். "அப்போது தான் அதன் உண்மையான கொடூர விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பருவ மழை சரிந்தது: தற்போதைய தாமதமான பருவ மழைக்கு காரணம் "எல் நினோ'தான் என்று அமெரிக்க "எல் நினோ' நிபுணர் வெர்னான் கவுஸ்கியும் உறுதி செய்துள்ளார்.
எல் நினோ: பல ஆண்டாக இந்த இயற்கை சீற்ற பூதம் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது என்றாலும், புதிதாக பார்த்தால், 1998ல் ஏற்பட்ட "எல் நினோ'பூதம் தான் பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று கூற வேண்டும். ஆஸ்திரேலியா, ஆசியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் உணவு உற்பத்தி இழப்பை ஏற்படுத்தியது; வறட்சி காரணமாக பல ஆயிரம் பேர் பலியாயினர். இதனால், ஆசிய நிதிச் சந்தையும் அப்போது பெரிதும் பலவீனப்பட்டது. ஒவ்வொரு முறையும் "எல் நினோ' ஏற்பட்டால், அதனால், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் கோதுமை உற்பத்தி அடிபடும்; இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் உற்பத்தி சரியும்; தாய்லாந்தில் ரப்பர் உற்பத்தி படுத்துவிடும். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த மூன்றாண்டாகவே, பருவ மழை குறைவாக உள்ளது. அதனால், சர்க்கரை உற்பத்தி படுத்து வருகிறது. அதனால், சர்க்கரை விலை பலமடங்கு உயர்ந்தும் விட்டது. இப்போது "எல் நினோ' வேகம் 50 சதவீதம் தான் உள்ளது; அடுத்த சில மாதங்களில் தெற்கு திசை நோக்கி வீசும் போது, வெப்பக்காற்று காரணமாக வானிலையில் பெரும் மாற்றம் ஏற்படும்.
இதுவரை காலமும் எல் நீனோ நடந்த ஆண்டுகள்:
1902-1903
1911-1912
1918-1919
1925-1926
1932-1933
1941-1942
1953-1954
1965-1966
1972-1973
1982-1983
1986-1987 1991-1992 1994-1995 1997-1998 -2005-2009
பொதுவாக, எல் நீனோ நடந்து முடிந்த பின்னர், காலநிலை சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும். ஆயினும், சில ஆண்டுகளில் தென் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்று மிகப் பலமாக இருக்கலாம். இதனால், பசிபிக்கின் மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகளில் வழமையைவிட அதிகமான குளிர் நீர் இருக்கும். இந்நிகழ்வை லா நீனோ என்பர்.
அமெரிக்கா கண்காணிப்பு: "எல் நினோ' வேகத்தை கண்காணிக்க, அமெரிக்காவில் "வானிலை கணிப்பு மையம்' செயல்படுகிறது. அமெரிக்க கடலாய்வு மற்றும் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கு இந்த அமைப்பு, அடிக்கடி "எல் நினோ' பற்றி தகவல்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,"எல் நினோ பாதிப்பு ஜூன் - ஆகஸ்ட் இடையே ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இப்போது பருவமழை பாதிக்கப்பட்டிருப்பதற்கு "எல் நினோ' பாதிப்பும் முக்கிய காரணம். வறட்சி அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்று எச்சரித்துள்ளது. 81 அணைகளில் நீர் சரிவுபருவமழை குறைவாக இருப்பதால், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 81 பெரிய அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கங்கை, கோதாவரி, மகாநதி போன்ற முக்கிய அணைகளில் மொத்த கொள்ளளவில் 11 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போய், இப்போது வெறும் 9 சதவீதமாக குறைந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளில், இந்தியாவின் பருவமழை நிலவரத்தை சரியாக கணிக்க முடியவல்லை. தொடர்ந்து வறட்சியும், வெள்ளமும் இருந்திருக்கிறது. சீரான பருவமழை நிலவரம் நம்மிடம் இருந்ததில்லை. அதனால், உணவு உற்பத்தி எப்போதும் உபரியாக இருந்ததே இல்லை. பற்றாக்குறை காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 1982 - 83ல், இந்தியாவில் "எல் நினோ' பாதிப்பு இருந்தது. அப்போது வறட்சி ஏற்பட்டு, உணவு உற்பத்தி 33 சதவீதம் பாதிக்கப்பட்டது. பருவமழை முன்னதாகவே ஆரம்பித்தது. ஒரு நாள் மட்டுமே 200 மி.மீ.,மழை தந்தது. அதே போல, முன்னதாகவே பருவமழை போயும் விட்டது. இதனால், வறட்சி அதிகரித்து, உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. இரு பருவ நிலை: எனினும், இந்தியாவை பொறுத்தவரை, பல்வேறு தட்பவெப்ப நிலையில் உற்பத்தி உள்ளதால், மொத்த உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அப்போது மொத்த உற்பத்தியில் 50 லட்சம் டன் தான் குறைந்தது. இது போல, 1978 - 79ல், "எல் நினோ' பாதிப்பு இருந்தது. அப்போது வறட்சி ஏற்பட்டு பாதி மாநிலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அரிசி தானிய உற்பத்தி இரண்டு கோடி டன்னுக்கு மேல் குறைந்து விட்டது.
வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.
எல் நீனோ உலகளவிய அளவில் காற்றோட்டங்களில் தாக்கம் விளைவிக்கக் கூடியது. பேரு, எக்குடோர் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் வரட்சி போன்றவற்றைத் தவிர, உலகின் பல பாகங்களிலும் அசாதாரண காலநிலையைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, 1982-83ல் தெற்கு ஆபிரிக்கா, தெற்கு இந்தியா, இலங்கை, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வரட்சி; பொலிவியா, கியூபா ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு; ஹவாயில் புயல். 1997-1998ல் ஐரோப்பாவின் பலபகுதிகளில் குளிர்கால வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது. 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ எல் நீனோ வெப்ப அலையால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் .
இப்போது மீண்டும் எல் நீனோ ஆரம்பமாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த செப்டெம்பரில் எடுத்த வெப்பநிலை அளவுகள் இதையே சுட்டுகின்றன. 1998ம் ஆண்டு மிகவெப்பமான ஆண்டு என்று கருதப்படுகிறது. ஏற்கனவே 2006ம் ஆண்டு பிரிட்டனில் மிகவெப்பமான ஆண்டு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் வரட்சிக்கும் ஆர்க்டிக் பகுதியில் அதிகமாக உருகும் பனிப் பாறைகளுக்கும் எல் நீனோ தான் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நீனோவும் உலக வெப்பமாக்கலும் சேர்ந்து இந்த ஆண்டு மீண்டும் மிகவெப்பமான ஆண்டாகவும் மிகமோசமான காலநிலை கொண்டதாகவும் இருக்கப் போகிறதா??????????????? இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்? இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர்.
உரிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் நாட்டின் விவசாய உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் மாநிலங்களிடையிலான மோதலும் தீவிரமாகும் என மத்திய அரசு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை இது மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் சரியும் என்று தெரிகிறது.எல் நினோ ஏற்படும்போதெல்லாம் இந்தியாவில் 70 சதவீதம் அளவுக்கு மழை குறைந்தது. 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் எல் நினோவின் தாக்கத்தை இந்தியா சந்தித்தது .பருவ மழை பெய்யாவிட்டால் நாட்டில் 65 சதவீத அளவுக்கு விவாசயம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.
இந்த ஆண்டு எல் நினோ ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாக ஆசிய நாடுகளை சர்வதேச வானிலை ஆய்வு மையம் (WMO) எச்சரித்துள்ளது.இந்தியாவில் ஏற்கனவே பருவ மழை வேகம் பிடிக்காத நிலையில் . கேரளத்திலும் மும்பை உள்ளிட்ட நாட்டின் மேற்குப் பகுதிகளில் எதிர்பார்த்தபடி ஆரம்பித்த பருவ மழை அப்படியே நின்றுவிட்டது. தொடர்ந்து மழை பெய்யவில்லை.நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனம், எல்நினோ பாதிப்பினால் இந்த வருடமும் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் என்று கணித்துள்ளது. இந்த நிறுவனம் உலகத்தில் எல்நினோ - வானிலை ஆராய்ச்சியில் முன்னனி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல்.அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகையில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. இதுபோன்ற நிலை ஒருவேளை உலகில் ஏற்பட்டால் ,நமது பொருளாதாரம் ஒரு பெரிய அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உணவு பொருட்களில் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான விலைவாசி உயர்வு (Hyper Inflation) நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்., ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பாலும், பசியாலும் , நோயாலும் உலக மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் காணாமல் போகலாம் என்று இந்த எல்நினோ ஆய்வு அறிக்கை கூறுவதாக எச்சரித்து இருக்கிறார் .
உலகத்தில் இதுவரை இல்லாத ஒரு சமூக சீர்க்கேடு இந்தியாவில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அதுதான் இயற்கை அழிப்பு. கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தியாவில் மழையளவு மிகவும் குறைவு. அதேபோல் வெயில் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. காரணம் என்னவென்று யாராவது எப்பொழுதாவது யோசித்தது உண்டா? இல்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் சினிமா, அல்லது அரசியல், பக்கத்து வீட்டு கோழி நம்ம வீட்டுக்குள் வந்துவிட்டது, பக்கத்து நாட்டுக்காரன் நாம் நாட்டுக்குள் கை நீட்டி பேசுவிட்டான் என்று வாழ்க்கைக்கு ஒன்றும் உதவாத விஷயங்கள்தான். அறியாத மக்கள் பலர் அவர்கள்தான் தெரியாமல் தமக்கு தெரிந்தததை செய்கிறார்கள் என்றால் நாமும் அதையே செய்தால் நாம் பெற்ற கல்வி வளர்ச்சி இதுபோன்ற பொழுது போக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும்தானா ?
ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு என்று சொல்லி தனது பலத்தை கண்டு மற்ற நாடுகள் அஞ்சவேண்டும் என்ற அறியாமையால் வருடத்திற்கு பல கோடி பணத்தை கொட்டி அணுகுண்டு தாயார் செய்கிறது. ஆனால் அந்த அணுகுண்டுகள் ஒன்றும் தேவை இல்லை. இந்த உலகை அழிக்க இதுபோன்ற இயற்கை வளங்களை எப்பொழுது அழிக்கத் தொடங்கினோமோ.. அப்பொழுதே நமக்கு நாமே குழித்தோண்ட தொடங்கிவிட்டோம் .
அனைத்து பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் இதுநாள் வரை சினிமா, காதல், கிரிக்கெட், என்று வாழப்போகும் காலத்திற்க்கு உதவாத வாழ்ந்த நாட்கள் பற்றி பற்றி எத்தனையோ தொடர் பதிவு எழுதி இருக்கிறோம். இயன்றால் அனைவரும் இனி நாம் வாழப்போகும் காலத்திற்காக விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கை அழிவு பற்றி மீண்டும் ஒரு முறை அனைவரும் தொடர் பதிவு எழுதுங்கள். ஒரு கை ஓசை எழுப்பினால் அனைவருக்கும் கேட்பது கடினம்தான். நாம் அனைவரின் கரங்களும் ஒன்றாக இணைந்து எழுப்பும் ஓசை அனைவரையும் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்
இயன்றால் மரங்களை வளர்த்து
இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்..!
இயலாவிட்டால் இருக்கும் மரங்களை
வெட்டாமல் உங்களை நீங்களே
காப்பாற்றிக்கொள்ளுங்கள் !
நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
53 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 16 - பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! :
//19 ம் நூற்றாண்டில் "எல் நினோ'வை கண்டுபிடித்தது ஒரு சாதாரண மீனவ சிறுவன் தான்.//
அதே மாதிரி இந்த சிறுவனும்(நாந்தான்) எதாவது கண்டுபிடிக்கமாட்டானா என்ற ஆர்வம் எனக்கும் உண்டு!
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் நண்பரே..! பரபரப்பான இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமான பதிவாக இதை கருதுகிறேன்.
உலக பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக இது போன்ற மிகப்பெரிய கட்டுரையினை வலைதளத்தில் படிக்கிறேன்.
இந்த கட்டுரையை படித்ததிலிலுந்து ஆழ்ந்த யோசனையில் உறைந்து போனேன் என்றால் அது மிகையாகாது.
தங்களது இக்கட்டுரை நமது பதிவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறேன். நானும் சபதம் ஏற்கிறேன். பிரவின்குமாரகிய நான் வருடத்திற்கு 10 மரக்கன்றுகளாவது நடுவேன் என்று..! எங்கள் ஊரில் மக்களிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன்.
ஊதுற சங்க ஊதுவுவோம் .
வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் என்று சொல்லும் நமது அரசாங்கம், செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் கணக்கில்லா மரங்களை வெட்டித் தள்ளுகிறதே, இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்வது.
வணக்கம், அரிய பொக்கிஷம் இந்த பதிவு. பல அருமையான தகவல்களுடன் இயற்கையை காக்க வேண்டியதை அருமையாக எழுதி விட்டீர்கள். எழுதியதுடன் நில்லாமல் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்போம். பாராட்டுகள்.
இந்த கணத்திற்கு மிகவும் தேவையான பதிவு.
அற்புதம். எவ்வளவு பெரிய கட்டுரை.
இனியும் நாம் திருந்தாவிட்டால் கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்ததுபோலதான் ஆகும்.
மிகவும் பயனுள்ள விஷயம்
நன்றி நண்பரே
மிகவும் ஒரு அற்புதமான பதிவு உங்களிடமிருந்து! வாழ்த்துக்கள் முதலில். இது போன்ற பதிவுகள் அவசியம் தேவை இருக்கும் இயற்கையை காக்க நண்பா!
இயற்கை அழிவைப் பற்றியும் அதற்கான மாற்றாய் ஒரு வேண்டுகோளையும் வைத்து... பாராட்டுக்கள்.
பிரபாகர்...
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் நண்பரே..!
vaaththai illai solla...ivvalavu news engu thiratthukireerkal...
ithai appadiye print out eduthu vaithukolla siranthathu... kuzhanthaikalukku kodukkalaam
eppadinga...ur. interest is highly appreciable...it is more useful one...we cannot go and search for, to read the article u presented. it is a ready reference... amazing...pon vijai
மிக மிக அவசியமான பதிவு ஷங்கர் . மிக விவரமாக எழுதி உள்ளீர்கள் . இதற்கு மேல் என்ன விவரம் நாங்கள் தருவது என்றுப் புரிய வில்லை. இருந்தும் கண்டிப்பாக ஒரு பதிவு எழுதுகிறேன்.
முதலில்,கை கொடுங்க சங்கர், அவசியமான
இந்த கட்டுரைக்காக உழைத்த உங்கள் உழைப்பிற்கு
முதலில் என் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
இதைப்பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டு நானும்
ஒரு இடுகை இட முயற்சிக்கறேன்.
congrats shankar,very nice post!!
திரு ஷங்கர் அவர்களுக்கு,வாழ்த்துகளும் நன்றியும்..... உங்கள் கைக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.எனக்கு அவ்வளவாக பாராட்ட தெரியாது.இந்த பதிவை எல்லா வலைத்தள நண்பர்களுக்கும் சென்றடைய செய்ய வேண்டும்.முடிந்தால் ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்கள் இதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கில வலைப்பதிவர்களிடமும் இது சென்றடைய உதவ வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் நம் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் பரீட்ச்சயம் உள்ளவர்கள் இதை மொழி பெயர்த்து எல்லா மொழி வலைத்தள நண்பர்களுக்கும் இந்த பதிவு போய்ச்சேர உதவ வேண்டும்.
நல்ல பயனுள்ள தகவல்கள்..தொடரட்டும் உங்கள் பணி !
அற்புதமான இடுகை சங்கர். மரம் நட்டுவளர்த்து இயற்கையை காப்பாற்றுவது ஒன்றுதான் உலகையும் நம்மையும் காக்கும். சுத்தி, சுத்தி நாம எல்லோரும் இதைத்தான் வலியுறுத்தறோம். மக்கள் காதில் விழுந்தா சரி. மரம் நடுவது சம்பந்தமா நானும் ஒரு இடுகை எழுதியிருந்தேன்.
http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_09.html
ரொம்ப அரிய தகவல்கள்.. சங்கர் அருமையான கருத்துக்கள். இயற்கையை அழிவிலிருந்து நம்மால் இயன்றஅளவு தடுக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும்.
நன்றி சங்கர் அருமையான பகிர்வுக்கு..
பாராட்டுகள். எவ்வளவு தூரம் இந்த கருத்துக்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. இருந்தாலும் தம் கடன் பணி செய்து கிடப்பதே என்றபடி நீங்கள் வெகு சிரமப்பட்டிருக்கிறீர்கள். நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
பதிவை காப்பி செய்து வைத்திருக்கிறேன். ஆழ்ந்து படிக்கவேண்டும்.
நன்றி.
மிக அவசியமான பதிவு,அவசியமான நேரத்தில்.நாமும் இயற்கையை பாதுகாக்க நம்மால் முடிந்ததை செய்வோம்.வாழ்த்துகள்
இளமுருகன்
நைஜீரியா
மிகவும் பயனுள்ள நிறைந்த தகவல்களுடன் கூடிய பதிவு.
இயற்கையைக் காக்க முயற்சிப்போம்.
இயற்கையை மனிதன் அழிக்கட்டும். பதிலுக்கு மனிதனை இயற்கை அழிக்கட்டும். இயற்கை சக்தி முன்னால் மனித சக்தி ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்ளட்டும்
வழமை போல பல தகவல்களைச் சேகரித்து, தொகுத்து வழங்கியிருப்பதோடு, பலனுள்ள சில ஆலோசனைகளையும் சொல்லி, தீர்வையும் குறிப்பிட்டிருப்பது அருமை! தொடரட்டும் இது போன்ற பதிவுகள்!
good and keep going shankar!
அற்புதமான பதிவு
உண்மை என்ன என்பதை புட்டு புட்டு வச்சிட்டீங்க,என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது தங்கள் பதிவு
இந்த பாலிதின் உபயோகத்தையும் நாம் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்
நன்றாக இருக்கின்றது கட்டுரை நண்பரே..இதை படித்து 10 பேர் விழிப்புணர்வு பெற்று மரம் நட்டாலும் கட்டுரைக்கு வெற்றியே...தொடர்ந்து பயனுள்ள கட்டுரைக்ள் எதிர்பார்க்கின்றேன்.பதிவில் உபயோகமான நீண்ட கட்டுரையை இப்போதுதான் படிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.வேலன்.
தகவல்களை அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்.
நம் கடமை.. இயற்கை தொடர்பான தகவல்களைப் பதிவாக்குவது.
தொடருங்கள்.
அமீரகத்தில் எங்கே இருக்கிறீர்கள்?
நல்ல விழிப்புணர்வு பதிவு
உன்வியர்வையில் சில மரங்களும் துளிர்க்கட்டும்!!
வேண்டுகோளை ஏற்று அருமையான ஒரு இடுகை தந்ததிற்கு நன்றி சங்கர். உங்களால் சிறப்பாக இது குறித்து எழுதமுடியும் என்பதாலேயே நான் உங்களை எழுதச் சொன்னேன். என் எதிர்பார்ப்பும் மீறிய அருமையான இடுகைக்கு நன்றி.
நண்பர்களின் பின்னூட்டங்களும் மிக்க நம்பிக்கை அளிக்கிறது.
வாழ்த்துகள்!!.
GOOD JOB ,
STUPENDOUS WRITING ,
THANKS FOR SHARING -A REAL APPRECIABLE WORK !
நல்ல பதிவிங்கறதால படிக்கிறத விட முடியவில்லை.Font கலர் மாத்துங்களேன்:)
கண்டிப்பா ஏதாவது செய்யணும் பாஸ்.
நல்ல அறிவுறுத்தல். புதுசா மரங்கள நடலேன்னா கூட இருக்கற மரங்கள பாதுகாத்தல போதும். நன்றி.
மிக மிக அவசியமான பதிவு. நம் ஒவ்வொருவரும் நம்மைச் சார்ந்தவர்களிடம் இவைகளை பகிர்ந்தாலே முடிந்த வரை மரம் வெட்டப்படுதலை தடுக்கலாம்.
பாராட்டுகிறேன்...பல்லு குச்சி ஒடிக்கும் போது கூட யோசிப்பேன்.நல்ல மரத்திலேயே கதவு போட வேணுமா?கட்டில், பீரோ,மரவேளைப்பாட்டுடன் சமையல் அறை....என்ன விளையானாலும் பரவாயில்லை.தொடர் பதிவில் பதில்.
மிக ஆழமான பதிவுங்க... அதிர்ச்சியா இருந்தாலும் ... கண்டிப்பா ஒவ்வோருவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.
புரிந்து நடந்து கொள்வோம். இதை பற்றி விரைவில் எழுதுகிறேன்.
அக்கறையுள்ள பதிவுக்கு நன்றி.
உங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.
நல்ல அவசியமான பதிவு.
ஆழமான அவசியமான பதிவு ரொம்ப மெனக்கெட்டு தகவலை தேடி எழுதியிருக்கீங்க
நீளமான பதிவு....ஆனால் தேவையான பதிவு. பாராட்டுக்கள்.
இப்போதுள்ள இயற்கை வளங்களை இன்மேலும் அழிக்க விடக் கூடாது.
விளை நிலங்கள் 'விலை' நிலங்களாக மாற்றப் பட்டு வருகின்றன. இன்னும் பத்து இருபது வருடங்களில் சோத்துக்கு 'சிங்கி' தான் அடிக்கணும் போல !
(சிங்கி னா என்னங்க ?).
அவசியமான அழகான பதிவு ! வாழ்த்துக்கள் நண்பரே !!
நானும் இதைப் பற்றி ஒரு இடுகை போடவேண்டுமென்று நினைத்திருந்தேன் . கூடிய சீக்கிரம் இடுகிறேன் !
நன்றி !
தேவையான நேரத்தில் வந்த தேவையான இடுகை. ரொம்ப விவரமாக எழுதியிருக்கீங்க. ஹாட்ஸ் ஆஃப் டு யூ.
நல்ல பயனுள்ள தகவல்கள், நன்றி நண்பரே
very interesting.. ellorum arinthukollavendiya thakaval! ezhuthi engaludan pakirnthukondamaikku nanri!
மிக அருமையான,அவசியமான,அதிர்ச்சி அளிக்கும் பதிவு.
வாழ்த்துக்கள்.
சினிமா,அரசியல்,சாதிசண்டை என்ற மூன்றை மட்டும் நம்பி பிழைப்பு நடத்தும் மற்ற பதிவர்கள், இதை பார்த்தாவது திருந்தவேண்டும்.
நன்றி சங்கர்
இந்த கணத்திற்கு மிகவும் தேவையான பதிவு.
அற்புதம்.
அன்பு நண்பா அருமையான பதிவு.சொல்ல வார்த்தைகள் இல்லை.இந்த தருணத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பதிவு.படித்து விட்டு இதோடு விடாமல் நம் அனைவரும் வாரத்திற்கு ஒரு மரம் நட்டாலே போதும் ஓரளவுக்காவது வரும் சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.செய்வோமா நண்பர்களே.நான் முடிவு செய்து விட்டேன்.நீங்களும் முடிவெடுங்கள்.இது முடிவெடுக்கப் படவேண்டிய நேரம்.இதையும் தட்டிக்கழித்தோம் என்றால்.நாமும் நம் நாடும் வெகு விரைவில் முடிக்கப்படும்.தெரியாத பல விஷயங்களை சொன்ன அன்பு சங்கர் நண்பா அருமை.வாழ்த்துக்கள்.இன்னும் இது போல பல அறிய பொக்கிஷங்களை எதிர்பார்க்கும் உங்கள் பரம விசிறி.தொடர்ந்து எழுதுங்கள் என்னை போன்ற உங்கள் ரசிக பட்டாளங்களுக்கு...
மிகவும் முக்கியமான அவசியமான பதிவு.
முத்தமிழ், பண்புடன், தமிழமுதம் போன்ற கூகிள் குழுமங்களிலும் மீள் பதிவு செய்துள்ளேன்.
well done!!keep it up!!
சங்கர் அருமையான பதிவு! நீண்ட கட்டுரையானாலும் நிரைய விபரங்களுடன் அமைந்திருக்கிறது. கீப் ராக்கிங்! நன்றி!
மிக அருமையான கட்டுரை....இவற்ற்றை பள்ளிகளில் விழிப்புணர்ச்சி முகாமில் பள்ளருக்கும் படித்து காட்டி எடுத்துசொல்லலாம்.என்னால் இயன்ற வரையில் நானும் தொடர் பதிவு எழுதுகிறேன்.
@வால்பையன்
@பிரவின்குமார்
@கே.ஆர்.பி.செந்தில்
@பரிதி நிலவன்
@V.Radhakrishnan
@வரதராஜலு.பூ
@karthik
@பிரபாகர்
@kiruba
@Anonymous
@LK
@சைவகொத்துப்பரோட்டா
@Mrs.Menagasathia
@இராஜ ப்ரியன்
@எம்.ரிஷான் ஷெரீப்
@அமைதிச்சாரல்
@Starjan (ஸ்டார்ஜன்)
@Dr.P.Kandaswamy
@இளமுருகன்
@மாதேவி
@தமிழ் உதயம்
@சேட்டைக்காரன்
@ஷர்புதீன்
@ஜில்தண்ணி
@வேலன்.
@ச.செந்தில்வேலன்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளு காரணமாக அனைவருக்கும் தனித் தனியாக பதில் தர இயலவில்லை மறுமொழி இட்டு என்னை ஊக்குவித்த அனவருக்கும் இந்த பனிதுளி சங்கரின் ஆயிரமாயிரம் நன்றிகள். எப்பொழுதும் இந்த பனிதுளியுடன் இனணந்திருங்கள். இனிவரும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துக்களும் ஊக்குவிப்புகளும் மட்டுமே இன்னும் பல அரியப் படைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் உங்கள் அன்பிற்கினிய பனிதுளி சங்கர்.
@நீச்சல்காரன்
@ப்ரின்ஸ்
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
@ரோகிணிசிவா
@ராஜ நடராஜன்
@அக்பர்
@இராமசாமி கண்ணண்
@எட்வின்
@தாராபுரத்தான்
@சி. கருணாகரசு
@ஜெய்லானி
@தமிழ் வெங்கட்
@ஸ்ரீராம்.
@தேசாந்திரி
@இராகவன் நைஜிரியா
@Subankan
@Matangi Mawley
@வலைஞன்
@சே.குமார்
@ஸ்வீட் ராஸ்கல்
@மஞ்சூர் ராசா
@lolly999
@Thekkikattan|தெகா
@பாரதி பரணி
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலை பளு காரணமாக அனைவருக்கும் தனித் தனியாக பதில் தர இயலவில்லை மறுமொழி இட்டு என்னை ஊக்குவித்த அனவருக்கும் இந்த பனிதுளி சங்கரின் ஆயிரமாயிரம் நன்றிகள். எப்பொழுதும் இந்த பனிதுளியுடன் இனணந்திருங்கள். இனிவரும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துக்களும் ஊக்குவிப்புகளும் மட்டுமே இன்னும் பல அரியப் படைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் உங்கள் அன்பிற்கினிய பனிதுளி சங்கர்.
பாராட்டுகள் சங்கர் நல்ல தகவல்கள் கடும் உழைப்பு அருமையான வடிவமைப்பு என்ற களைகட்டுகிறது உங்கள் வலைப்பூ வாழ்த்துகள்
Post a Comment