காலப் பெருவெளி -தமிழ்க் கவிதைகள்..!


ன் நினைவுகளால் உறக்கம்
தொலைத்தப் பல இரவுகளின்
காலப் பெருவெளியில்
இன்னும் கடந்துகொண்டிருக்கின்றேன்

கைகளில் ஆயிதம் இல்லை
கற்பனைகளுடன் தினமும் மோதி மோதி
காயப்படுகிறது நிஜங்கள் .

ன்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொருவரின் பார்வைகளிலும்
ஏதோ சொல்ல நினைத்து கரைந்துபோன
சோகங்களின் வார்த்தைகளை எல்லாம்
அவர்களின் உதட்டு சுளிப்புகளில்
மொத்தமாய் என்னை நோக்கி
வீசி செல்கிறார்கள் .

ங்கேனும் சிதறும்
சிரிப்பின் சத்தங்களில் எல்லாம்
மீண்டும் உன் ஞாபகங்கள்
என் இதயத்தை நிரப்பி செல்வது
வாடிக்கையாகிப்போனது .

காற்றின்றி இறந்து போகும்
ஒரு புல்லாங்குழலின் இசையாய்
தினம் உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன் இறந்து போகிறேன்

நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!!



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 

30 மறுமொழிகள் to காலப் பெருவெளி -தமிழ்க் கவிதைகள்..! :

Anonymous said...

சங்கர் எப்பிடி சார் நீங்க மட்டும் எழுதுறிங்க !!!!!! //கற்பனைகளுடன் தினமும் மோதி மோதிகாயப்படுகிறது நிஜங்கள்////உன் நினைவுகளால் இதயம் கிழிந்தகாதலன் //கலக்கிடிங்க சார் அருமை ?!?!?!

Praveenkumar said...

//காற்றின்றி இறந்து போகும் ஒரு புல்லாங்குழலின் இசையாய்தினம் உன் ஸ்பரிசம் தேடியே உயிருடன் இறந்து போகிறேன் //

எங்கேயோ போய்டீங்க பாஸ்...!

நீங்கள் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் வைரமுத்துக்கு போட்டியாக இருப்பாய் என்றுதான் அமீரகம் அனுப்பப்பட்டுயிருக்கிறாய் போல...

அணைபோட்டாலும் தங்களது கவிதை காட்டாற்றை நிறுத்த முடியாது. அமீரகத்தில் கவிதை விதையாய் புதைக்கபட்டருக்கிறாய்..
அது மீண்டும் தமிழ்நாட்டில் கவிதை ஆலமரமாய் உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

கலக்குங்க..!! கவிதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. வாழ்த்துகள் நண்பரே..!

THOPPITHOPPI said...

கவிதை புரியும்படி இருக்கு

Arun Prasath said...

கலக்கிடீங்க... எனக்கு அவ்ளோவா கவிதை ரசிக்க தெரியாது... ஆனா இது நானே ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க..

Ramesh said...

//நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!!

அசத்தல்.. அருமையான வரிகள்..

விழியே பேசு... said...

நான் ஆடை கிழிந்தபைத்தியம் என்றுதான் "எல்லோருக்கும் தெரியும்ஆனால் யாருக்குத் தெரியும்உன் நினைவுகளால் இதயம் கிழிந்தகாதலன் என்று..!!" - காதலின் வலியை அழகாக அதே சமயம் ஆழமாகவும் சொல்லி இருக்கீங்க நல்ல இருக்கு ஆனா, கஷ்டமா இருக்கே...!

Anonymous said...

மிக மிக அருமை நண்பரே ..... no chance ... superb

வெங்கட் நாகராஜ் said...

காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை. கற்பனை உங்களுக்கு அருவியாய் கொட்டுகிறது....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒவ்வரு வரிகளும் காதலை சொல்கின்றன... அருமை நண்பரே... கடைசி கவிதையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..

ஹரிஸ் Harish said...

நல்ல பதிவு..

Unknown said...

அருமையான வரிகள்.நீங்க எழுதுற கவிதைகளால் என் மனம் வாழ்கையின் பல தருண வலிகளை நினைவு கூறுவதாக உள்ளது.வஞ்ச புகழ்ச்சியல்ல.நன்றி

vasu balaji said...

நல்லா வந்திருக்கு

அன்புடன் நான் said...

காற்றின்றி இறந்து போகும்
ஒரு புல்லாங்குழலின் இசையாய்
தினம் உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன் இறந்து போகிறேன்


நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!!


கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அத்தனையுமே மனதை வருடும் வரிகள் சங்கர் !

Unknown said...

பிரமாதம் தல,

settaikkaran said...

கவிதைகள் மூலம் உணர்வுகளைப் பிழிந்து வரிசையில் அமர வைத்திருப்பது போலிருக்கிறது. வெரி குட்! :-)

Anonymous said...

//நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!! //

என்ன சங்கர் சொல்ல பொறாமையா இருக்கு இப்படி மென்மையா எழுதமுடியலையேன்னு...

muthu said...

அருமையா இருக்கு சங்கர் ஜி, அன்புடன் முத்துக்குமார், குவைத்.

Unknown said...

//கற்பனைகளுடன் தினமும் மோதி மோதிகாயப்படுகிறது நிஜங்கள்//
super!!!! :)

Jerry Eshananda said...

புகைப்படம்...வரிகள்...நன்று.

தேவன் மாயம் said...

நல்ல கவிதை சங்கர்!

Unknown said...

அருமையான வரிகளைக் கொண்ட கவிதை.. ரொம்ப நல்லாயிருக்கு..

Philosophy Prabhakaran said...

கவிதைகள் அருமை... கடைசி கவிதை அருமையிலும் அருமை...

Philosophy Prabhakaran said...

இந்த பின்னூட்ட நிரலி எனக்கு பிடித்திருக்கிறது... இதை எப்படி என் தளத்தில் இணைப்பது என்று சொல்ல முடியுமா.?

சிவராம்குமார் said...

காதலோட வலியை ரொம்ப அருமையாக வார்த்தைகளில் வெளிக்கொண்டு வந்த விதம் அழகு!

தமிழ்க்காதலன் said...

unkal kavithai arumai. azhaku. vaazhththukkal. mun paththiyil "aayutham" enpathai aayitham ena kurippittirukkireerkal. thiruththavum. nanri.

THOPPITHOPPI said...

பக்ரித் விடுமுறையா? பதிவையே காணோம்

போளூர் தயாநிதி said...

nalla karpanai
plurdhayanithi

மனோ சாமிநாதன் said...

"காற்றின்றி இறந்து போகும்
ஒரு புல்லாங்குழலின் இசையாய்
தினம் உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன் இறந்து போகிறேன்"

அருமையான வரிகள்!!

சென்னை பித்தன் said...

உங்கள் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் என் வயது குறைந்து போகிறது!இறந்தகாலம் நிகழ் காலத்தில் வந்து பாய்வது போல் உணர்கிறேன்!