இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!

னைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் தினம்தோறும் ஏதோ ஒரு முக்கிய வேலையாக பல இடங்களுக்கு செல்ல நேரிடலாம் அப்பொழுது நாம் எதற்காக செல்கிறோமோ அங்கு நாம் கடைபிடிக்கவேண்டிய சில விதிமுறைகள் பற்றி நமக்கு ஓரளவிற்காவது தெரிந்திருக்கவேண்டும் . அப்படி தெரியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் இன்னும் சில இடங்களில் அந்த துறையை சார்ந்தவர்களுக்கே அவர்கள் செய்யும் வேலை பற்றி முழுமையாக தெரிந்திருப்பதில்லை . இதைவிட மிகப்பெரியக் கொடுமை என்ன என்றால் படிப்பறிவற்ற சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சில அடிப்படை அறிவு கூட அதிகம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை இதுதான் உண்மை .


தை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் இப்படிதான் ஒருமுறை எனது நண்பர் கணினி வல்லுனர் ஒருவர் தனது குழந்தைக்கு போலியோ மருந்து கொடுக்க அழைத்து சென்றிருக்கிறார் . அங்கு வரிசையில் நிற்கும்பொழுது அழுகின்றக் குழந்தைகளை சமாதானம் செய்வதற்காக ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு சிலர் தாய் பாலும் பலர் புட்டிப் பாலும் கொடுத்திருக்கிறார்கள் . அப்பொழுது இவரின் குழந்தையும் அழுகத் தொடங்கவே இவரும் வேறு வழியின்றி அருகில் இருந்த டீ கடையொன்றில் பால்வாங்கி தனது குழந்தைக்கு கொடுத்து அதன் அழுகையை நிறுத்தியதாகவும் . ஒருவேளை அந்த டீ கடை மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் தனது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று அவர் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற அனுபவத்தை சொல்லிகொண்டிருந்தார் .அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் கொடுத்ததில் இருந்து எவளவு நேரம் கழித்து போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்கள் என்று . அதற்கு அவர் கொடுத்தப் பதில் எனது கோபத்தை அதிகப்படுத்தியது . பால் கொடுத்து ஐந்து நிமிடத்தில் சொட்டுமருந்து கொடுத்துவிட்டார்கள் உடனே வீடு திரும்பிவிட்டேன் என்று கூறினார் .

ண்பர்களே இதில் என்ன தவறு இருக்கிறது என்று பலருக்கு புரியாமல் இருக்கலாம் சொல்கிறேன் . எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும் , பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது . ஒருவேளை நாம் அவ்வாறு நாம் பால் கொடுக்க நேர்ந்தால் அரசு கொடுக்கும் போலியோ சொட்டு மருந்தின் சக்தியை முற்றிலும் தாய் பால் செயலிழக்க செய்துவிடும் . இதுவரை இந்த தகவல் தங்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அழைத்து செல்லும் எத்தனை பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை ?.

னைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் இடங்களில் இந்த தகவலை தெளிவுபடுத்தும் ஓவியங்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழிலும் எழுதி வைத்தால் நலமே ! செய்வார்களா இன்றைய மக்கள் ஆர்வலர்கள் !?????

டிஸ்கி :டித்த இந்த நண்பரே இப்படி இருக்கிறார் என்றால் . படிப்பறிவின்றி தங்களின் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்க வரும் மற்றவர்கள் எந்த அளவில் விழிப்புணர்வு அடைந்திருப்பார்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள் . இயன்றால் தங்களால் இயன்றவரை அனைவருக்கும் இதைப் பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் . வரும் புதிய தலைமுறையாவது  ஊன்றுகோல் இன்றி நடக்கட்டும் .! 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.50 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!! :

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் நல்ல தகவல் நண்பரே....

வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் பணி...

ஆர்வா said...

அனைவருக்கும் உபயோகப்படும் விஷயம்

Unknown said...

விழிப்புணர்வு மிக்க தகவல்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

Praveenkumar said...

விழிப்புணர்வுமிக்க சிந்திக்கவைக்கும் தகவல்கள் நண்பரே..! நிச்சயம் இச்செய்தியை எனக்கு தெரிந்த நண்பர்களிடமும், கிராமத்து மக்களிடமும் எடுத்துக்கூறுகிறேன். நீங்கள் கூறியதுபோல் தனிப்பட்ட மனிதன் எடுத்துக்கூறுவதை விட போலியோ சொட்டு மருந்து குறித்து அரசாங்கம் விளம்பரம் செய்யும்போதே இது போன்ற மிக முக்கியமான தகவலையும் கட்டாயம் சேர்த்து எடுத்துக்கூறினால் சிறப்பாகத்தான் இருக்கும்..!
ஏதோ கடமைக்கு சேவை செய்கிறோம் என்று செவிலியர்களும் பொது சேவைகளில் ஈடுபடுவர்களும் இதுபோன்ற முக்கிய தகவல்களை தெரிவிப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு மிக மிக அவசியமான பதிவு.. கண்டிப்பாக போலியோ மருந்து கொடுக்கும் செவிலியர்கள் இது பற்றி வினாவி மருந்து கொடுக்கலாம் அவர்களுக்கே இது விபரம் தெர்யுமா ?? சந்தேகமே ..விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு மிக அருமை.

நாடோடி said...

ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வு இடுகை.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ந‌ன்ப‌ரே..

ஸ்ரீராம். said...

போலியோ மருந்து என்பதுடன் பெரிய அளவில் விளம்பரப் படுத்த வேண்டிய விஷயம். நல்ல பகிர்வு.

sathishsangkavi.blogspot.com said...

Very Good Post....

Bruno said...

//எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும் , பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது .//

புட்டிப்பால் தரக்கூடாது என்று தகவல் எங்குள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல்

Unknown said...

மிக மிக அருமையான பதிவு .காரணம் பல பேருக்கு இந்த விடயம் தொடர்பில் தக்க அறிவு இல்லை...இதை பார்த்த பின்பு தான் எனக்கு இப்பிடி ஒரு விஷயம் இருப்பதே தெரிந்தது!!நன்றி!

Bruno said...

//ஏதோ கடமைக்கு சேவை செய்கிறோம் என்று செவிலியர்களும் பொது சேவைகளில் ஈடுபடுவர்களும் இதுபோன்ற முக்கிய தகவல்களை தெரிவிப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. //

தேவைப்படும் தகவல்களை பொது சுகாதார துறை ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

தேவைப்படாத பொய் தகவல்களை அவர்கள் தெரிவிப்பதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை !!

Bruno said...

//இதை பார்த்த பின்பு தான் எனக்கு இப்பிடி ஒரு விஷயம் இருப்பதே தெரிந்தது!!நன்றி!//

எனக்கும் தான் ஹி ஹி ஹி

பனித்துளி சங்கர் said...

வாங்க வெறும்பய
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க கவிதை காதலன்
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நந்தா ஆண்டாள்மகன் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நண்பர்
பிரவின்குமார் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க hamaragana
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நாடோடி
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ஸ்ரீராம்.
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சங்கவி
நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////தேவைப்படும் தகவல்களை பொது சுகாதார துறை ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை
.//////////

வாங்க புருனோ Bruno
நீங்கள் சொல்வதுபோல் இல்லை எனக்குத் தெரிந்து கிராமங்களில் இதைப்பற்றிய எந்த விழிப்புணர்வுகளும் இல்லாமல்தான் இன்னும் இருக்கிறார்கள் மக்கள் .

கடமை என்று வேண்டுமானால் காகிதத்தில் எழுதி வைத்துகொள்ளலாம் ஆனால் அவைகள் நிறைவேற்றப்படுவதில்லை .


////தேவைப்படாத பொய் தகவல்களை அவர்கள் தெரிவிப்பதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை !!/////////

விரைவில் இந்த போலியோ பற்றிய விரிவான எனது பதிவு வெளிவரும் தகுந்த ஆதரங்களுடன் எதிர்பாருங்கள் .

Bruno said...

போலியோ சொட்டு மருந்திற்கும் தாய்ப்பாலுக்கும் தொடர்பு கிடையாது என்று மத்திய அரசின் CSSM புத்தகத்தில் உள்ளது

நீங்கள் எந்த அடிப்படையில் எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை

இது குறித்து நான் தெரிவித்த ஆதாரங்கள் உள்ள மறுமொழிகள் ஏன் உங்களால் அழிக்கப்பட்டன என்று தெரிந்து கொள்ள ஆசை

Bruno said...

//விரைவில் இந்த போலியோ பற்றிய விரிவான எனது பதிவு வெளிவரும் தகுந்த ஆதரங்களுடன் எதிர்பாருங்கள் .//

நீங்கள் எழுதிய இந்த இடுகைக்கும் அடிப்படை அதாவது புட்டிப்பால் தரக்கூடாது என்று தகவல் எங்குள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல்

உடல் நலம் தொடர்பான விஷயம் என்பதால் தான் கேட்கிறேன்

நீங்கள் கூறுவது சரி என்றால் நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டுமல்லவா

Unknown said...

புதிய தகவல். ஆதாரத்துடன் உங்களின் விளக்கமான பதிவுக்காய் காத்திருக்கிறேன்

Bruno said...

Vaccine. 1997 Jul;15(10):1123-9.
Influence of host related factors on the antibody response to trivalent oral polio vaccine in Tunisian infants.

Triki H, Abdallah MV, Ben Aissa R, Bouratbine A, Ben Ali Kacem M, Bouraoui S, Koubaa C, Zouari S, Mohsni E, Crainic R, Dellagi K.

Institut Pasteur de Tunis, WHO Regional Reference Laboratory on Poliomyelitis, Belvédère, Tunisia.
Abstract

The low efficiency of trivalent oral polio vaccine (TOPV) in inducing protective antibody titres to polio3 is a problem of great importance in many regions of the world. A prospective study was conducted in 121 Tunisian infants aged 3 months during routine immunization with TOPV under carefully controlled conditions. Seroconversion rates to polio1, polio2 and polio3, one month after the third dose, were 94.7, 100 and 89.5%, respectively. The kinetics of the antibody response showed delayed and more difficult responses to polio3 compared to polio2 and polio1. The following host related factors, previously suggested to interfere with the immune response, were assessed: maternal antibodies; breast-feeding; concurrent enteric infections; and other illnesses. The main factor associated with the lack of seroconversion was concurrent infection with non-polio enteroviruses (NPE) which was found in 50% of non-responders to polio1 and/or to polio3 during the vaccination protocol whereas no NPE was isolated in vaccine responders. The other studied factors seemed not to interfere in the infants according to the locally adopted vaccination schedule and to the specific socio-economic conditions.

PMID: 9269056 [PubMed - indexed for MEDLINE]

Publication Types, MeSH Terms, Substances
LinkOut - more resources

Bruno said...

MMWR Recomm Rep. 1994 Jan 28;43(RR-1):1-38.
General recommendations on immunization. Recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP).

[No authors listed]
Abstract

This revision of the General Recommendations on Immunization updates the 1989 statement. Changes in the immunization schedule for infants and children include recommendations that the third dose of oral polio vaccine be administered routinely at 6 months of age rather than at age 15 months and that measles-mumps-rubella vaccine be administered routinely to all children at 12-15 months of age. Other updated or new sections include a) a listing of vaccines and other immunobiologics available in the United States by type and recommended routes, advice on the proper storage and handling of immunobiologics, a section on the recommended routes for administration of vaccines, and discussion of the use of jet injectors; b) revisions in the guidelines for spacing administration of immune globulin preparations and live virus vaccines, a discussion of vaccine interactions and recommendations for the simultaneous administration of multiple vaccines, a section on the interchangeability of vaccines from different manufacturers, and a discussion of hypersensitivity to vaccine components; c) a discussion of vaccination during pregnancy, a section on breast-feeding and vaccination, recommendations for the vaccination of premature infants, and updated schedules for immunizing infants and children (including recommendations for the use of Haemophilus influenzae type b conjugate vaccines); d) sections on the immunization of hemophiliacs and immunocompromised persons; e) discussion of the Standards for Pediatric Immunization Practices (including a new table of contraindications and precautions to vaccination), information on the National Vaccine Injury Compensation Program, the Vaccine Adverse Events Reporting System, and Vaccine Information Pamphlets; and f) guidelines for vaccinating persons without documentation of immunization, a section on vaccinations received outside the United States, and a section on reporting of vaccine-preventable diseases. These recommendations are based on information available before publishing and are not comprehensive for each vaccine. The most recent Advisory Committee on Immunization Practices (ACIP) recommendations for each specific vaccine should be consulted for more details.

PMID: 8145710 [PubMed - indexed for MEDLINE]Free Article

Publication Types, MeSH Terms, Substances
LinkOut - more resources

Bruno said...

http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00025027.htm

BREAST-FEEDING AND VACCINATION

Neither killed nor live vaccines affect the safety of breast-feeding for mothers or infants. Breast-feeding does not adversely affect immunization and is not a contraindication for any vaccine. Breast-fed infants should be vaccinated according to routine recommended schedules (59-61).

Inactivated or killed vaccines do not multiply within the body. Therefore they should pose no special risk for mothers who are breast-feeding or for their infants. Although live vaccines do multiply within the mother's body, most have not been demonstrated to be excreted in breast milk. Although rubella vaccine virus may be transmitted in breast milk, the virus usually does not infect the infant, and if it does, the infection is well tolerated. There is no contraindication for vaccinating breast- feeding mothers with yellow fever vaccine. Breast-feeding mothers can receive OPV without any interruption in the feeding schedule.

Bruno said...

Indian Pediatr. 1991 Oct;28(10):1141-5.
Antibody response to three doses of standard and double dose of trivalent oral polio vaccine.

Agarwal A, Sharma D, Kumari S, Khare S.

Department of Pediatrics, Lady Hardinge Medical College, New Delhi.
Abstract

The study was undertaken to compare the antibody response of 6-12 weeks old infants after three doses of standard trivalent oral polio vaccine (TOPV) (Groups A; (n = 42) with three doses of double the amount of TOPV (Group B; n = 35). Seroconversions in Group A were 64.2, 80.9% and 57.1% for Types I, II and III polioviruses, respectively. The corresponding figures for Group B were 77.7, 80.0 and 60.6%, respectively, the differences being insignificant. Differences in feeding practices and presence of maternal antibodies did not affect seroconversion. This suggests that increasing the amount of vaccine virus in each dose is not an alternative to present strategy. Breast feeding and presence of maternal antibodies are not responsible for poor seroconversion.

PMID: 1665840 [PubMed - indexed for MEDLINE]

Publication Types, MeSH Terms, Substances
---

Bruno said...

J Trop Pediatr. 1989 Feb;35(1):19-23.
Antibody response of infants in tropics to five doses of oral polio vaccine.

Chopra K, Kundu S, Chowdhury DS.
Abstract

Sixty-two infants 1-12 months of age were administered five doses of trivalent oral polio vaccine (TOPV) at intervals of 4 weeks. The seroconversion achieved were 88.7, 93.5 and 96.5 per cent for type I, II, and III polioviruses. These seroconversion rates are significantly better when compared to seroconversion achieved after two and three doses of trivalent oral polio vaccine. Factors which were considered in previous studies to be responsible for low seroconversion rates viz. interference by enteroviruses, breast feeding, malnutrition, and age were found to be insignificant when five doses of oral polio vaccine were given. It is possible that these effects were overcome by increasing the number of doses of trivalent oral polio vaccine.

PMID: 2709485 [PubMed - indexed for MEDLINE]

Publication Types, MeSH Terms, Substances

Bruno said...

J Pediatr. 1979 Aug;95(2):333-4.
Breast-feeding and trivalent oral polio vaccine.

[No authors listed]

PMID: 448584 [PubMed - indexed for MEDLINE]

Publication Types, MeSH Terms, Substances
LinkOut - more resources
Full Text Sources:

EBSCO

Medical:

Breast Feeding - MedlinePlus Health Information

Bruno said...

Pediatrics. 1976 Jan;57(1):47-53.
Effect of breast-feeding on seroresponse of infants to oral poliovirus vaccination.

John TJ, Devarajan LV, Luther L, Vijayarathnam P.
Abstract

Three hundred Indian infants between 6 and 51 weeks of age were divided into six groups and given three doses of trivalent oral polio vaccine (OPV) of known adequate potency. One group was on unrestricted breast-feeding with mandatory breast-feed during the interval between 30 minutes before and 15 minutes after each dose of OPV. In four groups of infants breast-feeding was withheld for three, four, five, and six hours both before and after each dose of OPV. The sixth group was bottle-fed. Samples of blood were collected from all infants before vaccination and from 227 infants further samples were collected four weeks after the first and/or third doses of OPV. Antibody responses to poliovirus types 1, 2, and 3 were determined following one dose and three doses of OPV, and the rates of response were found to be approximately equal in all groups of breast-fed infants irrespective of their feeding schedules, as well as in bottle-fed infants. Thus breast-feeding is shown to have no inhibitory effect on antibody response of infants beyond the newborn period to OPV.

PMID: 174056 [PubMed - indexed for MEDLINE]

MeSH Terms, Substances
LinkOut - more resources

Bruno said...

J Pediatr. 1974 Feb;84(2):309.
Letter: Administration of oral polio vaccine in relation to time of breast feeding.

Plotkin SA, Katz M.

PMID: 4810745 [PubMed - indexed for MEDLINE]

MeSH Terms, Substances
LinkOut - more resources
Full Text Sources:

EBSCO

Medical:

Breast Feeding - MedlinePlus Health Information

Bruno said...

J Pediatr. 1979 Aug;95(2):333-4.
Breast-feeding and trivalent oral polio vaccine.

[No authors listed]

PMID: 448584 [PubMed - indexed for MEDLINE]

Publication Types, MeSH Terms, Substances
LinkOut - more resources
Full Text Sources:

EBSCO

Medical:

Breast Feeding - MedlinePlus Health Information

Unknown said...

ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வு இடுகை.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ந‌ன்ப‌ரே..

தொடர்க உமது உரத்தசிந்தனை அ.மாணீக்கவேலு

ஜில்தண்ணி said...

இந்த நோயை நாம் ஒரளவுக்கு கட்டுப்படுத்தி விட்டோம் என நினைக்கிறேன்

ஆனாலும் இதை பற்றிய அறிவு படித்தவர்களிடமும் இல்லை என்பது உண்மை

பால் கொடுத்து இவ்வளவு நேரம் கழித்து தான் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்பது தெரியாத ஒன்று

இதை படித்தாவது நிறைய பேர் கற்றுக் கொள்ளட்டும் :)

வரதராஜலு .பூ said...

நீங்கள் கூறும் இந்த தகவல் பலருக்கும் புதியதாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடுகை

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு பாஸ்

சிவராம்குமார் said...

Very useful information!!! My heartfelt thanks to you... (Donno how to comment in Tamil... Apologies)

கவி அழகன் said...

நல்ல படைப்பு பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

'பரிவை' சே.குமார் said...

விழிப்புணர்வுமிக்க சிந்திக்கவைக்கும் தகவல்கள் நண்பரே..!

வே.வெற்றிவேல் சந்திரசேகர் said...

போலியோ சொட்டு மருந்து தேவையா என்பது குறித்து இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது.அதே நேரத்தில், உங்களுடைய இந்த பதிவு மிகவும் உபயோகமானது. தொடரட்டும் உங்கள் பணி.

செல்வா said...

///படிப்பறிவற்ற சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சில அடிப்படை அறிவு கூட அதிகம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை இதுதான் உண்மை .///
என்னைப் பொறுத்தவரை படிப்பிற்கும் அறிவிருக்கு சம்பந்தம் இல்லை ..
/// பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது .//
பயனுள்ள தகவல் அண்ணா ..!!

Anonymous said...

outstanding information

School of Energy Sciences, MKU said...

மிகவும் பயனுள்ள பகிர்வு. இன்றுதான் நானே இதை பற்றி அறிந்தேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சங்கர்

சுசி said...

மிகவும் நல்ல தகவல்..

Thomas Ruban said...

இதைப்பற்றி என் குடும்ப மருத்துவரிடம் விளக்கம் கேட்டேன் அவர் கூறியது போலியோ மருந்து கொடுப்பதற்கு முன்போ,பின்போ ஒரு மணி நேரத்திற்கு எந்த உணவுப் பொருளும் கொடுக்கக் கூடாது ஏன் என்றால் குழந்தை வாமிட் செய்து விட்டால் போலியோ மருந்தின் வீரியம் போய்விடும் என விளக்கம் அளித்தார்.

பகிர்வுக்கு நன்றி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களை உங்கள் இடுகையினுள்ளேயே சேர்த்து விடுங்களேன். பின்னூட்டம் போடும் பலரும் அந்த ஆதாரங்களைப் படிக்காமலேயே ஒருதலைப் பட்சமாக தகவலைத் தெரிந்து கொள்வதாகவே உள்ளது. இன்று ஒரு தகவல் ஆதாரத்துடன் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா?

உடனடியாக எடிட் பகுதிக்குச் சென்று சேர்த்துவிடுங்கள். அப்போதுதான் இது போன்று சேவை மனப் பான்மையோடு கொடுக்கப் படும் இடுகைகளின் சேவை மன்ப்பான்மை முழுமை பெறும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//முன்போ,பின்போ ஒரு மணி நேரத்திற்கு எந்த உணவுப் பொருளும் கொடுக்கக் கூடாது ஏன் என்றால் குழந்தை வாமிட் செய்து விட்டால் //

ஒருமணிநேரத்தில் முன் கொடுத்த உணவு முழுமையாக ஜீரணித்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அல்லது உணவு கொடுத்தால் கண்டிப்பாக வாமிட் செய்து விடும் என்று நினைக்கிறீர்களா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

712 க்கும் மேற்பட்ட பிந்தொடர்பவர்களைக் கொண்ட மிகப் பிரபல சமுதாய நோக்குகொண்ட பதிவர் என்பதால் உங்கள் இடுகை பற்றீய முழுமையான தகவல்களைத் தரவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதாகவே உங்கள் வாசகர்களாகிய நாங்கள் கருதுகிறோம். நன்றி

Bruno said...

ஐயா

ஆதாரம் தருவேன் என்றீர்களே

நினைவு படுத்துகிறேன் :) :)