இந்த உலகம் மறந்துபோன
மனிதர்களிடம் இல்லாத சிறப்புகள்
இப்பொழுதும் குவிந்து கிடக்கிறது
எப்போதேனும் பார்வை எட்டும் காட்சிகளில் !
இங்கு சுவாசிக்கத் தெரிந்தவன் மனிதனா !?
இல்லை சிந்திக்கத் தெரிந்தவன் மனிதனா !?
என்ற குழப்பங்கள் சிலநேரம்
குரல்வளை நெருக்கத் தொடங்கிவிடுகிறது .
உருவங்கள் மாறிப் போயினும்
உணர்வுகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது
ஒரு தாய்மையின் முகவரியை !
உணவற்று வற்றியதேகம் என்றபோதிலும்
உயிர் உள்ளவரை தன் குழந்தைகளின்
பசியாற்றி இறக்கத் துடிக்கும்
வார்தைகளில்லாத நன்றியுள்ள ஜீவனாய்
நீயாகிப்போனா (நா) ய் !
-❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
18 மறுமொழிகள் to கசியும் உணர்வுகள் - பனித்துளி சங்கர் காட்சிக் கவிதைகள் - Thanimai kavithaigal 07 May 2011 :
நல்ல கவிதை.
பொருத்தமான படம்.
அருமை பாஸ்!
சிந்திக்க முடிந்தவன் தான் மனிதன்..தொடருங்கள்
அருமையாக அருமை...
எல்லோரும் சுவாசித்தாலும்
சிலரால் மட்டுமே சிந்திக்க முடியும்
நல்லா சொன்னீங்க தல
Voted in Indli.
தா(நா)ய்மை உணர்வை உணர்த்தும் அருமையான படம்+கவிதை. பாராட்டுக்கள்.
படங்கள் போலவே மிக அழகாக இருக்குறது கவிதைகளும்
வார்த்தைகளும் வீரியமிழக்கும் சில பார்வைகளில் ஆனால் உங்கள் வார்த்தைகள் வீரியம் சேர்த்தன அந்த (தா)நாய்மைப் பார்வைக்கு.
art film பார்த்த உணர்வு இந்த படைப்பு..இனம் எதாக இருந்தால் உணர்வுகள் உன்னதமானவை தானே என்பதை மிக அழகாக சொல்லியிருக்கீங்க சங்கர்...
படமும் கவிதையும் அருமை. தாய்மையுணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே. குயில் குஞ்சுக்கு காக்கை உணவு கொடுத்து வளர்க்கிறதே. இறைவன் படைப்பின் உன்னதம்தான் என்னே?
படமும் பாடமும் அருமை!
தாய்மையின்
தனித்துவத்தை சொல்லும்
தன்னிகரில்லா கவிதை
வார்த்தைகளில்
வளமான
கருத்துக்கள்
கலந்திருப்பதே இந்த
கவிதையின்
சிறப்பு
படத்தைப் பார்த்ததும் நீங்களும் தாயாக மாறியிருக்கிறீர்கள் போலும்.மனதைத் தொடும் வரிகள் !
நல்ல பதிவு. இன்றைய அரசியல் வியாதிகள் அறிந்து புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. நன்றி.
என்னவொரு அருமையான கவிதை நல்லா இருக்குங்க!
நெகிழ்ச்சியான கவிதை...தாய்மையை இன்னும் அதிகமாய் உயர்த்தியது கவிதை...
நன்றிகள் + பாராட்டுகள் !!
அருமையான மனதை தொடும் உங்கள் கவிதைக்கு நன்றி..
மனிதனிடம் மறைந்து போன மனிதாபிமானத்தை, மறைக்காமல் மணம் வீச செய்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள்
Post a Comment