பனித்துளி சங்கரின் கவிதைகள் - மை தீர்ந்த தூரிகை !!!


ன் நினைவுகள்
கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம்
ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன்
உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,
எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே
இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
இது போன்ற கவிதைகளாக !.
ன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .!
 
மை தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும்
மனம் அதன் பின்னே ஏனோ
தொடர்ந்து செல்ல நினைக்கிறது .
காரணம் இதுவரை அறிந்ததில்லை !

வ்வப்பொழுது நிகழும் ஏதேனும்
எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியே
என்னை மீண்டும் கடந்தக்கலங்களில்
தள்ளி தாழிட்டு விடுகின்றன !


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம்,

19 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் - மை தீர்ந்த தூரிகை !!! :

எல் கே said...

nalla ninaivugal

Chitra said...

nice. :-)

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள் .... கவிதைகள்.... :)

சௌந்தர் said...

உன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன்//

இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டு இருக்கிறேன்

Unknown said...

//மை தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும் மனம் அதன் பின்னே ஏனோ தொடர்ந்து செல்ல நினைக்கிறது //

அருமை!!

School of Energy Sciences, MKU said...

காதல் கவிதைகளில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை சங்கர். சும்மா பட்டையை கிளப்புறீங்க

vinthaimanithan said...

//உன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .!//

இன்று நீயும் இல்லை. என் பாதைகளும் இல்லை... வெறுமையின் துயரம் மட்டுமே!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே..

க ரா said...

நல்லா இருக்குங்க...

Menaga Sathia said...

very nice!!

GEETHA ACHAL said...

சுப்பர்ப்.......ஓட்டும் போட்டாச்சு...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு..

Unknown said...

nice one :)

அன்பரசன் said...

//அவ்வப்பொழுது நிகழும் ஏதேனும்
எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியே
என்னை மீண்டும் கடந்தக்கலங்களில்
தள்ளி தாழிட்டு விடுகின்றன !//

சரிதாங்க...

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு..!

முனியாண்டி பெ. said...

it's good one

Thenammai Lakshmanan said...

உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,
எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே
இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
இது போன்ற கவிதைகளாக !.//
அருமை சங்கர்..

ponraj said...

மிக அருமை!!!

Mohamed Faaique said...

gud...