கொட்டிக் கிடக்கிறது குட்டித் தகவல்கள்

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த குட்டிக்குட்டித் தகவல்கள் தொடரில் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குட்டிக்குட்டி தகவல்கள் என்றதும் பலருக்கு சில சந்தேகங்கள் ஏற்படலாம். ஆம் நண்பர்களே ஒரு தகவலை பல பக்கங்கள் எழுதி சொல்வதை விட ஒரே பக்கத்தில் பலத் தகவல்களை தரவேண்டும் என்று எனது எண்ணங்களில் வெகு நாட்களாகத் தேங்கிக் கிடந்த ஆசைக்கு உயிர் கொடுக்கும் முதற்கட்ட முயற்சிதான் இந்தக் குட்டிக்குட்டித் தகவல். சரி இனி நாம் தகவலுக்கு போகலாம்.


பொதுவாக நாம் அனைவரும் பின்னோக்கி நடக்கும் பறவை மற்றும் பின்னோக்கி நடக்கும் விலங்குகள், இயந்திரங்கள் இன்னும் ஏன் மனிதர்களை பற்றிக்கூட அறிந்திருப்போம் ஆனால் விண்ணில் ஒரு முழு கிரகமும் பின்னோக்கி சுழல்கிறது என்றால் நம்புவீர்களா !?
ஆம் நண்பர்களே..!! நமது பூமியைப் போன்ற ஒரு கிரகம் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனி சிறப்புடன் பின்னோக்கி சுழன்று கொண்டிருக்கிறதாம். அது மட்டும் அல்லாது சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்திருப்பதும் இந்த கோள்தானாம்.
இந்த விநோதக் கோளின் பெயர் வெள்ளி.

இதன் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இரவில் நிலவிற்கு அடுத்ததாக அதிகப் பிரகாசத்தை ஏற்படுத்தக்ககூடிய சிறப்பு இந்த வெள்ளி கோளிற்குத்தான் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால்தான் இதற்கு காலை மாலை நட்சத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்று சொல்கிறது அறிவியல் கணிப்பு .

சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு இந்த சிரிப்பு என்று பாடி வைத்தான் கண்ணதாசன். ஆனால் மனிதர்களாகிய நம்மைப் போலவே சிரிக்கக்கூடிய பறவை ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா..!! ஆம் நண்பர்களே..!!

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் வாழக்கூடிய குக்​கூ​பரா என்ற பறவை இனம்தான் இந்த சிறப்பிற்குரியது. இந்தப் பறவைகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டால் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மனிதர்களைப் போலவே சிரிக்கும் சிறப்புக் கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அது மட்டும் இல்லாது மனிதர்களாகிய நமக்கு வேறுபடும் பெண்களின் சிரிப்பு ஆண்களின் சிரிப்பு என்ற வேறுபாட்டைப் போலவே இந்த பறவை இனத்திலும் பெண் பறவைகள் பெண்களைப் போலவும் ஆண் பறவைகள் ஆண்களைப் போலவும் ஒலி எழுப்பி சிரிக்கும் சிறப்பம்சம் கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

ரி நண்பர்களே..!! இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மனிதர்களைப் போல இந்த பறவை சிரிப்பதைக் கூட நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் ஆனால் இதையும் தாண்டி மிகப் பெரும் வியப்பை கொண்ட பறவை ஒன்று அமெ​ரிக்​கா​வில் வாழ்கிறது.

 இந்த பறவை இனத்தின் பெயர் பிட்​டர்ன். இதன் வியப்பை ஏற்படுத்தும் சிறப்பு என்னவென்றால் இந்த பறவை எழுப்பும் சத்தம் சிங்கம் கர்ஜிப்பது போன்று இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக இந்த பறவைகள் வசிக்கும் இடத்தில் மான் மற்றும் முயல் போன்ற சாதுவான விலங்கினங்களை பார்க்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது .

ன்ன நண்பர்களே இன்றையக் குட்டிகுட்டித் தகவல்கள் தொடரில் தந்தத் தகவல்கள் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் இந்த குட்டிக்குட்டி தகவல்களில் இன்னும் பல வியப்பானத் தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும்.
   

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

20 மறுமொழிகள் to கொட்டிக் கிடக்கிறது குட்டித் தகவல்கள் :

sathishsangkavi.blogspot.com said...

அனைத்தும் புது தகவல்கள்... தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல முயற்சி நண்பரே... தொடருங்கள்...

Jeyamaran said...

அண்ணா பினோக்கி சுழலும் கிரகம் உட்பட அணைத்து தகவலும் பயனுள்ளது இதுவரை அறியாதது

எஸ்.கே said...

புதுமையான தகவல்கள்! தொடரட்டும் உங்கள் பணி!

'பரிவை' சே.குமார் said...

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல முயற்சி

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. said...

புதுமையான தகவல்கள்

புதிய மனிதா. said...

அருமை ..

விஷாலி said...

நண்பரே அருமையான தகவல்கள்

Jerry Eshananda said...

attakaasam.

ம.தி.சுதா said...

நல்ல தகவல் சகோதரா.. மனிதனில் தான் விதிவிலக்கு என்று பார்த்தால் கோள்களில் கூடவா....
இன்னமொன்று சகோதரா.. பதிவுலகத்திலேயெ அதிக வாக்கிட்ட நபர் நீங்கள் தான் என நினைக்கிறேன் (32552).. இது இப்போ கூடியிருக்கமென நினைக்கிறேன்... இருக்கும் ஏணிகளுக்குள்.. இல்லை இல்லை.. நீங்கள் ஒரு லிப்ட் போல் தான் இளையவரை தூக்கிவிடுகிறீர்கள் நன்றிகள்....

Chitra said...

HAPPY தீபாவளி!

Praveenkumar said...

தல தொடரட்டும் தாங்கள் தீராத தேடல்கள்..!! குட்டிக்குட்டித் தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் மற்றும் இதுவரை கேள்விப்படாத புதுமையான தகவல்கள் தொடரட்டும் தங்கள் தேடல்கள்..! முன்கூட்டிய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!

venkat said...

அருமையான நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் . தொடரட்டும் .

சிவராம்குமார் said...

அருமையான தகவல்கள்!

Philosophy Prabhakaran said...

பயனுள்ள புதுமையான தகவல்கள்... உங்கள் வலைப்பூ வண்ணமயமாக இருக்கிறது... கமென்ட் பெட்டியும் புதுமையாக இருக்கிறது... இதுபோல கமென்ட் பெட்டி அமைப்பது பற்றி சொல்லித்தர முடியுமா...

Philosophy Prabhakaran said...

பயனுள்ள புதுமையான தகவல்கள்... உங்கள் வலைப்பூ வண்ணமயமாக இருக்கிறது... கமென்ட் பெட்டியும் புதுமையாக இருக்கிறது... இதுபோல கமென்ட் பெட்டி அமைப்பது பற்றி சொல்லித்தர முடியுமா...

தாராபுரத்தான் said...

அருமைங்க

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு, வெள்ளி பற்றிய தகவல் முதல் முறை படிக்கிறேன்.


நன்றி.

Anonymous said...

அருமையான தகவல்கள்.... நன்றி..