அனைவருக்கும் வணக்கம் ."இன்று ஒரு தகவாலில் சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய ப திவுகள் கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம்
பட்டம் பற்றிய இறுதிப் பதிவில் நமக்குத் தெரிந்ததெல்லாம் விமானங்கள் மட்டும்தான் மனிதர்களை தாங்கிக்கொண்டு விண்ணில் பறக்கும் என்பதுதானே ஆனால் எந்த அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இன்று நாம் பறக்கவிட்டு பரவசப்படும் இந்த பட்டத்தில் மனிதர்கள் பரந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?? உண்மைதான் இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில் பட்டம் மீண்டும் உங்களின் இதயங்களை சுமந்து மகிழ்ச்சியில் விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள் என்று முடித்திருந்தேன் இதோ மீண்டும் உங்களின் இதயங்களை விண்ணை நோக்கி பறக்கவிடப்போகிறது பட்டம் பற்றிய இந்த தகவல்கள் .
19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான ஆய்வுகளுக்கும் 20ஆம் நூற்றாண்டில் இராணுவப் பயன்பாடுகளுக்கும் பட்டம் உதவியிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பட்டங்கள் இராணுவ ஒற்றர்களை ஏற்றிக்கொண்டு உயரப் பறந்திருக்கின்றன. முதல் உலகப்போரின் போது பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ரஷ்ய இராணுவங்கள் பட்டங்களைக் கொண்டு எதிரிகளைக் கண்காணிக்கவும் செய்திகள் பரிமாறிக் கொள்ளவும் செய்தன. ஜெர்மானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ வீரனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் பட்டங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படையில் பட்டங்களின் பல்வேறு பயன்கள் நடைமுறையில் இருந்தன. ஹாரி சாவ்ல்லின் பேரேஜ் பட்டம், இலக்கிற்கு மிக அருகில் விமானங்கள் பறக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுத்தன. விமானி கடலில் காணாமல் போனால் கிப்ஸன்-கேர்ள் எனும் பெட்டிப் பட்டத்தைப் பறக்க விட்டு உதவியை நாடினர். பால் கர்பர் பட்டத்தில் இயக்கும் தன்மையுடனான வைரம் இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது (1939-1945) பட்டங்கள் துப்பாக்கி இலக்குகளாக இருந்து பயிற்சிக்கு உதவியிருக்கின்றன. பிரெஞ்சு இராணுவப்பட்டங்கள் பட்ட ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். அதன் தூக்குதிறன் மற்றும் நிலைத்தன்மை மிக உயரப் பறப்பதற்கு ஏற்றவை. 1903 நவம்பரில் சாமுவேல் ஃப்ராங்க்லின் கோடி என்பவர் பட்டங்களால் செலுத்தப்பட்ட கப்பலில் இங்க்லிஷ் கால்வாயைக் கடந்திருக்கிறார் .
விமானத்தின் அறிமுகம் இந்தப் பட்டங்களின் பயன்பாட்டைப் பழைமையாக்கி விட்டன. அதன் பிறகு தான், பட்டம் விடுதல் வெறும் பொழுதுபோக்காயிற்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பொழுதுபோக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது. நைலான், ஃபைபர் கிளாஸ், கார்பன் கிராஃபைட் போன்றவற்றைக் கொண்டு மிக உறுதியான பட்டங்களைச் செய்தனர். இவை குறைந்த எடையுடன் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டவை. நவீன பட்டங்களும் கண்டுபிடிக்கப் பட்டன. பீட்டர் லின் என்பவர் 1980களில், ந்யூஸிலந்தில் ஒரு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பட்டத்தை உருவாக்கினார். இது இயந்திரத்துடன் கூடியது. 1999ல், ஒரு குழுவினர் பட்டத்தைக் கொண்டு வடதுருவத்தில் ‘ஸ்லெட்ஜு’களை இழுத்திருக்கிறார்கள்.
19910ல், பீட்டர் பவெல் என்பவர் பொழுதுபோக்குக்கு மட்டுமில்லாமல் தீவிர விளையாட்டாகவும் பட்டத்தை விடலாம் என்று கருதினார். அப்போதிலிருந்து பட்டங்களில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டன. நுட்பமான வித்தைகள் செய்து காட்டினர். வேகமாகப் பறக்க விட்டனர். பல போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டனவாம் . என்ன நண்பர்களே இதுநாள் வரை பொழுது போக்கும் ஒரு விளையாட்டாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பட்டத்திற்குப் பின்னால் புதைந்து கிடக்கும் இது போன்ற அறிய தகவல்களை அறிந்த உங்களின் இதயங்களும் நூல் இன்றி மகிழ்ச்சியில் விண்ணில் உயரத்தில் பறந்திருக்கும் என்று நம்புகின்றேன். மறக்கம்ல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
12 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 24 - சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -3 !!! :
Amazing photos and write-up.. :-)
நல்ல தகவல்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
ஒன்னா காதல்ல பறக்குறிங்க...இல்லனா இந்த மாதிரி பட்டத்துல பறக்குறிங்க....உங்கலால தரையில நிக்கவே முடியாதா ....
பட்டங்களை பற்றிய "அப்பட்டமான பதிவு."
Good one. thank you :)
தேடி பிடித்து பட்டம் பற்றிய தகவலகளை வெளியிடுகிறிர்கள். மகிழ்ச்சி.
நல்ல பதிவு!! நிறைய தெரியாத தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி சங்கர்!!
பட்டங்கள் பற்றிய பல அருமையான தகவல்களை ஆராய்ந்தளித்த உங்களுக்கு கொடுக்கலாம் ஒரு டாக்டர் பட்டம்.
ரேகா ராகவன்
(now at LA)
different news,thankyou
அருவருப்பான பதிவுகளும் சீரழியும் கலாச்சாரமும்.
http://shayan2614.blogspot.com/2010/05/blog-post_28.html
உங்களுக்கும் ஒரு பட்டம் கொடுக்கலாம் !!! சகல கலா வல்லவன்னு ....
நிறைவான தகவல்..
அடுத்த கட்டுரை எதிர்பார்க்கிறேன்
Post a Comment