உலர்த்தி வைத்த விழியோரங்கள்
ஒட்டி வைத்த புன்னகையென போலியாய்
தினம் தினம் நீள்கிறது இரவுகள்
இதழ் சொல்லாத பிரியங்கள்
உன் விழிகளில் கசிகிறது கண்ணீராய்...
விம்மி விம்மி நிசப்தம் கிழிக்கும்
சிறு அழுகை சத்தம் என்னை
முழுவதுமாய் சிறை பிடிக்கிறது .
என்னவென்று கேட்க எத்தனித்தும்
இயலாத உள்ளமாய்
பக்கத்து அறையில்
பாதி உணர்வு குடித்த
அவளின் சத்தத்தின்
மிச்சத்தில் இறந்து கொண்டிருக்கிறேன் .
இருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!
முற்று பெறாத சுவாசமாய்
என் மனம் எங்கோ
வெகுதொலைவில் மெல்ல மெல்லத்
தொலைந்துபோய்க் கொண்டிருக்கிறது
அந்த பாதி வெளிச்சம்
அனைத்து இரவில் !
வெளிச்சத்தில் தொலைத்த
பொருளாய் என் இதயம்
உன்னிடம்
இரவுக்குள் தொலைந்த
வெளிச்சமாய் இங்கு
இன்னும் தனிமையில்
நான் . ..
- நேசத்துடன்
பனித்துளி சங்கர்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
27 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : நிசப்த இரவுகள் - Panithuli shankar kavithaigal in Tamil :
//இரவுக்குள் தொலைந்தவெளிச்சமாய் இங்குஇன்னும் தனிமையில்நான் . .. ///அனுபவிச்சு எழுதின மாறி இருக்கே சார்.....
Adada vada pochey...!
இதழ் சொல்லாத பிரியங்கள்உன் விழிகளில் கசிகிறது கண்ணீராய்...நல்லாயிருக்கு...
//இரவுக்குள் தொலைந்தவெளிச்சமாய் இங்குஇன்னும் தனிமையில்நான் . .. //
ரொம்ப நல்லா இருக்கு.
தெளிந்த நீரோடையாய் கவிதை
நன்று நண்பரே ......
(முடிவில் ஒரு முடிச்சோ, ஒரு விடையோ வைத்து அமைத்துப் பாருங்களேன் ... உங்களால் சிறப்பாக இதை முடியும் ...வாழ்த்துகள் )
ரொம்ப நல்லா இருக்கு.
இரவுக்குள் தொலைந்த
வெளிச்சமாய் இங்கு
இன்னும் தனிமையில்
நான் . ..
/அருமை சங்கர்..:))
//இருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!\\
அருமை நண்பரே ...
அழகான, என்னை கவர்ந்த கவி வரிகள்
அழகு வரிகள்
எதைவிட்டு எதை கூற அனைத்து வரிகளும் அருமை நண்பரே..!
பனித்துளியின்
கவிதை மழை
கனமாக பொழிந்தாலும்
இதயங்களை
இதமாகவே
நனைக்கிறது.
ஒருவகையில்
இந்த நனைதலும்,
சிலிர்ப்பாகவே இருக்கிறது..
கவிதையை சுவாசித்த
முடித்தபின்னும்..!!!
# அழுது அழுது நனைந்த கன்னங்கள்
உலர்த்தி வைத்த விழியோரங்கள்
ஒட்டி வைத்த புன்னகையென போலியாய்
தினம் தினம் நீள்கிறது இரவுகள்
# என்னவென்று கேட்க எத்தனித்தும்
இயலாத உள்ளமாய்
பக்கத்து அறையில்
பாதி உணர்வு குடித்த
அவளின் சத்தத்தின்
மிச்சத்தில் இறந்து கொண்டிருக்கிறேன் .
# இருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!
கவிதை அருமை நண்பரே.... இந்த வரிகள் பிடிக்கிறது.
//இருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!//
நல்லாயிருக்கு...
மனதை கனக்க வைக்கிறது.
உற்றுப்பார்க்கும் வெளிச்சம் ....சூப்பர்.
விழியோர கிணற்றின்விளிம்பில் நீர்தளும்பி கொண்டேஇருக்கிறது ---- தனிமை
நைஸ் ஒன்:)
///////இருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்.../////
அழுத்தமாக வருடிச் செல்கிறது.. சகோதரம்..
அருமையான பதிவு வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
வெளிச்சத்தில் தொலைத்த
பொருளாய் என் இதயம்
உன்னிடம்
இரவுக்குள் தொலைந்த
வெளிச்சமாய் இங்கு
இன்னும் தனிமையில்
நான் . ..
கவிதை அப்படியே இழுத்துக் கொண்டு போய் முடிவில் இந்த வரிகளில் மனசு சிலிர்த்துப் போய் விட்டது.. கவிதை முழுமையுமே உணர்வுகளின் பூரண ஆதிக்கம்
///////அழுது அழுது நனைந்த கன்னங்கள்உலர்த்தி வைத்த விழியோரங்கள் //////வரிகளுக்கு ஏற்றாற்போல் புகைப்படம் அருமை
//இருட்டுக்குள் இருக்கும் என்னை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
என் அறையின் வெளிச்சம்
வெகுநேரமாய்...!
//
இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!
//என்னவென்று கேட்க எத்தனித்தும்
இயலாத உள்ளமாய்
பக்கத்து அறையில்
பாதி உணர்வு குடித்த
அவளின் சத்தத்தின்
மிச்சத்தில் இறந்து கொண்டிருக்கிறேன்//
nalla aakkam parattugal
polurdhayanithi .
//இரவுக்குள் தொலைந்தவெளிச்சமாய் இங்குஇன்னும் தனிமையில்நான் . .. //ரொம்ப நல்லா இருக்கு.////////அருமையும் கூட
?????????? ?????????????????? ???????????? ????????????? . .. ///?????????? ?????? ???? ??????? ????
இரவுக்குள் தொலைந்தவெளிச்சமாய் இங்குஇன்னும் தனிமையில்நான் . .. ///அனுபவிச்சு எழுதின மாறி இருக்கே
/முற்று பெறாத சுவாசமாய்என் மனம் எங்கோவெகுதொலைவில் மெல்ல மெல்லத்தொலைந்துபோய்க் கொண்டிருக்கிறதுஅந்த பாதி வெளிச்சம்அனைத்து இரவில் !// மனதில் ஏதோ தாக்கந்தனை தோற்றுவிக்கிறது.
???? ?????.?????????????.?????? ??????http://kaatruveli-ithazh.blogspot.com/
Post a Comment