உறக்கங்கள் பறிக்கப்படும்
ஒவ்வொரு நடு நிசிகளிலும்
உள் வாங்கும் சுவாசத்துடன்
ஒட்டிக் கொ (ல் )ள்கிறது
ஒரு மரணப் பயம் !
எதற்கென்றேப் புரியாத
பூகம்பமாய் இதயம் தாண்டி
வெடிக்கப் பார்க்கிறது !
இமை மூமூடித் திறப்பதற்குள்
மீண்டும் ஒரு உறவின்
உயிர் பிரியும் சத்தம்
என் செவிகளை
துளைத்துக் கொண்டிருக்கிறது .!
சொல்லி அழ இயலாத மரணங்கள்.,
விம்மி விம்மி வெளிவரும்
கண்ணீர்த் துளிகள் .,
விரும்பி ஏற்காத உடல் சுகம் .,
தூண்டிலில் மாட்டிய மீனாய்
துன்புறுத்தலின் உச்சத்தில்
மீண்டும் மீள்கிறது
கற்பையும் , உறவையும்
ஒன்றாய் இழந்த கணங்கள் !....
-பனித்துளிசங்கர்
Tweet |
15 மறுமொழிகள் to கண்ணீர் ஊற்றுகள் - பனித்துளிசங்கர் / Panithulishankar Tamil Kavithaigal 27 May 2011 :
அற்புதமான கவிதை! வாழ்த்துக்கள்!!
அற்புதமான கவிதை! வாழ்த்துக்கள்!!
நல்ல கவிதை.
ஏற்கனவே சொல்லிருக்கேன். நீங்க ஏன் ஒரு கவிதை வடிவில் கதை எழுதக் கூடாது. படிக்க ஆவலாய் இருக்கிறேன்
கவிதை மிகப்பிரமாதம் நண்பரே
உங்களுக்கே உரிய வார்த்தை அமைப்பு உள்ளத்தை தொடும் உணர்வுடன் கூடிய சொல்லாட்சி இளகிய உள்ளத்தை கொள்ளையடிக்கும் படியான தேர்ந்த வரிகள் மொத்தத்தில் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி .
வாங்க ரஜினி உங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாங்க ஸ்ரீராம் நலம்தானே !?. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்க்கிறேன் .
வாங்க குணசேகரன் விரைவில் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் . வருகைக்கும் ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள்
வாங்க சசிகுமார் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி
வாங்க போளூர் தயாநிதி உங்களின் நேர்த்தியான கருத்திற்கு நன்றி .
உணராமலேயே வலியை புரிந்து வைத்துள்ளீர்கள் ஷங்கர் ..வரிகளில் தெரிகிறது .. :(
கவிதை இனித்திட்டாலும், இதன் கரு எம் மனதை கனக்க வைக்கின்றது!
என்னால் மூச்சு விட முடில்ல நிஜத்தின் பதிவகள் கவிதை சூப்பர்
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
Post a Comment