அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று ஒரு புதுமையான தகவலின் வாயிலாக மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் அனைவரும் தவளைகளைப் பார்த்து இருப்போம். ஆனால் இந்த தவளைகளில் உள்ள வியப்பானத் தகவல்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த மிரட்டும் தவளைகள் என்ற தலைப்பில் இந்த தகவலை தந்திருக்கிறேன். சரி இனி நாம் மிரட்டலுக்கு வருவோம். சாரி விஷயத்திற்கு வருவோம்.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன அதாவது கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த தவளை இனம். இதை விட ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த தவளைகளில் மட்டும் மொத்தம் ஆறாயிரத்திற்கும் அதிகமான இனங்கள் இருக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்த தவளைகள் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்துகொள்ளும் திறமை கொண்டவை. இதை பற்றி விரிவாக அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும் .
நம் அனைவருக்கும் இதுவரை தவளைகள் நிலத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ குழிகள் அமைத்தோ அல்லது பாறைகளின் இடுக்குகளிலோதான் வாழ்ந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தவளை இனம் கூடு கட்டி வாழ்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! ஆம் நண்பர்களே..!! சில மாதங்களுக்கு முன்பு தென் இந்தியாவில்தான் இந்த அறிய வகை தவளை இனம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை தவளைகள் மிகவும் வினோதமான முறையில் புற்களினாலான குட்டுகள் அமைத்து வாழ்கின்றன என்பது ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் வாழும் சில தவளை இனங்கள் எலியை விட மிக வேகமாக ஓடும் திறமை பெற்று இருப்பதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு முறை தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் ஆய்விற்காக பிடித்து வரப்பட்ட தவளைகளை, எலிகள் அடைக்கப்பட்ட ஒரே கூண்டில் போட்டு அடைத்திருக்கிறார்கள் அப்பொழுது பயத்தில் தவளைகள் அதிக ஓலி எழுப்பியதால் வேறு வழியின்றி தவளைகளின் பெட்டியை மாற்றுவதற்காக திறந்த பொழுது ஒரு தவளையும், எலியும் வெளியில் தப்பி ஓடிய பொழுது எலியை விட அதி வேகத்தில் தவளை ஓடுவது கண்டு வியந்த கண்டுபிடிப்பாளர்கள், மீண்டும் பல சோதனைகள் செய்து பார்த்ததில் எலியை விட தவளைகளின் வேகம் அதிகம் இருப்பது உறுதி செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த தவளை இனம்தான் இப்படியென்றால் இதைவிட ஒரு தவளையின் செயல் மிகவும் வியப்பிற்குரியது அது என்னவென்றால் இந்த தவளைகளை கும்பகர்ணன் தவளைகள் என்று கூட சொல்லலாம். எதற்காக இந்த தவளைகளை கும்பகர்ணனுடன் ஒப்பிடுகிறேன் என்றால் இந்த தவளை இனம் தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் உறங்கும் திறமை உள்ளவையாம். பலருக்கு சில கேள்விகள் இதில் எல்லாம் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக உறங்கினால் உணவிற்காக என்ன செய்கின்றன என்று. இந்த தவளைகள் சுவாசிப்பதின் மூலம் தங்களின் உணவுகளை சரி செய்து கொள்கின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது
மனிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த தகவல்களை விட மிகவும் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால் பொதுவாக தவளைகள் பூச்சிகளை தின்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது கேட்டு இருக்கிறோம் ஆனால் வட ஆப்பிரிக்கா காடுகளில் காணப்படும் நீர் நிலைகளில் உள்ள சில தவளை இனம் பாம்புகளையே முழுவதும் முழுங்கும் அளவிற்கு திறமையும் உருவமும் கொண்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தவகை தவளைகளின் உமிழ் நீரில் மனிதர்களை கொல்லும் அளவிற்கு விஷத் தன்மை இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்ன நண்பர்களே இன்றைய தவளைகள் பற்றிய தகவல்கள் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரையும் ஒரு புதுமையான தகவலுடன் சந்திக்கிறேன். மறக்கமால் உங்களின் கருத்து பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
23 மறுமொழிகள் to தகவல் களஞ்சியம் - மிரட்டும் தவளைகள் வியப்பான தகவல்கள் :
பாம்பையே முழுங்கும் தவளையா ஆச்சரியம்தான்.. படங்களும் அருமை..
Arumaiyana Achcharyamana thagavalgal kalakkal padangaludan...
அருமையான தகவல்
என்ன ஆச்சர்யமான தகவல்கள் தவளைகளைப் பற்றி... ! www.thangampalani.blogspot.com
தவளையில் இத்தனை வகை இருக்கா.. ஆச்சரியம்தான்..
நல்ல பகிர்வு..படங்கள் அருமை..
நல்ல தகவல்கள்.
ஆச்சர்யம் நிறைந்த தகவல்.வாசிக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
இதுவரை கேட்டிராத தகவல்கள்!!
தல நீங்க என்ன வீட்டில பெரிய லைப்ரரி யே வைசிருகீங்களா??
மிரளவைக்கும் தகவல்கள்..!! இதுவரை கேள்விப்படாத புதுமையான தகவல்கள் நண்பரே..! தொடரட்டும் தங்கள் தீராத தகவல் தேடல்கள்.!
சங்கர்,சூப்பர் போஸ்ட்
அரிய தகவல்கள் சகோதர வாழ்த்துக்கள்..
நல்லா பீதிய கெளப்பிட்டிங்களே அண்ணா.. :)
நண்பரே அருமையான தகவல் உங்களுடைய தலைப்பை நேற்று கேட்டவுடன் எப்பொழுது வெளியிடுவிர்கள் என்று எதிர் பார்த்து இருந்தேன் அருமை ஆச்சர்யம் நிறைந்த இதுவரை கேட்டிராத தகவல் நண்பரே..! தொடருங்கள்
அருமையான தகவல்
எங்கெருந்து புடிக்கிறீங்க படமும் தகவலும்:)
ஓ...இப்பிடி நிறங்களிலெல்லாம் தவளை இருக்கா!சாப்பிடாமலே நல்லாத் தூங்கலாம் தவளையாப் பிறந்திருந்தா!
நான் கிணற்றுத் தவளை அல்ல அப்படியீகீறீங்க.
சுவாரஸ்யமான தவளைத் தகவல்கள்....டிஸ்கவரி சேனலில் ஒருவர் ஒரு தவளையின் தலையை எடுத்து விட்டு அதை சாப்பிட்டுக் காட்டினார்!
தவள பைக் கூட ஓட்டுமா?!சூப்பர் தகவல்கள்.....
தகவல்கள் அனைத்தும் அருமை முடிந்தால் எம் தளத்திட்டு வரவும் www.vikkiulagam.blogspot.com
இதுவரை அறியாத தகவல். வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.,
Post a Comment