அனைவருக்கும் வணக்கம் . முதலில் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் . எப்பொழுதும் இன்று ஒரு தகவல் என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றைப் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்வது வழக்கம் . அதற்கு மாறாக இன்று முதல் அரிய தகவல்கள் ஆயிரம் என்ற தலைப்பில் வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் பல அறிய குட்டி தகவல்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் . இன்றைய முதல் அரிய தகவல் ஆயிரத்தில் முதல் தகவலை தொடங்கி இருக்கிறேன் .
சரி இனி மேட்டருக்கு வருவோம் . நம் எல்லோருக்கும் மரங்களை தெரியும் !? என்னடா இவன் மரங்களை தெரியும் என்று எதோ ஒரு அதிசயத்தைப் பற்றி கேட்பதுபோல் கேட்கிறானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது . என்ன செய்வது . இப்படி ஒரு கேள்வியை கேட்கும் அளவிற்குதான் இன்று மரங்களை அழித்துக் கொண்டு இருக்கிறோம் . சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் அதைப் பற்றி பார்க்கத் தொடங்கினால் குட்டி தகவல் மெகா தகவலாக மாறிவிடும் . நம் எல்லோருக்கும் உலகிலேயே மிகப்பெரிய காடு எது என்று கேட்டால் தெரியும் . உலகிலேயே மிகவும் அழகான மரங்களைக் கொண்டு அழகாக காட்சிதரும் இடம் எது என்று கேட்டாலும் தெரியும் . ஆனால் உலகத்தில் அதிக எடையைக் கொண்ட மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது .
சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? சொல்கிறேன் உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அது மட்டும் இல்லாது ஒரே நேரத்தில் இந்த மரத்தின் நிழலில் மனிதர்களாகிய நம்மை நிற்க வைத்தால் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் மேல் வெயில்படாமல் மாலை வரை அமர்ந்திருக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இறுதியான கணக்கெடுப்பின் படி அந்த மரத்தின் எடை சுமார் 2,800 டன் என்றும் ., அடிபாகச் சுற்றளவு 135 அடியாம் . அதன் உயரமோ 260 அடி என்றால் யூகித்துக்கொள்ளுங்கள் எவளவு பெரிய மரமாக இருக்குமென்று .!
என்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . இனி வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த அரிய தகவல்கள் ஆயிரம் வெளிவரும் . ஆவலுடன் எதிர்பாருங்கள் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
28 மறுமொழிகள் to அறிந்துகொள் அரிய தகவல்கள் ஆயிரம் - அதிசய மரம் :
தகவலுக்கு நன்றி. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அரிய தகவல் அருமை. தொடருங்கள்....
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பரே!
வியப்பான தகவல் நண்பா...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
உண்மைலயே அறியத் தகவல்தான் ஷங்கர். சுதந்திர நாள் நல வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.நல்ல தகவல்!
நல்லதொரு தகவல் பகிர்வு...
ஒன்று நம்பர் ஒன். அதுவும் மரம்:)
general sherman சமீபத்தில்தான் பார்த்தேன். ப்ரமாண்டமா இருந்தது.
http://www.flickr.com/photos/surveysan/2643142177/
அரிய தகவல்.சுதந்திரதின வாழ்த்துக்கள்.
அரிய தகவல்கள். தொடருங்கள்....
நல்ல தகவல்.. இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்...
நல்லதொரு தகவல் பரிமாற்றம் சங்கர்.
நல்ல விசயங்க.. இந்த மாதிரி இன்னும் நிறைய தகவல்களைக் கொடுங்க..
அரிய தகவல்களுக்கு நன்றி. உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
வெங்கட்.
தங்களுக்கும் இனிய 64வது சுதந்திர தின நல்வாழத்துகள். நண்பரே..! வழக்கம்போல் இத்தகவலும் அதியப்படுத்தும் வகையில்தான் இருந்தது. பகிர்வுக்கு நன்றி..!
அருமை சகோதரா. முதலில் சுதந்திரதினம் கொண்டாடும் உங்களுக்கு சுதந்திரமில்லாத இந்த வன்னி மகனின் வாழ்த்துக்கள். கட்டாயம் ஒவ்வொரு ஞாயிறும் காத்திருப்பேன்.
நல்ல தகவல்.சரி..தளத்தில் ஏனித்தனை ராமராஜப் பச்சை?
உம்மை மரமாக நான் கருதிகிரேன்
Very Interesting!
Nalla Thodakkam...Engey Mudihirathu endru paarpom
இரண்டரை லட்சம் மக்கள் அமரும் அளவு அவ்வளவு பெரிய மரமா..!!
அரிய தகவலும் அருமை. வாழ்த்துக்கள்
மரம் தான் மரம் தான் மனிதன் மறந்தான்...எனும் வைரமுத்துவின் கவிதை ஞாபகம் வருகிறது.
தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகிறது . ஒரு மரம் பெரிய நகரமாக இருக்கிறது .
இது வரை எனக்கு தெரிந்து பெரியமரம் பார்த்தது, ஆனைமலை டாப்ஸ்லிப் போகும் வழியில் உள்ளது 7 நபர்கள் மனித சங்கிலியாக வட்டமாக கோர்த்து நிற்கலாம்..நிங்கள் குறிப்பட்டது உலக அதிசயமாக அல்லவா இருக்கிறது.
தகவலுக்கு நன்றி..தொடர வாழ்த்துக்கள்.
தமிழ் ப்ளாக் வழியாக ஆங்கில கூகிள் விளம்பரங்கள் வரவைக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க கூகிள் வழியா
Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India
நன்றி சங்கர். இனி எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் புதுபுதுத் தகவல்களை அறியலாம்.
இந்த அரிய தகவலை அறியக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. பிரமிப்பாக இருக்கிறது.
நன்றி சங்கர். இனி எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் புதுபுதுத் தகவல்களை அறியலாம்.
இந்த அரிய தகவலை அறியக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. பிரமிப்பாக இருக்கிறது.
Post a Comment