இன்று ஒரு தகவல் 22 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1

னைவருக்கும் வணக்கம் . இன்று நம்மில் பலர் பல காரணங்களால் பல கடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை அதில் ஒன்று குழந்தை பருவம் என்றும் சொல்லலாம். சிறு வயதில் நம்மை புன்னகை சிந்த வைத்த நிகழ்வுகள் எத்தனை ,எத்தனையோ ! பலர் தடுத்தும் அதைத்தான் செய்வேன் என்று பிடிவாதத்துடன் செய்த தவறுக்களும் பல .ஆனால் இன்று அதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் அளவிற்கு நம்மில் பலருக்கு நேரம் இல்லை .
டித்து பட்டம் பெற்று இன்று பலர் பல சாதனைகள் செய்திருக்கிறார்கள் .படிக்காமல் பலர் பட்டம் பெற்று இருக்கிறார்கள் .இன்னும் பலர் இவைகள் இரண்டும் இன்றி தங்களது வாழ்வை செம்மையாக வழி நடத்துகிறார்கள் . ஆனால் இங்கு அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் வானில் பறக்கும் பட்டம் அறிமுகம்தான் .படித்து வாங்கிய பட்டத்தை பற்றி பலருக்கு நன்றாகத் தெரியும் .அறியாத குழந்தை வயதில் நம்மை மகிழ்ச்சியின் எல்லையை கடக்க செய்த விளையாட்டுகளில் பட்டம் பறக்க விடுவதும் ஒன்று .அந்த பட்டம் பற்றி இன்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று பார்த்தால் பட்டம் என்றால் பறக்கும் இதுதான் அதிகமானோர் சொல்லும் ஒரே பதிலாக இருக்கும் . அதுதான் இன்று அந்த பட்டம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து உங்களின் இதயங்களையும் சற்று நேரம் சுதந்திரமாக விண்ணில் பறக்காவிடப்போகிறேன் .
முதன்முதலில் பட்டங்களைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.சீனாவின் கண்டுபிடிப்பான பட்டம் நவீன விமானங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. காற்றை விட லேசான பலூன் முதன்முதலில் 1783-லும் விசை விமானம் 1903-லும் பறக்கவிடப் பட்டன என்பார்கள். இவை சீனப்பட்டத்தின் வரலாற்றை ஒப்பு நோக்கினால் மிகவும் சமீப காலங்களில் நடந்தவை என்றே சொல்ல வேண்டும்.16-17ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் பட்டம் விற்கவும் வாங்கவும் பட்டிருக்கின்றன. சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பட்டம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது.

சுமார் கி.மு 200ல், ஹ்ஹன் முடியாட்சியின் போது சீனத் தளபதி ஹன் ஹ்யூஸின் ஒரு நகரின் கோட்டைச் சுவரைத் தாண்டிப் பறந்த பட்டத்தை வைத்து, மாளிகையின் அரண்களின் தூரத்தையும் எண்ணிக்கையையும் அறிந்தார்களாம் . அதன் பிறகு, நகருக்குள் புகுந்து ஆக்கிரமிக்கவும் வென்றிடவும் செய்தார்களாம் . முதன்முதலில் பட்டம் பறக்கத் தொடங்கியதற்கான சான்றுகள் இங்கிருந்துதான் தொடங்கின .

ரு முறை ஒரு சீன விவசாயி பறந்து விடாதிருக்க தன் தொப்பியில் ஒரு நூலைக்கட்டிக் கொண்டிருந்தான் என்றும் பலத்த காற்று அடித்ததில் முதல் பட்டம் பிறந்தது என்று சீனப்புராணக்கதை ஒன்றும் சொல்வதுண்டு. பட்டம் ஆசியாவிற்குள் பரவி, பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறு கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணியையும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்திக் கொண்டன. பட்டம் என்பது வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமில்லை. அது விஞ்ஞானத்துறைக்கும் உற்பத்தித் துறைக்கும் பங்களித்திருக்கிறது. பட்டத்தைப் போன்ற வடிவில் தான் முதன்முதலில் விமானங்கள் தயாராகின.பட்டங்களுக்கான அருங்காட்சியகம் அகமதாபாத்திலும், ஜப்பானில் டோக்யோ நகரிலும் உள்ளது. உலகப் பட்டத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் நாள் அகதாபாதில் கொண்டாடப்படுகிறது. சுமார் 2,500 கிலோ எடையுள்ள பட்டம் ஜப்பானில் பறக்க விடப்பட்டது.அமெரிக்காவில் சுமார் 5,400 மீட்டர் உயரத்தில் பட்டம் பறக்க விடப்பட்டது.

திகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் ............


ன்று உலகத்தில் கொடிகட்டிப்பறக்கும் பல துறைகள் இந்த பறக்கும் பட்டத்தினால்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா ? உண்மைதான் இதைப்பற்றிய விரிவான பல அறிய தகவல்கள் மூலம் உங்களை வியப்பில் ஏற்ற மீண்டும் இந்த பட்டம் எனது அடுத்தப் பதிவில் உங்களின் இதய விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் .

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

22 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 22 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1 :

prince said...

ஒரு பட்டத்துக்குள்ள இவ்வளவு விசயங்களா!பிரமிக்க வைத்து விட்டீர்கள் ...

தமிழ் உதயம் said...

ஆச்சர்யப் பட வைத்தது. பட்டம் குறித்த தகவல்கள்.

கவி அழகன் said...

நல்ல தகவல்

வெங்கட் நாகராஜ் said...

பட்டம் பற்றி நல்ல தகவல்கள். தில்லியில் ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் பட்டம் சீசன் களை கட்டும்.

சிநேகிதன் அக்பர் said...

பறக்கட்டும் பட்டம். நன்று சங்கர்.

சௌந்தர் said...

உங்களுக்கு பட்டம் விட தெரியுமா

Praveenkumar said...

நண்பா..! வியக்கவைக்கும் தகவல்கள்..!!!
பட்டம்போல் உங்கள் பதிவுகளும் எப்பவும் மேல்நோக்கியே செல்லும் என்பதில் ஐயமில்லை. பகிர்வுக்கு நன்றி..!

ஜில்தண்ணி said...

பட்டம் விடும் காலாத்தில் தெரியாத செய்திகள்
இப்போது தெரிந்து கொண்டேன்,நன்றி

தொடருங்கள் பட்டத்தை !!

நாடோடி said...

ப‌ட்ட‌த்தை ப‌ற்றிய‌ ப‌ல‌ அறியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்... தொட‌ர்ந்து ப‌ற‌க்க‌ விடுங்க‌..

ஹுஸைனம்மா said...

சில நாட்கள் முன் பட்டத்தில் காமிரா கட்டிவிட்டு வித்யாசமான கோணத்தில் படம்பிடிக்கும் புகைப்படக்காரர் குறித்துப் படித்தேன்.

தொடருங்கள் சுவாரஸ்யத்தை.

settaikkaran said...

உம், வழமை போல கலக்கல் பதிவு! அசத்துறீங்க நண்பா! :-)

சிவாஜி said...

arumai nanpa...

ஜெயந்தி said...

படிச்சு வாங்கற பட்டத்த விட பறக்கற பட்டம்தான் ஜாலி இல்லை.

VELU.G said...

நன்றாக இருக்கிறது நன்பரே.

என்னுடைய சிஸ்டம் பால்ட்டா என்னவென்று தெரியவில்லை உங்கள் பிளாக் மிகவும் கருப்பான பேக்ரவுண்டில் தெரிகிறது சரியாக படிக்க முடியவில்லை

S Maharajan said...

நன்றாக இருக்கிறது நன்பரே.

ஷர்புதீன் said...

:) good and nice
i know how to make 5 to 10 feet kites

ஷர்புதீன் said...

:) good and nice
i know how to make 5 to 10 feet kites

Prasanna said...

தகவல்களை சுவாரஸ்யமாக அள்ளி தருவதில் உங்களுக்கு PhD 'பட்டமே' கொடுக்கலாம் :)

ஸ்ரீராம். said...

பட்டத் தகவல்கள் நன்று சங்கர். கடந்த ஜனவரியில் ' எங்கள் ப்ளாக் பட்ட வாரம் கொண்டாடியதன் சுட்டி தந்துள்ளேன்...ஜனவரி பதினேழு முதல் ஒரு வாரம் பட்டம் பற்றிய 'எங்கள்' பதிவுகளை இங்கு படிக்கலாம்

http://engalblog.blogspot.com/2010/01/blog-post_17.html

prince said...

வாழ்த்துக்கள்!! நண்பரே தங்களது பதிவு கீற்றில் வெளியாகி உள்ளதற்கு....மற்ற நண்பர்களுக்காக கீற்று இணைப்பு இங்கே :: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8880:-1&catid=44:general&Itemid=123

Chitra said...

உங்கள் இடுகை கொடி கட்டி பறக்குது...... நல்லா இருக்குதுங்க.

எல் கே said...

நண்பரே, வடஇந்தியோவில் நடைபெறும் பட்டப் போட்டியை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ??