சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை நீட்டி பிச்சை எடுப்பது
எமது உரிமை என்பது இறந்து .
கண்கள் இழந்தும்
கை நீட்டி விற்று பிழைப்பது
எனது திறமை என்ற
நம்பிக்கை பிறக்கட்டும் !.
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
18 மறுமொழிகள் to பனித்துளிசங்கரின் கவிதைகள் - ஊனத்தின் முகவரி !!! :
நல்லா இருக்கு...வாழ்த்துகள்
அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துகள்.
good one again:)
கவிதை நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வரிகளிலும், சமூகத்திற்கு அவசியமான சிந்திக்க வைக்கும் தகவல்களையும், கவிதை வரிகளையும் சளைக்காமல் எழுதி தீர்க்கும் தங்களது சேவை மென்மேலும் தொடரட்டும்.
வழக்கம் போல் இக்கவிதையும் மிகவும் அருமையாய்......
////கண்கள் இழந்தும்
கை நீட்டி விற்று பிழைப்பது
எனது திறமை என்ற
நம்பிக்கை பிறக்கட்டும் //// கவிதை நன்று, வாழ்த்துக்கள்
அருமையான கவிதைகள்
வழமைபோல சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்! :-)
நம்பிக்கை ஊட்டும் வரிகள்.
உழைத்து வாழவேண்டும் என்ற உன்னத குறிக்கோளை கொண்ட கவிதை.
அழகான பதிவு.
நல்லா இருக்கு சங்கர் :)
குட் நண்பரே
கவிதை நல்லா இருக்குங்க..
SUPER BOSS....
MANO
சுறா படத்தில விஜய் சொன்னது
நல்லா இருக்கு
nantraka irukirathu friend....
///கை நீட்டி பிச்சை எடுப்பது
எமது உரிமை என்பது இறந்து .
கண்கள் இழந்தும்
கை நீட்டி விற்று பிழைப்பது
எனது திறமை என்ற
நம்பிக்கை பிறக்கட்டும் !.
///
கவிதை சோகமாக சென்றாலும் இறுதியில் நம்பிக்கை தந்துவிட்டீர்கள் ..!!
நல்ல வரிகள். எளிமையான கவிதை.
சோகத்தில் பிறப்பது சுகமான கவிதை அல்லவா.நிறைய,நிறைவாக எழுதுங்கள் சங்கர் .அன்புடன்,
மோகன்ஜி,ஹைதராபாத்
http://vanavilmanithan.blogspot.com
Post a Comment