அனைவருக்கு வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக அதிக வேலை பளு அதுதான் பதிவுகள் தர இயலாத நிலை. சரி இனி நாம் இன்றையத் தகவலுக்கு வருவோம். பொதுவாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர். முதலில் எனக்கு காமராஜர் பற்றி எழுத ஆர்வத்தை ஏற்ப்படுத்திய ஆனந்த விகடன் இதழுக்கு நன்றிகள் பல.
தனது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!
இவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு 'காலா காந்தி', பெரியாருக்கு 'பச்சைத் தமிழர்', காங்கிரஸ்காரர்களுக்கு 'பெரியவர்' என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.
இன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத மனிதராக திகழ்ந்தார் நேரு. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதையும் மீறித் திறந்த சிலை இவருடையதுதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு இந்த மனிதர் வாழ்ந்திருப்பார் என்று..!.
பாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..!
பதவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.
இப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவு ரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து என்று இவரின் சிறப்பை பற்றி ஒரு ஊடகம் எழுதியக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.
இப்படித்தான் ஒரு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த பொழுது தொண்டர்கள் தனக்கு கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்து கஷ்டப்படும் தியாகிக்கோ அல்லது விவசாயிக்கோ கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுமட்டும் இல்லாது முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது அதில் செல்ல மறுத்து. 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்றுக் கேட்டு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.
நான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே..! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ் நாட்டில் இன்னும் பலருக்கு படிக்காத தலைவர்கள் என்று சொன்னால் முதலில் இவரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள். 'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' ஆனால் உண்மையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறார் இந்த மனிதர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
அதிக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
இதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில் நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
இன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..! தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் !
இன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் காமராசர்.
டிஸ்கி :
இன்று இருக்கும் அரசியல் வியாதிகளில் மன்னிக்கவும் அரசியல் வாதிகள் சொத்தின் மதிப்பில் மில்லியன் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிரார்கள். தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி இன்னும் கை ஏந்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் .
Tweet |
42 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல்- கிங் மேக்கர் காமராஜர் - Kingmaker Kamarajar ( Panithuli Shankar ) :
படித்து விட்டு வருகிறேன்...
தமிழகம் கண்டெடுத்த கருப்பு வைரம் தோல்விகள் கண்டாலும் துவலாத உள்ளம்...
பாமரக்குழந்தைகளின் பசி தீர்த்த பகலவன்...
இவர் போல் அரசியல் வாதி இனி இல்லை....
படிக்காத மேதை இவர் அதனால்தான் நாட்டையே படிக்கவைத்தான்...
வாழ்க அவர் புகழ்....
தங்களுக்கு நன்றி...
அருமையான பதிவு.
நான் படித்ததே அவர் கொண்டு வந்த 'இலவச கல்வி திட்டத்தினால் தான்'
வாழ்த்துக்கள்.
நன்றி பாஸ் இன்று காமராசரை பற்றி அதிகமாக தெரிந்துகொண்டேன்...
நல்ல பதிவு
நல்ல பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் சகோ நன்றி!
நல்ல தொகுப்பு.,,,காமராஜர் எனக்கு பிடித்த தலைவர் .மிக்க நன்றி ......
வாய்ப்புகள் இருந்தும் இறுதிவரை ஒரு சாதாரண மனிதரைப் போலவே வாழ்ந்த உத்தமர்!
பகிர்வுக்கு பாராட்டு!
அந்த ஒப்பற்ற தலைவர் கொண்டுவந்த இலவசக்கல்வித்திட்டத்தினால் தான் நான் 1966 இல் 11th Std SSLC வரையாவது படித்து முடிக்க முடிந்தது.
கேரளாவுக்குச்செல்வதாக இருந்த BHEL தொழிலகத்தை தமிழ்நாட்டில் திருச்சியில் அமைக்க அவ்ர் எடுத்த முயற்சிகளே மிக முக்கிய காரணமாகும்.
அவரை நான் 1971 ஜனவரி மாதம் நேரில் மிக அருகில் நீண்ட நேரம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றேன்.
மிகவும் எளிமையான படிக்காத மேதை தான்.
பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
:)
நல்ல பயன் உள்ள தகவல்கள் அண்ணா
நன்றி அண்ணா
தன்னுடைய தங்கை மகன் எம்.பி.பி.எஸ். சேர சிபாரிசு கேட்டபோது,அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார்,அதற்கென்று செலக்சன் கமிட்டி உள்ளது, அதில் தான் தலையிடமாட்டேன் என்று கூறிவிட்டார்.
அவருடைய நுாறாவது பிறந்த நாள் அன்று ஒரு கவிஞர்” ஏழையாகப்பிறந்து பல உயர் பதவிகளை வகித்து ஏழையாகவே இறந்தவர்” என்று பாடியுள்ளார்.
மற்றுமொரு காமராஜ் தோன்ற ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
உங்களை வலைச்சரத்தில்
அறி முகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும்போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html
கிங் மேக்கராக அன்று இந்தியா அளவில் நல்ல பெயரேடுத்தகமராசார் நல்ல ஆட்சி யாளராக தன்னை உருவாக்கிக் கொண்டு பணியாற்றியவர் பரட்டுகளுக்குரியாவரும் ஆவர் பதிவிற்கு பாராட்டுகள்.
------ aal adithathupol sonneergal. ethaavathu oru viyaathikkaavathu unarvu varumaa endra yekkaththil mahes.
மிக்க நன்றி
karmaveerar kamarajar in valkai varalatrai therindhu kollvadharku vazhi vagai seidhatharku mikka nandrigal, endrum kamarajarin pugal ulagengilum.
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்
Todays politicians learn lessons from his history.
i feel very happy about karma veerar kamaraj details to get
naan vetriyalargalin valkai pathivugali therindhukolla megavum arvamanavan .enakku karma veerar kamarajar avargalin gunangal therindukolla megavum uthaviyad ungaluuku romba nanri ippadikku vignesh
thanks
kamarajar vaazhkai varalaru therinthun indraiya politicians yen ivlo kevalama money ku dog madhiri alaiyuranga. karma veerar azhinthalum avar puhazh azhiyathu. thalaiva meendum piranthu vaa tail nattai meetka.........
Thanks for ur information about kamarajar....he is a such a wonderful man ...i'm really proud of him..he is a only man who is a perfect leader....
hai i am selvaraj perambalur that is great kamarajar story narmayana cm kamarajar kalve kan tharantha karma verar kamarajar makalen manathai purenthu kondavar kamarajar
yen name A.S.Vijay antonyraj king makker kamarajar siranthavar avarai polave anaithu thalaivargalum pinpattinal nam india vallarasaga maarividum
நான் விரும்பிய தலைவரை பற்றி பல தெரியாத நல்ல கருத்துகளை தெரிந்து கொண்டேன் ...
நன்றி அண்ணா
நான் விரும்பிய தலைவரை பற்றி பல தெரியாத நல்ல கருத்துகளை தெரிந்து கொண்டேன் ...
நன்றி அண்ணா
ivarai pondra thalaivargal indru engum illai.. irugapovathum illai .. thannalammatra thalaiver king maker kamarajar...
Kangal kalaggukinrana avar udal mannil maraindhadhai yenni. Aanal avar yendrum makkal manadhil erundhu maraiya maattar. Yen theivam Kalvitthanthai Karmaveerar Ayya Kamarajar avargal.
thalaiva ne marupadium piraaka vendum. entha makkalai kappacha
kamarajar pati supera solirukenga i liked it - gayathri
ITHAI PADIKUM POZHUTHU AN KANEEL NEEREH VANTHU VITATHU.. INTHA THALAIVAR VAZHNTHA INTHA NATIL VAZHA NAN MIGAVUM PERUMAYAGA KARUTHUGIREN
Greate man
Solvadhrkku vartthai illai
Solvadhrkku vartthai illai
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் makkalukkaga vallinthaar
இன்றைய அரசியல்vathi thangalukaka வாழ்கிறார்கள் ...
andru pothu nallam
Indru Suya nallam
unmail kamarajar king maker
Ennum epadi patta ennagal neraintha manithargal eruka than seikiragal aanal avargaluku velipadutha thairiyam ellai apadiye erunthalum avargalai vukuvikka tholargalum ellai sonthangalum ellai
Ennum epadi patta ennagal neraintha manithargal eruka than seikiragal aanal avargaluku velipadutha thairiyam ellai apadiye erunthalum avargalai vukuvikka tholargalum ellai sonthangalum ellai
king maker kamarajar
Post a Comment