இன்று ஒரு தகவல் 23 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -2 !!!

  னைவருக்கும் வணக்கம் ."இன்று ஒரு தகவல் 22 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய PART - 1 பதிவு கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம் .


ட்டம் பற்றிய முதல் பதிவில் இன்று உலகத்தில் கொடிகட்டிப்பறக்கும் பல துறைகள் இந்த பறக்கும் பட்டத்தினால்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா ? உண்மைதான் இதைப்பற்றிய விரிவான பல அறிய தகவல்கள் மூலம் உங்களை வியப்பில் ஏற்ற மீண்டும் இந்த பட்டம் எனது அடுத்தப் பதிவில் உங்களின் இதய விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் என்று முடித்திருந்தேன் இதோ மீண்டும் உங்களின் இதயங்களை விண்ணை நோக்கி பறக்கவிடப்போகிறது பட்டம் பற்றிய இந்த தகவல்கள்


திகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் பெரிதாக இருந்தன என்று வரலாறு சொல்கிறது. சில வேளைகளில் எதிரிகள் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வீசியெறியவும் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன.


ன்று நாம் இ -மெயிலிலும் . SMSலும் எளிதாக பரிமாறிக்கொள்ளும் செய்திகளை ஒரு காலத்தில் பட்டத்தில் கட்டி பறக்க விட்டு இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?ஒருமுறை லியாங் முடியாட்சியில் வூதியின் பேரரசர் ஸியாவ் யான் (கி.பி 464-549) நான்ஜிங்கின் தாய்ச்செங்கில் ஹோவ் ஜிங்கின் கீழிருந்த கலகக்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டார். அப்போது பேரரசர் ஒரு பட்டத்தில் தான் அவசர உதவி கேட்டு செய்தி அனுப்பியிருக்கிறார். உதவியும் வந்திருக்கிறது!


தூரத்தைக் கணக்கிடவும், காற்றின் வேகத்தைக் கண்டறியவும், மனிதனை உயரப் பறந்து கூட்டிப்போக, செய்திகள் அனுப்ப, தொலைத் தொடர்புக்கு, இராணுவப் பயன்பாடுகளுக்கு என்றும் பல்வேறு விஷயங்களுக்குப் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. மிகப்பழைய சீனப்பட்டம் தட்டையாக இறக்கைகளில்லாமல் தான் இருந்தது. பிறகு, வாலில்லாமல் இறக்கைகளுடன் உருவாகின. அதன் பிறகு, ஊதல்கள் மற்றும் நூல்களை இணைத்துச் செய்தார்கள். இவ்வகைப் பட்டங்கள் பறக்கும் போது இனிய இசையை உருவாக்கின.


ப்பொழுதெல்லாம் ஏற்படும் சண்டைகளை கட்டுக்குள் கொண்டு வர பல ஆயிதங்களைப் பயன்படுத்துகிறது ஒவ்வொரு நாடுகளும் ஆனால் கி.பி 600ல் ஒரு முறை கொரியாவின் ஒரு கலகத்தைக் கட்டுக்குள் கொண்டு வர தளபதி கிம் யுன்-ஸின்னுக்கு கட்டளையிடப்பட்டது. ஆனால், அவரது படைகள் சண்டையிட மறுத்தன. அப்போது வானில் ஒரு எரிநட்சத்திரம் விழுவதைக் கண்டனர். முதலில் அதை துர்சகுனம் என்று கருதினர். அவர்களை அவ்வாறு நம்ப வைக்க தளபதி தான் ஒரு பட்டத்தில் நெருப்புப் பந்தை இணைத்துப் பறக்கவிட்டார். படை வீரர்கள் விழுந்த நட்சத்திரம் மேலேறிச் சென்றதைக் கண்டது நல்ல சகுனமாகக் கருதி உற்சாகமாகப் போரிட்டு கலகக்காரர்களை வீழ்த்தியிருக்கிறார் . (618-907) மத்தியில், சீனச்சமூகம் அப்போதுதான் பட்டுக்கு பதிலாகக் காகிதம் உலகத்தில் முதன் முதலில் பயன்படுத்ப்பட்டதாம் .கி.பி 1232ல், மங்கோலிய எல்லையில் பட்டங்கள் அம்புகள் மற்றும் வில்களுடன் வீரர்களை உயரே பறக்க விடப் பயன்பட்டிருக்கின்றன. அங்கிருந்து எதிரிகளைத் தாக்கியிருக்கிறார்கள்.


ரோப்பாவிற்குப் பட்டத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமை முதன் முதலில் மார்கோ போலோவிற்கே சேரும் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் பட்டத்தை மார்கோ போலோ இத்தாலிக்குக் கொண்டு போனார். பின்னர், 1500களில் ஐரோப்பாவிற்குப் பரவியது. அதன் பிறகு, ஐரோப்பியர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் பட்டம் பல்வேறு வழிகளில் உதவிற்று. கடல் வணிகத்தின் போது வேண்டாதவருக்குத் தண்டனையளிக்க, மீன்பிடித்துறையில் மீன்பிடிக்க, மதக் கொண்டாட்டங்களில் அலங்கரிக்க, வானிலையைக் கணிக்க, காற்றின் வேகத்தை அறிய என்று ஏராளமான பயன்பாடுகள் பட்டத்திற்கு இருந்திருக்கின்றன.


த்துடன் நின்று போகவில்லை இந்த பட்டத்தின் சாதனைகள் இன்று உலக மக்கள் தொகையையும் பின்னுக்குத் தள்ளும் அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் போக்குவரத்துதுறையிலும் பட்டம் உதவியிருக்கிறதென்றால் சிலரால் நம்ப முடியாமலிருக்கலாம். பட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சக்தியை ஆய்ந்தறிந்தவர் ஜியார்ஜ் பொக்கோக். 1822ல், இவர் ஒரு ஜோடி பட்டங்களைக் கொண்டு ஒரு வண்டியை ஒரு மணி நேரத்தில் 20 மைலுக்குச் செலுத்தியிருக்கிறார். அவரின் சில பயணங்கள் ஒருமணி நேரத்தில் 100 மைல் வரையிலும் கூட இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் ஒரு வண்டியில் பூட்டியிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பொருத்தே சாலைவரி விதிக்கப்பட்டது. ஆகவே, இவரின் இப்பயணங்களுக்கு வரி விதிக்கப்பட வில்லை!


ன்று வானிலையை ஆராய்வதற்கு அறிவியலால் ஆயிரம் கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கிறது . ஆனால் நமது முன்னோர்கள் இதே வானிலையை ஆராய்வதற்கு பட்டங்களைப் பயன்படுத்தினார்கள் என்றால் நம்புவீர்களா ? 1782ல், பென்ஜமின் ஃப்ராங்க்லின் எனும் அமெரிக்க விஞ்ஞானி மின்னலையும் இடியையும் ஆராய்ந்தறிய பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர் பட்டங்களைக் கொண்டு செய்த ஆய்வுகளின் மூலம் காற்றுவெளியில் இருந்த மின்சாரத்தை ஆராய்ந்தார். அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மற்றும் ரைட் சகோதரர்கள் ஆகியோரும் பட்டங்களைக் கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெட்டி வடிவிலான பட்டங்களைக் கொண்டு 1890களில் துவங்கி 40 ஆண்டுகளுக்கு காற்றின் வேகம், வெப்பம், அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள்.இன்றும் மீனவர்கள் தூண்டிலைக் கடலுக்குள் விட பட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். புகைப்படக்கலைஞர்கள் பட்டத்தின் உதவியுடன் மேலிருந்து பருந்துப் பார்வையில் புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.


ன்று நம்மை எல்லாம் ஆகாயத்தில் பறக்க செய்து பல ஆயிரம் கிமீ தொலைவுகளை எளிதாக கடக்க செய்யும் இந்த விமானங்கள் உருவாவதற்கு ஒரு உந்துதலாக பயன்பட்ட முக்கியக் காரணிகளில் பறக்கும் பட்டமும் ஒன்று என்றால் நம்புவீர்களா ? .1894 நவம்பர் 12ல், லாரென்ஸ் ஹார்கிரேவ் என்பவர் தனது பட்டத்திலேறி நிலத்திலிருந்து எம்பிச் சிறிது தூரம் பறந்தார். அன்றே அவர் விமானத்தைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்தார் என்று சொல்லலாம். மேலும் நுட்பமாக ஆராய்ந்து வளைந்த இறக்கைகள் கொண்டதும் விசையுடனானதும் என்று பல்வேறு வகைப் பட்டங்களை உருவாக்கினார். அத்துடன் வானிலைக் கருவிகளும் புகைப்படக் கருவிகளையும் பட்டங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டுபிடித்தார். தன் கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெறத் தவறி விட்டார். மனிதகுல மேன்மைக்குப் பயன்படட்டும் என்று கருதிவிட்டார். ஆகவே, அவரது ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வில் இறங்கி இலாபம் ஈட்டியோரைத் தாக்கிப் பேசினார்.
மக்குத் தெரிந்ததெல்லாம் விமானங்கள் மட்டும்தான் மனிதர்களை தாங்கிக்கொண்டு விண்ணில் பறக்கும் என்பதுதானே ஆனால் எந்த அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இன்று நாம் பறக்கவிட்டு பரவசப்படும் இந்த பட்டத்தில் மனிதர்கள் பரந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?? உண்மைதான் இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில் பட்டம் மீண்டும் உங்களின் இதயங்களை சுமந்து மகிழ்ச்சியில் விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் .


 பட்டம் பறப்பது மீண்டும் தொடரும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

21 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 23 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -2 !!! :

எல் கே said...

மிக அரியத் தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

movithan said...

பட்டம் பற்றி பல புதிய தகவல்கள்.
நன்றி

Unknown said...

விரிவான ஆய்வுகள் தலைவரே... பாராட்டுக்கள்

சிநேகிதன் அக்பர் said...

சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி சங்கர்.

Ahamed irshad said...

தகவல்கள் நன்று...

வந்து வாங்கிக்கொள்ளுங்கள் விருதை.. http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

வெங்கட் நாகராஜ் said...

அரிய தகவல்களுடன் ஒரு அற்புதப் பதிவு. தொடருங்கள் நண்பரே.

சௌந்தர் said...

பட்டம் பற்றி 2 பதிவு

நாடோடி said...

சுவையான‌ த‌க‌வ‌ல்க‌ள்... தொட‌ர்ந்து ப‌ற‌க்க‌ விடுங்க‌..

ஜில்தண்ணி said...

என்னது பட்டத்துல பயணம் செய்தார்களா
நல்ல தகவல்கள்
நன்றி

Anonymous said...

//1782ல், பென்ஜமின் ஃப்ராங்க்லின் எனும் அமெரிக்க விஞ்ஞானி மின்னலையும் இடியையும் ஆராய்ந்தறிய பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர் பட்டங்களைக் கொண்டு செய்த ஆய்வுகளின் மூலம் காற்றுவெளியில் இருந்த மின்சாரத்தை ஆராய்ந்தார்//

இது எப்படி செய்தார்கள்??
பட்டத்துல இவ்வளவு தகவல் இருக்குதா???

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் .. பட்டத்துக்குள்ள இவளவு திட்டமா ?
தகவல்களுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

தமிழ் மதுரம் said...

நல்ல ஒரு ஆராய்ச்சிப் பதிவு. இன்று தான் முதன் முதல் உங்களின் இப் பக்கத்திற்கு வந்தேன். வாழ்த்துக்கள் நண்பா. தொடர்ந்தும் நிறைய எழுதுங்கோ..
பட்டம் பறக்க விட நான் றெடி? நூலைக் கொண்டு ஓட நீங்கள் றெடியோ?

ஷர்புதீன் said...

super article

ஸ்ரீராம். said...

Good one

settaikkaran said...

கீற்றில் முதல் பகுதி வெளியானதற்கு வாழ்த்துக்கள்! இந்தப் பகுதியும் பல தளங்களைக் காணட்டும்.

Praveenkumar said...

வாழத்துகள் நண்பா..! தொடர்ந்து தங்களது பதிவுகள் அனைத்து திரட்டிகளிலும் முன்னணி இடுகையாக வீறுகொண்டு வெல்லட்டும்..! பட்டம் குறித்த இந்த இரண்டாம் பாகமும், மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.

vasu balaji said...

பலே பலே:)

ராஜ நடராஜன் said...

என்னது! மார்கோ போலாவா!!!

Lucky Limat - லக்கி லிமட் said...

அருமையான தகவல்கள் நண்பரே

Chitra said...

I wish I could go to attend the International Kites Festival at Washington State, this August... :-)

simariba said...

தகவல்களும் படங்களும் அருமை! உங்கள் பக்கத்தை அழகாக அமைத்துள்ளீர்கள்! நன்றாய் இருக்கிறது.