தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன !
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!
அழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!
ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!
இது எனது மீள் கவிதைகளில் ஒன்று !.
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
29 மறுமொழிகள் to காதல் சிலுவைகள் :
மீள் பதிவானாலும் மனசுக்குள் அழகாய் மலர்ந்து விட்டது.
அருமை
வணக்கம்
//ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!//
ஆழாமான வரிகள்
// ஒரு வேலை
அவளை மறந்து போகும்போது
நான் இறந்துபோகலாம் !!!//
http://marumlogam.blogspot.com
உணர்வுள்ள கவிதை.... பாராட்டுக்கள்.
nallaa irukku ..
நல்லா இருக்குங்க...
அழகாகத்தான் இருக்கிறது கவிதை
///புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன !///
இந்த வரிகள் ஏன் முரணாக இருக்கிறது என்று விளக்கவும். எப்படி புன்னகை அழுகுரலாக மாறியது? பிரிவின் சோகம் அடுத்தவரின் புன்னகையும் அழுகுரலாக ஒலிக்கிறதா?
பிரிவினால் உண்டாகும், உணர்வினை படம்
பிடித்து விட்டீர்கள் (வார்த்தைகளில்)
//மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!///
உங்க கவிதையில் உள்ள REALLITY எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.... இதை முன்னேயும் சொல்லி இருக்கிறேன்
உணர்வின் வெளிப்பாடு.. கவிதை நல்லா இருக்கு நண்பரே..
சுமந்தேன்.....
மீள் பதிவானாலும் தூள் பதிவு!!!
புன்னகையின் அழுகுரல் ..
நல்லா இருக்கு ..
கவிதையை படிக்க விடாமல் பல pop ups ...கொஞ்சம் பாருங்கள்
நைஸ்:)
Nice Lines Shankar...
புன்னகை எப்படி அழுகுரல் ஆகும்? முரண்படுகிறதே?
எல்லாருக்கும் அவர்கள் காதல் காலம் நினைவுக்கு வரும்....
மிக அருமை நண்பா....வாழ்த்துகள்
ரொம்ப நல்லாயிருக்கு..
நல்லாயிருக்கு சங்கர்
அழகு நண்பா....
நல்ல வரிகள் நண்பரே
Nalla irukku
ஒருவேளைநான் இறந்து போகும்போதுஅவளைமறந்துபோகலாம் !!!
சோகமாக முடித்து உள்ளீர்கள் அதனால் கொஞ்சம் மனசு பாரமாக இருக்கு
உணர்வின் வெளிப்பாடு.. ரொம்ப அழகா வந்திருக்கு கவிதை. நல்லா இருக்கு ..வாழ்த்துக்கள்
கவிதை அருமையா இருக்கு..
//ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!//
இதுதான் உச்சம்!
மதுரை ன்ன தான் வருவிங்களானு கேட்டிங்க..நம்ம ஊரு இல்லையா,அந்த பாசம் முதலில். ஷங்கர் இந்த கவிதை வரிகள் எல்லாம் கலக்கல்.
அருமையான கவிதை... வாழ்த்துக்கள் நண்பரே...
கடந்து போன பல நினைவுகளை புரட்டிப்பார்க்கத்தூண்டும் வரிகள். மிகவும் அருமை தோழரே..
Post a Comment