காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011


சாலையோர மரமாய்
சலசலப்புடன் இங்கும் அங்கும்
 பார்த்த படி நான் !.
நான் இமைத்து முடிப்பதற்குள் பிரம்மன்
 படைத்து அனுப்பினானோ இவளை !? 
சற்றுமுன் பார்த்த முகம்
 யார் என்று தெரியவில்லை
வெகு நேரமாக திரும்பாமல் சென்றவள்
மறைந்துபோகுமுன் ஏனோ
திரும்பிப் பார்த்து சிறு
 புன்னகை வீசி சென்றாள்.,
 குழப்பத்தில் குதிக்கிறது மனசு .
காதல் ஒரு முறைதான் பூக்கும்
என்று யார் சொன்னது   !???


                               ❤ பனித்துளி சங்கர் ❤

14 மறுமொழிகள் to காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011 :

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உள்ளேன் ஐயா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுக்கு இதுபோன்று எத்தனை முறை பூத்திருக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு டைப்பாத்தான் இருக்காப்பா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காதல் ஒருமுறை தான் பூக்கும் என்று யார் சொன்னது?//

சத்தியமா நான் சொல்லவில்லை.

Anonymous said...

///காதல் ஒரு முறை தான் பூக்கும் என்று யார் சொன்னது ??/// ஹிஹிஹி பலமுறை பூத்திருக்கு போல....


இருந்தாலும் வரிகள் என்னமோ உண்மை தான், காதல் ஒரு முறை தான் வரும் என்பது பொய்...

Unknown said...

/காதல் ஒரு முறை தான் பூக்கும் என்று யார் சொன்னது ?/

அதானே யார் சொன்னது?

குணசேகரன்... said...

உங்க அனுபவமா இந்த கவிதை..?!சூப்பர்
ரொம்ப முக்கியமான நியூஸ்.நன்றிங்க.. நிறைய தடவை நான் உங்களுக்கு கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன்.
என்னோட பதிவையும் பத்தி கொஞ்சம் கமெண்ட்ஸ் சொல்லுங்க.

ரிஷபன் said...

பல முறை பூத்தால் அது மரம்..

vidivelli said...

இதோடு எத்தனையாவது தடவை!!!!!

நல்லாயிருக்குங்க......

அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்

vidivelli said...
This comment has been removed by the author.
கடம்பவன குயில் said...

//நான் இமைத்து முடிப்பதற்குள்
பிரம்மன் படைத்து அனுப்பினானோ இவளை//

நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. கல்கண்டு கவிதை.

போளூர் தயாநிதி said...

காதலென்பது ஒருமுறைதான் பூக்கும் என கேள்வி பட்டு உள்ளேன் அது மீண்டும் மீண்டும் வேறு இடங்களில் பூத்தால் அது காமம் ஆகிவிட வாய்ப்பு உள்ளதென என் உளம் செப்புகிறது சகியே காதல் சொல்கிறேன் கடிதமாக ஏற்றுக்கொள் இல்லையேல் உன் தங்கையிடம் கொடு என்ன்பது காதல் அல்ல காமமாக இருக்கலாம்.

தமிழ்தாசன் said...
This comment has been removed by the author.
தமிழ்தாசன் said...

அருமையான வரிகள் தினமும் பூத்தல் தான் அது பூ,ஆனால் அது ஒரே செடியில் தான் பூக்க வேண்டும்.