அனைவருக்கும் வணக்கம் . என்னதான் அறிவியலின் வளர்ச்சியால் இன்று மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே சென்றாலும் இன்னும் அதி காலங்களில் பயன் படுத்திய சில விசயங்கள் மாறாமல்தான் இருக்கிறது . அதில் பழமொழிகளும் ஒன்று.
சரி இந்த பழமொழி என்றால் என்ன இதுவரை இதற்கு நமது முன்னோர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன முதலில் அதைப் பாப்போம் பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.
பொதுவாக . நம்மில் பலர் பேசும்பொழுது ஒவ்வொரு விசயத்திற்கும் ஏதேனும் ஒரு பழமொழியோ அல்லது உதாரண கருத்தையோ சொல்வதை நாம் பார்த்திருப்போம் . அந்த வகையில் எல்லோருக்கும் தெரிந்த பழமொழிகள் பல . அப்படி நாம் எல்லோரும் அறிந்த பல மொழிகளின் உண்மையான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை .
சரி இன்று நாம் இன்று ஒரு தகவலின் வாயிலாக எல்லாப் பழமொழிகளின் உண்மையான விளக்கங்களை அறிந்துகொள்ள இயலாவிட்டாலும் இன்று அனைவரும் அறிந்த ஒரு பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவென்று அறிந்துகொள்வோம் .
நம் எல்லோருக்கும் ''ஆறிலும் சாவு , நூறிலும் சாவு '' என்ற ஒரு பழமொழி பற்றி நன்றாகத் தெரியும் . ஆனால் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் மற்றும் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது என்று கேட்க நேர்ந்தால் பலருக்கு இதற்கான பதில் தெரிந்திருக்க வாய்புகள் இல்லை . சரி இனி விசயத்திற்கு வருவோம் . நம் எல்லோருக்கும் இந்த ஆறிலும் சாவு ' , நூறிலும் சாவு ' என்ற பழமொழிக்கான விளக்கம் . சாவு என்பது ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியும் . ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையும் நிலையற்ற ஒன்று என்பதை குறிப்பதாக இந்த பழமொழி அமைந்தாலும் . இந்த பழமொழியின் உண்மையான பொருள் இதுவல்ல .
சரி அப்படி என்றால் இதன் உண்மையான பொருள் என்ன . சொல்கிறேன்
குருசேத்திர போரில் , சண்டை தொடங்குவதற்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்து கொண்ட குந்திதேவி , தனது மகனை காப்பாற்றும் எண்ணத்தில் . கர்ணனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைத்தார்களாம் . அப்போது தாயான குந்திதேவிக்கு பதிலளித்த கர்ணன் : ' அன்னையே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் . ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி இறந்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே சேர்ந்து போரிட்டு உயிரை விடுகிறேன் ' என்றான் கர்ணன் . இந்த நிகழ்வுதான் மேலே குறிப்பிட்டு இருக்கும் ' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்ற பழமொழிக்கு உண்மையான பொருளாம் .
என்ன நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
33 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 47 - பழ மொழி வரலாறு :
நல்ல தகவல் பனித்துளி அவர்களே !!
பழமொழியும் அதன் விளக்கமும் அருமை
இதுவும் நல்லாத்தான் இருக்கு
நல்ல தகவல்! அறிவு வளர்ச்சிக்கு உங்களின் வலைபதிவு உபயோகமாக உள்ளது.
அண்ணாச்சி! நம்ப வீட்டு பக்கம் வாங்க! புது பதிவுகள் போட்டிருக்கேன். வாங்க! படிச்சு பாத்து, உங்க கருத்த சொல்லுங்க. மறக்காம ஓட்டும் போடுங்க. சமூகத்துக்கு பயனுள்ள தகவல்களை சொல்லி இருக்கேன். இந்த தகவல்கள், எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு போய் சேரணும்னு எனக்கு ஆசை.
கண்டிப்பா வாங்க! உங்க வருகைக்காக காத்திட்டு இருக்கேன்.
இந்த விளக்கம் எங்கிருந்து கிடைத்தது? போரில் பாண்டவர்கள் யாரும் சாக வில்லையே. அதோடு இல்லாமல் கிருஷ்ணன் பாண்டவர் பக்கம் என்பது கர்ணனுக்குத்தெரியுமே.
வாங்க virutcham
நான் இங்கு பாண்டவர்கள் இறந்துவிட்டதாக எழுதவில்லையே ! அதுவும் இந்த உரையாடல் போர் தொடங்குவதற்கு முன்பு நடந்த ஒன்றே .புரிதலுக்கு நன்றி
தல.. வழக்கம்போல அசத்திடீங்க.. ஒரு பழமொழியை வைத்து இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.. ம்ம்.. தொடருங்க.. இப்ப வலைப்பக்கத்தில பழமொழிக்கான காலம்னு நினைக்குறேன்.. ஏன்னா நிறைய பதிவர்கள் அந்த ஆராய்ச்சில ஈடுபட்டு புது புதுசா சொல்லுறாங்க.. தங்களது பதிவை படித்த பிறகும் அப்படிதான் தோன்றியது. உங்க தெளிவுரையும் சரியாகவே இருந்தது. இதுபோல் நிறைய தகவல்கள் கொடுங்கள்.! கனிமொழியும், கணினிமொழியும் - ஓர் ஒப்பீடு. http://dpraveen03.blogspot.com/2010/08/blog-post.html ஆவலுடன் என்றும் தங்களது வலைப்பதிவு வாசகனாய் பிரவின்குமார்...
நல்ல பகிர்வு! பழமொழிகள் குறித்த விளக்கம் புதுமை!
ஓ.. இதான் பொருளா..
:)
பனித்துளி சங்கர் அவர்களுக்கு ...வணக்கம்.. "ஆறிலும் சாவு ..நூறிலும் சாவு" எனக்கும் வயது ஐம்பது ஆகப்போகுது ..இப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை இப்போதுதான் அறிந்தேன்..நல்ல தகவல்..பதிவுக்கு நன்றி..!
பழமொழிக்கு விளக்கம் அருமை.
தகவலுக்கு நன்றி.
நல்ல தகவல்.
நல்ல தகவல்.
அன்புடன் நண்பருக்கு வணக்கம்
பழமொழி என்கிறுந்து வந்தது என்ற உண்மை கண்டறிந்து பதிவு இட்டதற்கு வாழ்த்துக்கள் !
பாவம் கர்ணன். இருந்தாலும் இறந்தாலும் கொடுத்தான். ஒரு பழமொழியை.
arumai nanbare
நல்ல விளக்கம் சங்கர்..அருமை..
super varikal...vazhthukal
தென்கச்சியின் இன்று ஒரு தகவலை வானொலியில் தினமும் கேட்பேன். இனி உங்களின் இன்று ஒரு தகவலை படிக்க உள்ளேன்.
உங்களுக்கு மட்டும் ஆண்டவன் கொஞ்சம் பெரிய மண்டையா வச்சிடானோ?....
உங்களுக்கு மட்டும் ஆண்டவன் கொஞ்சம் பெரிய மண்டையா வச்சிடானோ?....
''ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ''
இந்த பழமொழியின் உண்மை அர்த்தத்தை புரிய வைத்த உங்களுக்கு நன்றி.
பயனுள்ள பகிர்வு.
அருமையான தகவல் மிக்க நன்றி
ரொம்ப நல்லா இருக்கு சங்கர்.
இது போல நல்ல தகவல்களை கொடுத்து தொடர்ந்து கலக்குங்க.
a new learning today...thanks boss
நல்ல பகிர்வு! பழமொழிகள் குறித்த விளக்கம் புதுமை!
உங்கள் விளக்கம் மிகவும் அருமை நண்பரே..ரசித்துப் படித்தேன்..ஆனால்..நாம் பள்ளியில் பயின்ற போது ஏதேனும் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுரை வரைக? என்று சொல்லி 10 மதிப்பெண்கள் தருவார்களே...அந்த பாணியில் இருக்கிறதே...என்ற உணர்வையும் தவிர்க்க இயலவில்லை...ஆனால் நீங்கள் 10 க்கு 10 வாங்கிட்டீங்க தலைவரே....
உங்கள் விளக்கம் மிகவும் அருமை நண்பரே..ரசித்துப் படித்தேன்..ஆனால்..நாம் பள்ளியில் பயின்ற போது ஏதேனும் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுரை வரைக? என்று சொல்லி 10 மதிப்பெண்கள் தருவார்களே...அந்த பாணியில் இருக்கிறதே...என்ற உணர்வையும் தவிர்க்க இயலவில்லை...ஆனால் நீங்கள் 10 க்கு 10 வாங்கிட்டீங்க தலைவரே....
அருமையான தகவல்...வாழ்த்துக்கள்.
ம்ம்ம்... இதுவும் பொருத்தமா தான் இருக்கு.. என்றாலும் நூத்தியொண்ணிலும் சாவுனு இல்லையா சொல்லியிருக்கணும் (விடாக்கண்டன் வாதம்)
அன்னையே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி//
ஆறு ஓகே நூறு எப்படிவரும்? 100 க்கு பிறகு 101 தானே .ஹிஹி
-ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்.
ஆச்சர்யப்படவைத்த தகவல்... அருமை...
-
DREAMER
வணக்கம் . வாழ்த்துக்கள்
Post a Comment