இன்று ஒரு தகவல் 18 - தொட்டா சிணுங்கல் ரகசியம் !!!

னைவருக்கும் வணக்கம் . தொட்டால் சிணுங்கி போல எதற்கு எடுத்தாலும் சிணுங்கிக்கொண்டு இருக்கிறாயே என்று பலர் சொல்வதுண்டு . நாம் அனைவரும் எத்தனையோ முறை கேட்டும் இருக்கிறோம் . அதே வார்த்தைகளை நாமும் பயன்படுத்தியும் இருக்கிறோம் . ஆனால் இந்த தொட்டால் சிணுங்கி பற்றி எத்தனை பெருக்கு முழுமையாகத் தெரியும் என்று கேட்டால் . அதிகமானோர் சொல்லும் பதில் தொட்டால் சிணுங்கும் அதுதான் தொட்டால் சிணுங்கி என்று சொல்வதுண்டு .ஆனால் அதையும் தாண்டி அப்படி என்னதான் இருக்கிறது தொட்டால் சிணுங்கிற்குள் என்று நாமும் தெரிந்துக்கொள்வோமே என்ற ஆவல் அதிகரிக்க நான் அறிந்தததை நீங்களும் அறிந்திடவேண்டும் என்று எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த பதிவு .சரி இனி விசயதத்திற்கு வருவோம்

லகத்தில் முதல் முதலில் இந்த தொட்டா சிணுங்கி தாவரம் South America and Central America, ஆகியா நாடுகளில் பிறந்துதான் சிணுங்கத் தொடங்கியதாம் . தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்த தாவரமும் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கிறது . மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இவற்றை உபயோகித்தால் தீராத பிணிகள் நீங்கி விடுகின்றன. தாவரங்களில் மிக விநோத மாகவுள்ள ‘தொட்டாச்சிணுங்கி’ என்ற ஒரு வகைச் செடியை தாவரவியலாளர் மிமோஸாபொடிக்கா என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர். நாம் தொட்டவுடனே சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச் சுருங்கி என்று பெயர் இருந்து வந்தது காலப் போக்கில் இந்நாமம் தொட்டால் சிணுங்கி என்று மருவியதாம்.தொட்டால் சிணுங்கியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளரும். மற்றொன்று, சாதாரண இடங்களில் கூட வளரும். கல்வராயன் மலையில் உருவாகி, பாயும் ஏராளமான சிற்றாறுகள், நீரோடை, ஏரி போன்ற நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் தொட்டால் சிணுங்கி என்ற செடி அதிகமாகக் காணப்படும்.

தன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன."தொட்டால் சிணுங்கி மலர்கள் அழகானவை. இச்செடிகள் பூத்துக் குலுங்கினால், "பஞ்சம்' போகும் என்பது காலம் காலமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. தொட்டால் சிணுங்கி பூத்தால் நல்ல மழை பெய்யும், நல்லவை அதிகமாக நடக்கும் என்பார்கள்.
மைமோசாபூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக்கொண்டிருக்கும் . அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும் . இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது . இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும் .இந்த முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும் . இச் செடியைக் காற்று , பூச்சி , விலங்கு , மனிதன் , மழை துளி தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும் , முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன .இதனால் இலைகள் சுருங்குகின்றன . இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும் . இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும் .இலை காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது .மனிதர்களுக்குள் உணர்ச்சிகளை ஏற்படுத்தக்குடிய அதே வகையான செல்கள் இந்த வகை தாவரததிற்குள்ளும் காணப்படுவதாக ஆய்வுகள் தெருவிக்கின்றன .
துவும் ஒரு மூலிகை. சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில், ரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இதுபோன்று இன்னும் நாம் தினம் தோறும் பார்த்து ரசிக்கும் செடிகளில் எத்தனை விந்தைகளை மறைத்து வைத்திருக்கிறதோ இந்த இயற்கை ! சரி நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவல் உங்களையும் சிணுங்க வைத்தததிருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை மறுமொழியில் சொல்லிவிட்டு செல்லுங்கள் .

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

20 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 18 - தொட்டா சிணுங்கல் ரகசியம் !!! :

Chitra said...

சித்த வைத்திய முறையில், ரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .


....Interesting information about the "forget-me-not" plant. :-)

பிரசாத் said...

நல்ல பகிர்விற்கு நன்றி நண்பரே. அரிய தகவல்கள். சேமிக்க வேண்டிய ஒரு விஷயம்...

நாடோடி said...

தொட்டாசிணுங்கியை ப‌ற்றி நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் தெரிந்து கொள்ள‌ முடிந்த்து..ப‌கிர்விற்கு ந‌ன்றி..

சைவகொத்துப்பரோட்டா said...

சினுங்கியில் இவ்ளோ மருத்துவ குணமா!!
தகவலுக்கு நன்றி சங்கர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்விற்கு நன்றி சங்கர்

Jaleela Kamal said...

தொட்டா சிணுக்கி , பற்றி விளக்கமான தக்வல்.
நன்றி

ஹுஸைனம்மா said...

விளையாட்டாப் பாத்துட்டுப் போற விஷயத்தின் விஞ்ஞான விளக்கம் தந்ததற்கு நன்றி ஷங்கர்.

சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்ற கூடுதல் தகவலுக்கும் நன்றி.

ஏற்கனவே சொன்னதுபோல, கருப்புப் பிண்ணனியை மாற்றினால், கண்ணில் சோர்வு ஏற்படாது.

சிநேகிதன் அக்பர் said...

மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சங்கர்.

இராகவன் நைஜிரியா said...

நல்ல தகவல். நன்றி. சாதாரணமாக பார்த்துட்டு போயிருக்கேன். இதுவரை இது ஏன் என்று கூட யோசனை செய்தது இல்லை. மீண்டும் ஒரு முறை தகவல்களுக்காக.

kannanvaruvan said...

தொட்ட சினுங்கி செடியை எல்லோரும் அறிவர். ஆனால் அது எப்படி இப்படி தொட்டவுடனோ அல்லது வேரு எதேனும் பரிச்சயம் செய்யும் பொழுதோ சுருங்கி கொள்கிறது என்பதை புரியவைத்துள்ளீர்கள். ஒ..இப்படித்தானா என்று தெரிந்து கொள்ளமுடிகிறது...பிறருக்கும் விளக்கலாம்..அதைப்போல மருத்துவ குணம் பற்றியும் புதிதே...பொன்

விக்னேஷ்வரி said...

பயனுள்ள பகிர்வு, வழக்கம் போல்.

தோழி said...

மிகவும் பயனுள்ள தகவல்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

அகல்விளக்கு said...

தொட்டால் சிணுங்கி செடி பற்றிய நல்ல தகவல்கள்...

மருத்துவ பயன்பாடு வியப்பளிக்கிறது...

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

நல்ல தகவல் நண்பரே,,,,

ரிஷபன் said...

இதுவும் ஒரு மூலிகை. சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில், ரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது

இத்தனை நாட்களாய் இது தெரியாது.. நன்றி..

க ரா said...

நல்ல தகவலுக்கு நன்றி நணபரே.

கோமதி அரசு said...

சங்கர்,நல்ல பதிவு.

தொட்டால் சிணுங்கிப் பற்றி நிறைய புது தகவல்கள், நன்றி.

//தொட்டால் சிணுங்கி மலர்கள் பூத்துக் குலுங்கினால், ‘பஞ்சம்’போகும்,நல்ல மழை பெய்யும்,நல்லவை அதிகமாக நடக்கும் என்பார்கள்//

தொட்டல் சிணுங்கி மலர்கள் பூத்து குலுங்கட்டும்.பஞ்சம் போகட்டும்,மழை பெய்யட்டும்,நல்லவை நடக்கட்டும்.
வாழ்க வளமுடன்!

Praveenkumar said...

வணக்கம் தல....
சின்ன வயசுல கழனிபக்கம்,கம்மாய்பக்கம், காடுபக்கமாய் போனால் அடிக்கடி பாரத்து ரசித்து விளையாடிய இந்த விளையாட்டு செடியில் இவ்வளவு விஷயங்களா..!! என மலைத்துதான் போனேன்... இதில் விஞ்ஞானம், சித்தவைத்தியம் என கூடுதல் தகவல்களையும் சேர்த்து சொல்லியிருப்பது மிக அருமை. தகவல்களை சுவாரஸ்யமாக தொகுத்து இருக்கீங்க...தல. தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம் வாழ்த்துகள்.

Menaga Sathia said...

பகிர்விற்கு நன்றி சங்கர்!!

ஜில்தண்ணி said...

உபயோகமான தகவல்களுக்கு நன்றி !!!
:))