நடிகை ரம்பா டும் டும் முடிந்தது இன்று முடிந்தது !!!

டிகை ரம்பா திருமணம் திருமலையில் இன்று முடிந்தது. இதில் 50 வகையான அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் 11-ம் தேதி நடக்கிறது. பிரபல நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், திருப்பதி திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் இன்று காலை 11.44 மணிக்கு முடிந்தது.


தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி திரைப்படத் துறையினர் ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வருபவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அயிட்டங்களுடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
திரையுலகினர் அதிகம் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. திருமணத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் வரும் 11&ம் தேதி மாலை நடக்கிறது. இதில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
THANKS Dinakaran  

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

8 மறுமொழிகள் to நடிகை ரம்பா டும் டும் முடிந்தது இன்று முடிந்தது !!! :

பழமைபேசி said...

//நடிகை ரம்பா டும் டும் முடிந்தது //

இது புரியுது...

//இன்று முடிந்தது !!!"//

???

பழமைபேசி said...

நெம்ப வருத்தமோ??

கார்த்திகைப் பாண்டியன் said...

என் பிரியத்துக்கு உரிய நடிகைக்கு இனிய திருமண வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

என்னங்க...லேட்டஸ்ட் தகவலா இருக்கு...

அறுபத்தைந்து வகை உணவுகளா...

பார்க்கவா சாப்பிடவா...?

க.பாலாசி said...

ஆகா... இந்த வடையும் போச்சே..........

சுசி said...

வாழ்த்துக்கள்..

மணமக்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும்.

ரம்பா ரசிகன் said...

ரம்பா கல்யாண போட்டோஸ் நிறைய தினமலர்ல போட்டுருக்காங்க.

கவிதன் said...

ரம்பாவின் ரசிகர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை இங்கே சொல்லிவிடலாம் !