கனவுகள் சுமக்கும்
சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது
உடல் என்ற பெயரிட்டு
ஒற்றை மனிதனுக்கு
பதிவியினால் ஒன்று
பாசத்தினால் ஒன்று
கோபத்தினால் ஒன்று
சாதனையினால் ஒன்று
சாதியினால் ஒன்று
சண்டையினால் ஒன்று
நிறத்தினால் ஒன்று
குணத்தினால் ஒன்று என
ஒவ்வொருவரின் இதழ்களிலும்
உதட்டு சாயம் போல் ஒட்டி
ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன
சற்றுமுன்வரை....
அத்தனையும் மாறிப்போனது
இறந்து போன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்...
பிணமென்று . .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
28 மறுமொழிகள் to கவிதைகள் - புதிய மனிதன் ஒற்றை நாணயம் :
///அத்தனையும் மாறிப்போனது
இறந்து போன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்...
பிணமென்று . .
///
உண்மை ..!!
நாலணா ரூவாயாயிடுச்சா? வெலவாசிய என்ன சொல்ல..
அருமையான கவிதை !
//கனவுகள் சுமக்கும் சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உடல் என்ற பெயரிட்டு....//
நல்லா சொன்னிங்க :)
///அத்தனையும் மாறிப்போனது இறந்து போன சில நொடிகளில் நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்... பிணமென்று///
ரசித்தேன் நண்பா...
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்...
பிணமென்று .//
வியந்து ரசித்தேன்
அருமையான கவிதை
''''அத்தனையும் மாறிப்போனது இறந்து போன சில நொடிகளில் நெற்றியில் ஒட்டிவைத்தஅந்த ஒற்றை நாணயத்தால்... பிணமென்று . .''''
arumai nanbare.
neenda naatkal aagivittathu
ithu pola oru kavithai
ondrinai padiththu.
ennudaya arasaviyil
neerthaan arasavai kavignar.
நல்லா உரக்க விசில் அடிக்கனும் போல இருக்கு கவிதைய படிச்ச உடனே :)
வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்கும் வைர வரிகள்.. ஒற்றைப்பதிவில் ஒற்றை நாணயத்தின் வலிமையையும் வாழ்க்கையின் எளிமையையும் விளக்கீட்டீங்க.. பாஸ்.
பணம் ஒன்று
பிணம் என்று
சொல்லவைத்ததை படம்பிடித்து காட்டும் அருமையான கவிதை..!
வாவ்... அருமையான கவிதை சங்கர்.
நன்று
சரியா சொல்லி இருக்கிங்க..
கவிதை நல்லா இருக்கு நண்பரே..
பெயர்கள் எல்லாம் சூப்பர்...
சூப்பரப்பு..
உண்மைதான் நண்பா.
அன்புடன் நண்பருக்கு வணக்கம் கவிதை நல்ல இருக்கு !!
ஆடி அடங்கும் வாழ்கையாட ஆறடி நிலமே சொந்தமடா!
எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.பாராட்டுகள்
சகோதரா அருமை ஆனால் இப்ப சில்லறைகளை காணமுடிவதில்லையே
கவிதை அருமை
அருமையான கவிதை !
நச்சென்ற வரிகள். அருமை!
உங்களது கவிதைகள், ஜோக்ஸ், தகவல்கள், பொது அறிவு மொத்தத்தையும் படிக்கும் வாய்ப்பு இன்று கிட்டியது. அனைத்துமே அருமையாக இருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி - அமராவதி காதல் பற்றிய பதிவும், மனித இனம் தோன்றியது பற்றிய ஆராய்ச்சிப்பதிவும் அருமையாக இருந்தன.
நல்லாயிருக்குங்க
ரொம்ப லேட்டா படிச்சிருக்கேன்
// நெற்றயில் ஒட்டவைத்த நாணயத்தால் பிணமென்று //
உண்மைதான்
கவிதை அருமை நண்பா :)
அருமையான கவி
பிணம் போனபின்னும் நின் குணம் பேசும் எனில் நின் குளம் வாழும்வரை நின் புகழ் வழுமில்லையா
http://marumlogam.blogspot.com
///அத்தனையும் மாறிப்போனது
இறந்து போன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த
அந்த ஒற்றை நாணயத்தால்...
பிணமென்று . .
///
உண்மை ..!!
கவிதை ஸ்பெஷலிஸ்ட்டே,கலக்கறீங்களே
Post a Comment