கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!
உடல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
தோட்டாக்களின் சத்தங்களும்,
தமிழனின் கதறல்களும் மட்டுமே
இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது
நிசப்த இரவுகளிலெல்லாம்
தனிமை என்ற பெயரில் .!
இரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்
சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறது
உள்ளம் .!
தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !
இறந்த உடலென்று உணராத
குழந்தையொன்று அங்கு
அழுகை நிறுத்தி கொங்கைகளை
சவைந்துகொண்டிருக்கிறது .
அழுகை நிறுத்தி கொங்கைகளை
சவைந்துகொண்டிருக்கிறது .
காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று .
எஞ்சியதை இழுத்து செல்ல
எதிர்பார்புகளை எல்லைகளில்
நிறுத்தி காத்திருக்கும்
ஓநாய் ஒன்று .
இவர்களின் உயிர்களை எல்லாம்
குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்
ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள் . என
ஒவ்வொன்றாய் பார்த்து ரசித்த இரவொன்று
இறந்துபோனது பகலை பிரசவித்த
சில நொடிகளில் !!!!....
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
24 மறுமொழிகள் to ஈழம் கவிதைகள் - சிறைப்பட்ட சுவாசங்கள் :
வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
//இவர்களின் உயிர்களை எல்லாம்
குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்
ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள்//
எதிரிகளின் துப்பாக்கி மட்டுமல்ல நம்பியவர்களின் துப்பாக்கி கூட பல முறை வெடித்திருக்கிறது..
பாதிக்கப்பட்டது அப்பாவிகள் மட்டுமே.
கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைக்கும் சக்தி உங்கள் கவிதைகளுக்கு இருக்கிறது
கண்ணீரை ஏற்படுத்துகிறது
கவிதை படிச்சு மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ..
எங்கோ படித்து
"என் கல்லறை மீது எழுதுங்கள்,
என் மரணத்திற்கு காரணம்
என் தாய் மொழி என்று - ஈழ தமிழன்
"இரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்
சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறது
உள்ளம் .!"
நல்லாருக்கு சங்கர்.
மீண்டும் அனுபவித்த கலக்கம்.:(
கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!
//
துணை போவதும் தமிழ் ரத்தங்கள் தான்..
மறக்க நினைத்தாலும் மனதிலேயே காயமாகிவிட்ட மாறாத வடுக்கள்.
//காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று//
மனதை தொடும் கவிதை வரிகள்,என்றும் ஆறாத ரணங்கள் உங்கள் கவிதையில் தெரிகிறது.
வலிதரும் வரிகளில் கவிதைகள்..
மனதில் ஒரு வலி.!
என்னத்த சொல்லுறது.. தல..!!!
ஆறுதலுக்காய்.... இதுபோன்ற கவிதைகள் மட்டுமே..
எஞ்சியுள்ளது என்பதை நினைவுபடுத்தும் கனமான வரிகள்... படித்த பின் ரணமாகிப்போனது...
எம் மனதும்... மீண்டும் ஆறுதலுக்காய் ஒருமுறை வாசிக்கிறேன்.
தமிழ்
மாநாட்டில்
தமிழன்
சுடுகாட்டில் ...
தமிழ்
பந்தலில்
தமிழன்
பாடையில் ...
தமிழ்
ஏட்டில்
தமிழன்
வயுத்துபாட்டி
best kavithaikal... eeram kannil thanks
// கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் //
மீண்டும் மீண்டும் படித்தாலும் அருமையாக இருக்கிறது சங்கர்.
வலிதரும் கவிதைகள்.
great sankar....painful memories.
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life
வலிகளை அடக்க முடியாது.உங்கள் கவிதை யுத்தம் தொடர வாழ்த்துக்கள். பிரியமுடன் கிருபா .
காக்கைக்கும் கழுகுக்கும் பங்காளி சண்டை, இறந்த தமிழனை யார் ருசிபதென்று.....
இதில் யார் காக்கை, யார் கழுகு என்பது நாம் அனைவரும் அறிந்ததே ...
இந்த வரிகள் நிச்சயமாக ஒவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்பும் வரிகள்...
சங்கர் அவர்களுக்கு நன்றி ...
ஈழம் கவிதைகள்!!!
ஒவ்வொரு வலைப் பக்கத்திலும் நான் காணும் ஒரு பிரிவு. குத்திக் காட்டவில்லை சகோதரனே, ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. குமரிக் கண்டக் காலம் முதல் காலம் தப்பி கவிதை பாடுதலே எமது தொழிலாகி விட்டது. இந்த ஆதரவு ஈழம் தலை நிமிர்ந்து நின்றபோது கிடைக்கவில்லை. ஈழத்துக்கெதிராக இலங்கை அரசு பயங்கரவாதப் பிரச்சாரங்களை முடுக்கி விட்ட போது, எல்லா நாடுகளும் பயங்கர வாதம் என்று தடை செய்த போது ஏற்படவில்லை. உங்களை மட்டும் அல்ல புலம் பெயர் நாடுகளில் இருக்கும் எங்களையும் சேர்த்தே சொல்கிறேன்.அன்று இந்த ஆதரவு இருந்திருந்தால், இது பயங்கரவாதம் இல்லை, இது உரிமைப் போர் என்று அன்று நாம் வீதியில் இறங்கிப் போராடியிருந்தால் இன்று எல்லாம் இழந்து பிணக்காடாக மாறியிருக்காது ஈழதேசம். எதிர்ப்பு சிறு பொறியாக இருக்கும் போது வேடிக்கை பார்த்துவிட்டு பெரு
நெருப்பாய் மாறி விழுங்கிய பின் எழுந்து நின்றோம். இன்று கவி பாடி அரற்றுகிறோம். ஒரு வேளை
இது தான் நம் குணமோ? பழம் பெருமை பேசுவதற்கு இனி ஈழமும் உதவும். அங்கே அவர்கள் மட்டும் நடைப் பிணங்களாகவும் பிணங்களாகவும் ...
Post a Comment