பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!!

யுதம்
எதுவும் தாக்கவில்லை
ஆனால் காயப்படுகிறேன்.
 வலியேதும்
உணர்ந்ததில்லை
ஆனால் விழிகளில் கண்ணீர்

குருதிகள்
எதுவும் வழியவில்லை
ஆனால் உணர்வுகள் கசிகிறது .

ல்லாம் இருந்தும் ஏதுமற்ற
வெறுமை எப்பொழுதும் .
எனது உதடுகள் பேசியதை விட
என் கைகள்தான் அதிகம் பேசும் .

வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே
இதுவரை நான் பேசிய
மிகப்பெரிய உரையாடல் .
அதையும் தனிமையில் மட்டுமே அரங்கேற்றி
மகிழ்கிறது இந்த உள்ளம் .

ல்லோரும் பேசும் நேரத்தில்
நான் மட்டும் நிசப்தத்தின்
எல்லைகளில் வழி மறந்தவனாய் .

ல்லோரும் என்னிடம்
ஏதேதோ சொல்லி
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நான் காது கேளாத ஊமை என்று !.திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

26 மறுமொழிகள் to பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!! :

க ரா said...

சோகம் தாங்கி நிற்கிறது கவிதை. படித்து முடிக்கும் போது கண்களின் ஒரத்தில் கண்ணிர் துளிர்கிறது (:

Praveenkumar said...

நெஞ்சை கனக்க வைக்கும் வரிகள்..! மாற்றுத்திறனாளியின் உணர்வுகளை உணர்த்தும் சோகமான வரிகள். சிந்திக்க வைத்தது நண்பா..!

Unknown said...

வரிகள் தாங்கிய வலிகள்
வதைக்கின்றது என் இதயத்தை
வரிகள் வழுக்கிச் சென்றாலும் வடுக்களை விட்டுச் சென்றது என் மனதில்

அருமையான வலி(ரி)கள்

Unknown said...

மாற்று திறனாளிகளின் வலியை கவிதையாக்கி அவர்களின் வாழ்வியலை கவிதை வரிகளாக தந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி சங்கர்.

தேவன் மாயம் said...

எல்லோரும் பேசும் நேரத்தில்
நான் மட்டும் நிசப்தத்தின்
எல்லைகளில் வழி மறந்தவனாய் .
////
வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகளை வரிகளில் சொல்லிவிட்டிர்கள்!

சின்னப்பயல் said...

"வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே
இதுவரை நான் பேசிய
மிகப்பெரிய உரையாடல்"கலக்கறீங்க சங்கர்.

Sriakila said...

காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வலியைத் தாங்கியுள்ளது கவிதை வரிகள். மனம் கனத்துப் போகிறது.

சுசி said...

அருமையான தலைப்பு.. மௌனச் சிறை..

இப்டி இருக்கும் முடிவிலன்னு எதிர்பார்க்கலை.

sakthi said...

arumai

ஜில்தண்ணி said...

ரொம்ப நேரம் சிந்தித்தேன் இந்த கவிதையை படித்துவிட்டு

அவர்களின் உலகம் எப்படி இருக்கும்,மனநிலை எப்படி இருக்கும் என்று,ஒரு நிமிடம் கலங்கி விட்டேன்

இந்த உணர்வை வர வைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள்

vasu balaji said...

omg. அந்த படமும் கவிதையும்.:(

ஜெயந்த் கிருஷ்ணா said...

வலிகள் தாங்கிய வரிகள்

nis said...

கனமான வரிகள்

sudhanthira said...

Kavidhai super.. super... Excellent....
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Mohamed Faaique said...

NALLAAYIRUKKU...

அருண் பிரசாத் said...

உணர்வுபூர்வமான வரிகள்

கண்ணகி said...

கண்களில் வழியும் நீர் கவிதையின் வெற்றி...வலியுடன்....

'பரிவை' சே.குமார் said...

அருமையான தலைப்பு
மௌனச் சிறை.

வரிகள் தாங்கிய வலிகள்
வதைக்கின்றது.

VELU.G said...

அருமையான வரிகள்

கவி அழகன் said...

அருமை

சசிகுமார் said...

அருமை நண்பரே

எம் அப்துல் காதர் said...

கவிதை அருமை! வாழ்த்துகள்

செல்வா said...

///வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே இதுவரை நான் பேசிய மிகப்பெரிய உரையாடல் ///
சோகத்தை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள் அண்ணா ..!!

அருண் said...

//எல்லோரும் என்னிடம்
ஏதேதோ சொல்லி
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நான் காது கேளாத ஊமை என்று//

மௌனச்சிறை எதுக்குன்னு நினைச்சேன்,கடைசியில கலக்கிட்டிங்க,கண் கலங்கவும் வைச்சிட்டிங்க.

பவள சங்கரி said...

மனதைத் தொட்ட கவிதை என்றால் அது மிகையாகாது. நன்றி.

முனியாண்டி பெ. said...

அழகானே அதேசமயம் அழுத்தமான
வலிமையான அதேசமயம் வலியான பதிவு.