தெரியுமா உங்களுக்கு சூடான அரியத் தகவல்கள் ஆயிரம் - பனித்துளிசங்கர் Radio Hallo 89.5 FM ( UAE )
னைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சரி நண்பர்களே இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம் . முதலில் அமீரகத்தில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் சில புதுமையானத் தகவல்களை பற்றி நாம் அறிந்துகொள்ளலாம் .

எப்பொழுதும் இல்லாத வகையில் முதன் முறையாக இப்பொழுது அமீரகத்தில் 24 மணி நேர தமிழ் வானொலி சேவையை ரேடியோ ஹல்லோ FM  ( Radio Hallo 89.5 FM ( UAE )  ) என்ற குழுவினர் தொடங்கி இருக்கிறார்கள் .

மீரகத்தில் என்னதான் வெயிலின் கொடுமை அதிகம் இருந்தாலும் இந்த Radio Hallo 89.5 FM  DUBAI வானொலி அதுதாங்க ரேடியோ  வருகையினால் இப்பொழுது ஒவ்வொருவரின் களைப்பிலும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கொளுத்தும் வெயிலிலும் அமீரகத்தில் ஒரு அடைமழை இந்த Radio Hallo 89.5 FM ( UAE ) வானொலி என்பது உண்மை ,. இதுவரை அறியாதவர்கள் இப்பொழுதேக் கேட்டு மகிழுங்கள்
.

 @@@@@@@@@@@@


                                             
லக நாடுகளில் இதுவரை எந்த நாடும் எட்டாத சாதனையை இப்பொழுது அமீரகத்தில் இருக்கும் எமிரட்ஸ் விமான சேவை ( Emirates airlines ) குறுக்கிக் காலத்தில் எட்டி இருக்கிறது .
 ஆம் நண்பர்களே உலகத்தில் தலை சிறந்த விமான சேவையில் மூன்றாவது இடத்தை இப்பொழுது இவர்கள் ( Emirates airlines )  எட்டி இருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாது இதுவரை இந்த ( Emirates airlines ) விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியன் பயணிகள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .@@@@@@@@@@@@ரி அமீரகத்தில் ( UAE )  வேலை செய்வதால் அமீரகத்தைப் பற்றி மட்டுமே தகவல்கள் சொன்னால் எப்படி என்ற உங்களின் கேள்வி எனக்கு நன்றாகக் கேட்கிறது . சரி வாருங்கள் எல்லோரும் கடலுக்குப் போகலாம் . ஆஹா அந்தக் கடல் இல்லைங்க யாரும் பயப்படவேண்டும் . கடல் பற்றிய ஒரு தகவளுக்குப் போகலாம் என்று அழைத்தேன் . ஆமாங்க பொதுவா நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் கடல் என்றாலே ஒரு அதிசயம்தான் . பின்ன இருக்காத உலகத்தில் மூன்று பங்கு அவங்க ஆட்சி தானே . அதிலும் இந்த அன்டார்ட்டிகா கடல் இருக்கிறதே இது ரொம்ப பயங்கரமானக் கடலுங்க !
அப்படி என்ன பயங்கரம் என்று தானே கேட்க வருரிங்க !?. சரி சொல்கிறேன் . நாம் வசிக்கும் இடங்களில் அதுதாங்க வீட்டில் ஒரு பத்து நிமிடம் மின்சாரம் இல்லாம இருட்டா இருந்தாவே பாதிபேருக்கு பேதியாகிவிடுகிறது . ஆனால் இந்த அண்டார்டிகா கடலில் நான்கு மாதங்கள் முழுவதும் ஒரே இருட்டாகத்தான் இருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . அதுமட்டும் இல்லை இந்த அண்டார்டிகா பகுதியில் படிந்துள்ள பனிக்கட்டிகள் மொத்தமும் உருகத் தொடங்கினால் .உலகில் 60 ஆண்டுகள்  பெய்யும் மழைக்கு சமம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . என்ன மக்களே அந்த பக்கமா இனி போறவுங்க எல்லாம் பார்த்து சூதானமாக இருங்க !


@@@@@@@@@@@@ட என்ன இது !? இந்தியாவில் பிறந்துவிட்டு அமீரகம் ( UAE ) , கடல் என்று தகவல் சொல்றேனே என்று உங்க உள்ளத்தில் ஒரு மூலையில சிறு கேள்வி தோன்றும் . அதனால எதுக்கு வம்பு இந்தியாப் பற்றிய ஒரு தகவலும் சொல்லிவிட்டா போகுது . சரி வாங்க இந்தியாவுக்கு போகலாம் .பொதுவாக நாம் எதை படித்தாலும் சரி எழுதினாலும் சரி அதில் ஏதாவது ஒரு பின் குறிப்போ அல்லது டிஸ்கியோ இப்படி ஏதாவது ஒன்றை சொல்லுவது வழக்கம் . அது மாதிரி ஒரு காலத்தில் மட்டும் இல்லைங்க இப்பக கூட இந்த ''பின்'' என்ற தொடங்கும் வார்த்தைகளுக்கு சற்று ஆதரவு அதிகம்தாங்க . என்ன குழப்புகிறேனோ !?

ரி நேராக மேட்டருக்குள் போகலாம் அட நம்ம இந்தியாவில் பயன்படுத்தப் படும் பின் கோடுகள் பற்றிதாங்க இந்த தகவல் அப்படி பின் கோடுகளில் என்னதான்  இருக்கிறது என்று கேட்டுவிடாதிங்க . ஒரு பெரிய மேட்டர் பின் கோட்டிற்குள்ள ( Pin Code ) இருக்கு . ஆம் நண்பர்களே மொத்த இந்தியாவிலேயே பின் கோட்டில் ( Pin Code ) அதிக எங்களை கொண்ட ஒரு நகரம் நம்ம சென்னைதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . அனைத்து நகரங்களின் பின்கொடுகளையும் தருவதற்கு இப்பொழுது நேரமின்மை அதனால் ஒருசில பிரபலமான நகரங்களின் பின் கொடுகளைமட்டும் தருகிறேன் மற்றதை நீங்களே தேடிப் பார்த்துகொள்ளுங்கள் .

சென்னை ( 600001 --- 600098 )
பம்பாய் ( 400001 --- 400093 ) .
கல்கத்தா ( 700001 --- 700070 ) .
டெல்லி ( 110001 --- 110062 ) .

ப்பவே பல பேர் எண்ணத் தொடங்கி இருப்பிங்களே !? சரி நண்பர்களே அப்படியே எண்ணிக்கொண்டே இருங்கள் . நாளை ஒரு கவிதையுடன் உங்களை சந்திக்கிறேன்.

நேசத்துடன் உங்களின்
❤ பனித்துளி சங்கர் ❤

14 மறுமொழிகள் to தெரியுமா உங்களுக்கு சூடான அரியத் தகவல்கள் ஆயிரம் - பனித்துளிசங்கர் Radio Hallo 89.5 FM ( UAE ) :

கிருபா said...

அருமையான தகவல்கள் சகோ

நட்புடன்

கிருபா

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

கிராமத்து காக்கை said...

அண்ணே வணக்கம் தொடர்ந்து கவிதைகள் மட்டுமே வெளியிட்டு
கவர்ந்த நீங்கள் புதுமையான கருத்துகளை வெளியிட்டதற்கு நன்றி

Unknown said...

எல்லாமே புதிய தகவல்கள்...

கூடல் பாலா said...

பின் கோடுல மட்டும் சென்னை முன்னேறியிருக்கு .....!

Unknown said...

Nice! :-)

A.R.ராஜகோபாலன் said...

நவரசத் தகவல்களை
அள்ளித் தெளித்த
பன்முகப் பதிவு நண்பரே
அற்புதம்

Muruganandan M.K. said...

வித்தியாசமான தகவல்கள். சுவையாக சொல்லப்பட்டிருப்பதால் ஒரே வீச்சில் படித்து முடிக்க வைக்கிறது.

கிருபாநந்தினி said...

பனித்துளி சங்கரண்ணா! தெரியாமதான் கேக்கறேன். தப்பா நெனச்சுக்காதீங்க. அமீரகம் அமீரகம்றீங்களே, அது எங்க இருக்குங்ணா? லொகேஷன் சொல்ல முடியுமா? மத்தபடி தகவல் எல்லாம் உபயோகமானது!

குறையொன்றுமில்லை. said...

ஒரேபதிவில் பல்சுவைத்தகவல்
களா,ஆச்சர்யம்தான். எல்லாமே
நல்லதகவல்களே

Admin said...

இந்த வானொலி கட்டாரிலும் தெழிவாக ஒலிக்கின்றது. கட்டார்வாழ் தமிழர்களுக்கு மிகவும் சந்தோசம்.

தகவல் பகிர்வுகளுக்கு நன்றிகள்

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது, உங்கள் செய்திகளை கீழே பதியவும்.

Share Here

Thameez said...

Hello FM நடத்துபவர்கள் ETA Group. அதனால் தான் தமிழ் இப்படி வீசுகிறது. வாழ்க அவர்கள்.

மாதேவி said...

பயனுள்ள தகவல்கள்.

Unknown said...

பரவாயில்லை சுமாரா(....)இருக்கு