காதல் ரோஜா - Panithuli shankar kadhal kavithaigal - ஒரு காதல் கவிதை


ங்கோ உயிர் பெற்றோம் !
 எங்கோ வளர்க்கப்பட்டோம்  !
எப்பொழுதோ  புன்னகைத்தோம் !
எப்படியோ பறிக்கப்பட்டோம் !
இப்பொழுது இங்கு ஒன்றாய்
 இறந்து கிடக்கிறோம் !
 பிரிந்து பிறந்த நம்மை
 இங்கு ஒன்றாய் இணைத்ததுக்
 காதல் !


                              -    ❤ பனித்துளி சங்கர் ❤





11 மறுமொழிகள் to காதல் ரோஜா - Panithuli shankar kadhal kavithaigal - ஒரு காதல் கவிதை :

ஷர்புதீன் said...

தலைவரே, காதல் கவிதைகளை அடியேன் எழுதி போஸ்ட் செய்தேன் அன்று... இன்று நீங்கள் வலைபூ மூலம் அனுப்புறீங்க...., நடத்துங்க நடத்துங்க

ஸ்ரீராம். said...

இறப்பைச் சொல்லாமல் சந்தோஷமாய் முடிக்கக் கூடாதா...!

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இணைத்த காதல்??!!

போளூர் தயாநிதி said...

வணக்கம் நான் மறைந்த நடிகரும் முதல்வருமான ம.கோ ,மதியழகனர் (M .G .R ) விச்சிரிகள் (ரசிகர்கள் )போன்றவன் காதலில் மரித்துபோவது எனக்கு விருப்பமானதல்ல . காதல் வழ்வதர்க்குதனே யன்றி மரித்துபோவதர்க்கல்ல காதலை வாழவிடுங்கள் காதலர்களையும் அதாவது உண்மை காதல் எனின் உயிர் பெறட்டும் காதல் மட்டுமல்ல காதல்க்களும்தான் . இடுக்கைக்கு பாராட்டுகள்

பனித்துளி சங்கர் said...

அன்பின் தயாநிதி அவர்களுக்கு வணக்கம் காதல் கவிதை என்றாலே அது மனிதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்லும் அளவில் தங்களின் மறுமொழி இருக்கிறது . சற்று கவிதையையும் , புகைப்படத்தையும் மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள் . நான் எழுதி இருக்கும் கவிதை இந்த புகைப்படத்தில் இறந்து கிடக்கும் ரோஜா பூக்களுக்குத்தாநேத் தவிர காதலித்து ஏமாற்றி , ஏமாறும் மனிதர்களுக்காக இல்லை . புரிதலுக்கு நன்றி !

Unknown said...

வாடிய ரோஜா கொண்டு-நீர்
வழங்கீனீர் கவிதை செண்டு
கூடினார் உலர்ந்து அவரே-மணம்
கொண்டனர் மலர்ந்து அவரே
தேடினீர் கவிதைப் பொருளை-நல்
தேனென ரோஜா மலரை
பாடினீர் இங்கே நீரும்-புலவன்
பாட்டையும் சொன்றே பாரும்
முகவரி- புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

போளூர் தயாநிதி said...

நன்றி உமது விளக்கத்திற்கும் கவிதைக்கான காரணத்திற்கும் . நுட்பமாக ஆராயவில்லை படத்தையும் பார்க்கவில்லை நமக்கு கிடைக்கும் ஒருசில மணி நேரத்தில் ஆக்கங்களை வாசித்து கருத்துகளை இட்டு விடுவது எமது வேலையாக இருக்கிறது . அதனால் நேர்ந்த பிழை பொறுத்தருள்க. நன்றி

viji said...

pls send ur mail id and facebook name

bharathi saravanan kavithaigal said...

I read your all the poem which was written by you(ANNA)superb....I like very much ANNA.I wish you all the best ANNA again you have to write this kind of poem more and more by saravan

bharathi saravanan kavithaigal said...

I have to be mention two things in your poem ANNA one is your poem and another one is your background drawings which is suitable as well as good combination every poem ANNA superb ANNA