உலக சுவராஸ்யமான தகவல்கள் : அறிஞர் அண்ணா-வின் பேச்சாற்றல் ( Panithuli shankar Articals 13 January 2011 )


னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த உலக சுவராஸ்யமான தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இன்று நாம் பார்க்க இருக்கும் தகவல் பேச்சாற்றல் பற்றியது. பேச்சாற்றல் பலருக்கு இதன் அர்த்தம் தெரிவதில்லை. நம்மில் பலர் எல்லோரும்தான் பேசுகிறோம் இதில் என்ன சிறப்பு என்று தவறான கண்ணோட்டத்தில் இன்றும் இந்த பேச்சாற்றல் பற்றிய குறுகிய கண்ணோட்டத்தில் வர்ணிப்பதுண்டு. பொதுவாக நம்மில் பலருக்கு நன்றாகப் பேசத் தெரியும். ஆனால் அதே பேச்சை பலர் முன்போ அல்லது மேடைகளிலோ அரங்கேற்றி பேச அழைத்தால் நம்மில் பலருக்கு பயம் என்ற ஒன்று பக்கத்தில் உருட்டுக் கட்டைகளுடன் நிற்பது போன்ற ஒரு உணர்வு பலருக்கு தோன்றும். இன்னும் சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு இவர் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர் என்று கூட எண்ணம் தோன்றும். இது போன்ற மனிதர்கள் மேடைகளில் பேச தொடங்கினால் இடி முழக்கதைப் போன்ற ஒரு பேச்சாற்றல் படைத்தவர்களாக எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு அனைவரின் கவனத்தையும் தனது வார்த்தைகளின் ஜாலத்தால் வசியம் செய்யும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் நம்மில் பலர் எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்போம். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பேசுகின்றோம் என்றே புரியாத அளவிற்கு ஐந்து நிமிடங்களில் ஐநூறு பக்கம் வாசிக்க சொன்னால் ஏற்படும் வேகத்தில் பேசுவார்கள். இதுபோன்றவர்களைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த தெருவில் விழுந்து ஓடி தப்பித்துவிடத் தோன்றும் அந்த அளவிற்கு பயங்கரமான அறுவை பேராளியாக இருப்பார்கள். இன்னும் சிலர் பேசுகின்றேன் என்ற பெயரில் உதடுகளை மட்டுமே அசைப்பார்கள். என்னங்க சத்தமே வரவில்லை என்று கேட்டால் நான் எப்பொழுதும் மென்மையாகத்தான் பேசுவேன் என்று சொல்லி கேட்பவர்களை கொலைவெறியாக்குபவர்களும் உண்டு.

ன்னும் சிலர் பேசினால் அவர்களின் கேள்விகளுக்கு யாரும் எதிர்த்து பதில் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாக ஆராய்ந்து பொருள்பட பேசுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் பிறர் தவறு என்று சொல்லி வாதிடும் வார்த்தைகளைக் கூட, தங்களின் பேச்சுத் திறமையால் தன் வசப்படுத்தி, மீண்டும் சரிதான் என்று சொன்னவர்களே உணரும் அளவிற்கு மிகவும் தெளிவான மதி நுட்பத்துடன் வாதிடும் திறமைப் படைத்தவர்கள் என்று சொல்லலாம். உதாரணமாக தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்த வகையே என்று சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நம்மைப் போன்றவர்களிடம் அதிக கூட்டம் நிறைந்த இடத்தில் யாரேனும் ஒருவர் நமது தவறை சுட்டி காட்டி ஏதேனும் கேள்வி எழுப்பினால் நாம் பயந்து போய்விடுவோம் அல்லது என்ன சொல்வது என்றே தெரியாமல் வேறு ஏதாவது உளறி வைப்பவர்களும் உண்டு. ஆனால் அறிஞர் அண்ணாவோ இதுபோன்ற சவாலான கேள்விகளுக்கு அனைவரும் உறைந்துபோகும் அளவிற்கு பதில் அளிப்பதில் கை தேர்ந்தவர். அப்படி அவரின் பேச்சில் என்னதான் சிறப்பு இருக்கிறது என்று உங்களில் பலருக்கு வினா எழலாம் இதோ சொல்கிறேன்.

ப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்த காலம். அப்பொழுதுதான் ஹிந்திக்கு எதிராக பல எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் அரங்கேறிய சமயம் என்றுதான் சொல்லவேண்டும். ஒருவழியாக ஹிந்தி ஆட்சி மொழியாக ஏற்றுகொள்ள முடியாது என்று புறக்கணித்து அதைப் பற்றிய பேச்சே வேண்டாம் என்று இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அப்பொழுது நமது அறிஞர் அண்ணா அவர்கள் டில்லிக்கு (தற்போது புதுடெல்லி) ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தாராம். அனைவரும் பேசி முடித்தப் பிறகு அறிஞர் அண்ணாவை பேச அழைத்தார்களாம். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவான பல ஊடகங்கள் குவிக்கப்பட்டு இருந்ததாம். அப்பொழுது பேசத் தொடங்கிய அறிஞர் அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசுவதை விட எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எதுவும் மறுப்பு சொல்லாமல் அறிஞர் அண்ணாவும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார்.

ப்பொழுது அந்த பத்திரிக்கையாளர் ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாககூடாது என்று மறுக்கிறீர்கள்.?” என்று கேட்க அறிஞர் அண்ணாவோ ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாகவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?” என்று திருப்பி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தற்கு பத்திரிக்கையாளரோ ”இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்திதானே..!? அப்படியென்றால் ஹிந்திதானே தேசிய மொழி..?” என்றுக் கேட்டு இருக்கிறார். ஒருவேளை நம்மை போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஓடியே வந்திருப்போம். ஆனால் பேரறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியில் பதில் கொடுத்தாராம். ”நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் நாம் காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை தேசியப் பறவையாக வைக்கவில்லையே மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் என்றாராம்”.
ந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கைதட்டும்ஓசை நிற்க, பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நமது பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலின் மகிமையை. என்ன நண்பர்களே..! இன்றைய தகவல் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று எண்ணுகிறேன். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும்.



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

25 மறுமொழிகள் to உலக சுவராஸ்யமான தகவல்கள் : அறிஞர் அண்ணா-வின் பேச்சாற்றல் ( Panithuli shankar Articals 13 January 2011 ) :

THOPPITHOPPI said...

அண்ணாவின் பேச்சாற்றலை பற்றி நானும் பல முறை கேட்டு வியந்தது உண்டு.

Unknown said...

நல்ல பகிர்வு.

எஸ்.கே said...

அருமை சார்!

Vijay Periasamy said...

அண்ணா அவர்களின் , பேச்சாற்றல் வியக்க வைக்கிறது !! பகிர்தமைக்கு நன்றி ..

வே.நடனசபாபதி said...

நல்ல தகவல். இதுபோல் அண்ணா சொன்ன வேறொரு பதிலையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவரிடம் ஒரு வடஇந்திய பத்திரிகை நிருபர் 'உங்களவர்கள் தில்லி வந்தால் மூன்றே மாதத்தில் இந்தி கற்றுக்கொள்கிறார்களே. அப்படி இருக்க நீங்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்?' என்று கேட்டாராம். அதற்கு அண்ணா, வேடிக்கையாக, 'மூன்று மாதத்திற்கு மேல் கற்றுக்கொள்ள அதில் என்ன இருக்கிறது?' என்றாராம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமை ; அருமை

Praveenkumar said...

ஆச்சரிமூட்டும் தகவல்கள் நண்பரே..! அண்ணாவின் சமயோசித பதில் மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி தல பகிர்வுக்கு.

அஞ்சா சிங்கம் said...

நல்ல சுவாரசியமான தகவல் நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தகவல் நண்பரே.. தங்களால் பல அறியாத விசயங்கள் அறிய முடிகிறது... நன்றி..

கிருபாநந்தினி said...

அருமையான பதிவு! வே.நடனசபாபதி சொல்லியிருக்கும் அண்ணா பற்றிய தகவலும் ரொம்ப அருமைங்ணா! ரெண்டு பேருக்கும் நன்றி!

Anonymous said...

ரொம்ப அருமையான தகவல் பனித்துளி:)

செங்கோவி said...

நல்ல பதிவு..என்னைப் போன்ற குழந்தைப் பசங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

ம.தி.சுதா said...

நல்ல விசயங்களை பகிர்ந்தீர்கள் நன்றிகள்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

Jayadev Das said...

நல்லா பேசி என்ன புண்ணியம், இந்த ஆள் வந்ததுக்கப்புறம் தமிழனுக்கும், தமிழ் நாட்டுக்கும் பிடிச்ச தரித்திரம் விடவே இல்லை, இன்னைக்கு ஒரு ரூபாய் அரிசியில் [வாய்க்கரிசி] வந்து நிற்கிறது. தூ...

bandhu said...

வெறும் பேச்சாற்றல் ஒரு நல்ல ஆட்சியாளராக செயல்பட போதுமானதில்லை என்பதற்கு அண்ணாவும் கருணாநிதியும் நல்ல எடுத்துக்காட்டு!

Anonymous said...

////”நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் நாம் காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை தேசியப் பறவையாக வைக்கவில்லையே மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் என்றாராம்”./// எங்கள் ஊரில்(யாழ்ப்பாணத்தில்) கூட அண்ணாவின் பெயரில் ஒரு கலை மன்றம் உள்ளது (அண்ணா கலை மன்றம்).அவரின் இப்படிப்பட்ட திறமை தான் ,அவரின் புகழ் தமிழர் வாழும் பகுதி எங்கும் பரவியதற்கு உதாரணம்.

Anonymous said...

பொங்கலோ...பொங்கல்!
பொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...

முத்தரசு said...

பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் - அண்ணா என்றுமே எல்லோருக்குமே அண்ணா தான்

Mohamed said...

நண்பரே தமிழர் திருநாள் வாழ்த்துக்களுடன் அறிமுகம் ஆகின்றேன்.உங்கள் பதிவை பார்த்தேன் ரசித்தேன்.வாழ்க வளமுடன் அன்புடன் சர்புதீன்

kobikashok said...

அருமை மிக சிறந்த பயனுள்ள தகவல்

saleem said...

Very nice information. By, nellai saleem.

saleem said...

Very nice information. By, nellai saleem.

Unknown said...

Dear Bandhu

Annavai patri kurai solla namakku entha thaguthiyum illai. mudinthal CM aagi kaatungal.

by
Vijay

Unknown said...

i like annathurai

dwdivia said...

while commenting upon ANNAS oration in public functions esp. when he was opening the WORLD FAIR IN CHENNAI IN THE YEAR 1967 OR 1968 MANY FOREIGN DELEGATES AND LEADERS WERE HEARING HIS SPEECH AND HERE IS ONE COMMENT UPON HIS SPEECH BY SUCH DELEGATES ATTENDING THE EXHIBITION. "how beautifully the words are coming out of his mouth" and then another dignitary told " not only words but also thoughts " and the other man told " that too from his heart and not from his mouth"