சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம் !!!


சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?
 வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1930-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம். இதை ஒட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.தேதி: ஜூன் 1, 2010. செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 6 மணிஇடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை


ரவேற்புரை: பத்திரிக்கையாளர் பாரதி தம்பிருத்துரை:எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யாவழக்கறிஞர் சுந்தர்ராஜன்பெண்ணியலாளர் ஓவியா‘தலித் முரசு’ புனித பாண்டியன்ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சிகொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம்கேள்வி நேரம்: விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர்.

ன்றியுரை: பாஸ்கர்,  கீற்று.காம்


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

15 மறுமொழிகள் to சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம் !!! :

Unknown said...

நானும் வருகிறேன் ..

அமைதி அப்பா said...

நல்ல விஷயம்.

எல் கே said...

nalal visyam

smart said...

ஒட்டு அதிகம் பெற,
உங்கள் தலைப்பை "சாதிக் குசு விடலாம் வாங்க"[மற்றவர்கள் மன்னிக்கவும்] என்று வையுங்கள் வால்பையனுக்கு நீங்கள் போட்ட ஒட்டு போல அனைவரும் உங்களுக்கு ஓட்டிடுவார்கள்.

smart said...

//நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன//
அந்த அடக்குமுறையை மருந்திட்டு குணப்படுத்தவேண்டுமே ஒழிய ஒதிக்கீடு கொடுத்து மூடி மறைக்க கூடாது.

சாதி வாரியாக கணக்கெடுப்பதற்கு பதிலாக பொருளாதார ரீதியில் கணக்கேடுக்கலாமே, உண்மையான வறுமை தீருமே. இன்னும் சாதிப் பெயர்கள் நாம் சமுகத்தில் வேண்டுமா?

பனித்துளி சங்கர் said...

///// smart said...
ஒட்டு அதிகம் பெற,
உங்கள் தலைப்பை "சாதிக் குசு விடலாம் வாங்க"[மற்றவர்கள் மன்னிக்கவும்] என்று வையுங்கள் வால்பையனுக்கு நீங்கள் போட்ட ஒட்டு போல அனைவரும் உங்களுக்கு ஓட்டிடுவார்கள்.//////

நன்றி நண்பரே உங்களின் கருத்து சிறப்பாகத்தான் உள்ளது .

பனித்துளி சங்கர் said...

////smart said...
//நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன//
அந்த அடக்குமுறையை மருந்திட்டு குணப்படுத்தவேண்டுமே ஒழிய ஒதிக்கீடு கொடுத்து மூடி மறைக்க கூடாது.

சாதி வாரியாக கணக்கெடுப்பதற்கு பதிலாக பொருளாதார ரீதியில் கணக்கேடுக்கலாமே, உண்மையான வறுமை தீருமே. இன்னும் சாதிப் பெயர்கள் நாம் சமுகத்தில் வேண்டுமா////


இந்த கருத்தரங்கமே அதற்குத்தான் மேதையே !
புரிதலுக்கு நன்றி !

smart said...

// உங்களின் கருத்து சிறப்பாகத்தான் உள்ளது //
மிக்க நன்றி அண்ணே, கடைசியில் உங்களுக்கு ஓட்டிடுபவர்களை இப்படி அநாகரீகமாக செய்யச் சொல்வது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
உங்கள் சார்பாக ஒருமுறை,
"சாதிக் குசு விட விரும்புபவர்கள் ஓட்டிட்டுச் செல்லவும் வாசகர்களே!"
தேங்க்ஸ்ண்ணா

பனித்துளி சங்கர் said...

/////smart 8 29 May, 2010 14:28
// உங்களின் கருத்து சிறப்பாகத்தான் உள்ளது //
மிக்க நன்றி அண்ணே, கடைசியில் உங்களுக்கு ஓட்டிடுபவர்களை இப்படி அநாகரீகமாக செய்யச் சொல்வது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
உங்கள் சார்பாக ஒருமுறை,
"சாதிக் குசு விட விரும்புபவர்கள் ஓட்டிட்டுச் செல்லவும் வாசகர்களே!"
தேங்க்ஸ்ண்ணா//////

நண்பருக்கு வணக்கம் உங்களின் பிரச்சனைததான் என்ன ?
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை எதர்க்காக நீங்கள் இப்படி கருத்தை வெளியிட்டுகிறீர்கள் என்று எனக்குத் தெளிவுப்பட்டுத்துங்கள். நான் ஒன்றும் அரசியல்வாதி இல்லை எதர்க்காக ஓட்டு ,ஓட்டு என்று ஏதோ சொல்கிறீர்கள் . சற்று புரியும்படியாக சொல்லுங்க நானும் தெரிந்துக்கொள்வேன் .
புரிதலுக்கு நன்றி

smart said...

அண்ணன் திரு வால்பையனின் இந்த நாகரீகமான[?] பதிவிற்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களே அது போல உங்கள் தளத்திலும் தலைப்பு இட்டால் எல்லாரும் ஓட்டிடுவார்கள் என்று ஐடியா கொடுத்தேன்.

அதை நீங்கள் பாராட்டியதால் இன்னொரு முறை அந்த ஐடியாவை கூறினேன். புரிகிறா அண்ணா!

smart said...

Reference:
//இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்//

Jeyamaran said...

அசதுரிங்க போங்க

அ.முத்து பிரகாஷ் said...

நண்பர் பனித்துளிக்கு,
நான் தஞ்சையில் இருக்கிறேன் ...
கலந்து கொள்வது சாத்தியமற்றது ...
மனதார வாழ்த்துக்களும் நன்றிகளும் கீற்று நண்பர்களுக்கு ...

பனித்துளி சங்கர் said...

//////smart 11 29 May, 2010 14:57
Reference:
//இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்//


அண்ணே இது எனது கடமை இங்கு நீங்கள் ஓட்டுப் போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம் . இதைப் பற்றி என்னிடம் கேக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

virutcham said...

கருத்தரங்கு நடந்ததா? ஏதாவது உபயோகமான விளக்கங்கள், விடைகள், தீர்மானங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

http://www.virutcham.com