பனித்துளி சங்கரின்- தித்திக்கும் தீபாவளி சிறப்புக் கவிதை

னைத்து நண்பர்களுக்கும் இந்த பனித்துளி  சங்கரின்  இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!


தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி
உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .!
து வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே
அலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்
வண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்
உங்கள் இதழ்களில் மலரட்டும் .!

ங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்
அழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட
வெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .!

தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
ஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து
சத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்
தித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்
மகிழ்ச்சியின் முகவரியை அறிமுகப்படுதுங்கள். !
சுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்
சங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா ?
என்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .!
முடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .
கவிதை பேசும் நிலவுடன் கூடிய
இனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.!

ந்த இனிய இரவினில் இன்னும்
உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு
விளக்குகளை எழுப்பி அவற்றிற்கு
முகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி
இரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .!

த்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத
எறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்
என்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .!

யன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்
பறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .!
எறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.

த்தமாய் வீசும் காற்றை அதட்டி
சற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .

னமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை
இயலாதவர்களுக்கு ஊன்றுக்கோலாய் இருங்கள். !

ப்படி இயன்ற அளவில் இன்று
ஒருநாள் புதுமை பரப்புங்கள்.
பார்க்கும் விழிகள் எதுவும் உங்களை
பார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து
சத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் !!!
 
 
 
  ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
 
 
 

28 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின்- தித்திக்கும் தீபாவளி சிறப்புக் கவிதை :

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

Deepak kavithaigal arumai.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

Jeyamaran said...

அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் புதுமையான கவிதை வாழ்த்துகள் நட்புடன் மாறன்

எஸ்.கே said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

சிவராம்குமார் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா!

ம.தி.சுதா said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது தீப ஒளி நல்வாழ்த்துக்கள்...

sakthi said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!நட்புடன் ,கோவைசக்தி

venkat said...

வாழ்த்துக்கள் நண்பரே

vasu balaji said...

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்.

விஷாலி said...

கவிதை அருமை

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

DREAMER said...

நண்பரே..! வாழ்த்துக்கவிதை அருமை!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

-
DREAMER

சிங்கக்குட்டி said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

Kandumany Veluppillai Rudra said...

தங்களுக்கும் ,தங்களைச் சேர்ந்தவர்களுக்கும்
எங்கும் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்!!

nis said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சங்கர்

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் சங்கர் , அட்டகாசமான வாழ்த்துக் கவிதை - பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கிய கவிதை. நன்றி - இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

Thomas Ruban said...

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

Unknown said...

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அந்நியன் 2 said...

நீ சிரித்தாள் தீபாவளி
அதை நான் ரசித்தால் போகுமே வலி
புத்தாடையுடுத்தி
பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
பலவகை இனிப்போடு
புது வகை பூரிப்போடு
பஜனை பாடியப் பிறகு
டமால் ....டமால் ..வெடிசத்தம்.

உற்றார் உறவினர் ஒரு பக்கம்
நண்பர் நண்பிகள் மறு பக்கம்
இதனைக் காணும் கண்களுக்கு
காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.

அன்பை நேசி அழகு பெறுவாய்
அறிவை நேசி உயர்வு பெறுவாய்
அன்னையே நேசி சாந்தம் அடைவாய்
அன்பினால் மனைவியை நேசி
அருமையான வாழ்க்கை பெறுவாய்

அகம் மகிழ மழலையே நேசி
சுகம் பல கிடைத்து சொர்க்கம் காண்பாய்
மதங்களை மறந்து மனிதனை நேசி
மண்ணுக்குள் போகும் வரை, மாணிக்க கல்லாக ஜொலிப்பாய்.

இந்தத் திருநாளில் ஆணிலிருந்து பெண்ணுகள் வரை
ஒற்றுமையுடனுடன் ஓரினந்து, நாட்டு நலனில் அக்கறையோடு
ஜாதி மதம் பேதமின்றி,ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு
அனைவரும் நீண்ட காலம் நோயின்றி,பிறர் கண்ணீரின்றி,சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

Unknown said...

அருமையான கவிதை நண்பா, தீபாவளி வாழ்த்துக்கள்

அப்ரகாம் said...

நல்ல கவிதை தோழர்

சி.பி.செந்தில்குமார் said...

சங்கர்,5 நாள் லீவ் முடிஞ்சுது,புது பதிவு போடுங்க.