கழிந்து போகும் இளமையென சிறியமுள்..!
துரத்திப் பிடிக்கும் முதுமையென பெரியமுள்..!
ஒரு கடிகாரமாய் வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறது வாழ்க்கை..!!
காலத்தின் வேகத்தில்
புதுப்பிக்க முயற்சித்து
தோற்றுப் போகிறது இளமை..!
உறக்கத்தில் உயிர் பெரும் கனவுகளாய்
ஆயிரம் ஆசைகள்,
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
உறங்கிக் கிடக்கும் உணர்வுகளுடன்...
தூக்கி எரியும் குப்பையென சில நாட்கள்,
துரத்திப் பிடிக்கும் பட்டமென சில நாட்கள்
நிரந்தரமின்றி நகர்கிறது வாழ்க்கை....!!!
சாயம் பூசிய புன்னகைகளிலும்
சாட்டை வீசும் வார்த்தைகளிலும்
காட்சிப் பிழையென அவ்வப்பொழுது
எட்டிப் பார்க்கிறது கண்ணீர் துளி...!
களைந்து போகாத ஆடை,
குறைந்து போகாத புன்னகை,
அவிழ்ந்து போகாத மவுனம் - என
மீண்டும் ஒரு இரவிற்குள்
சத்தமின்றி கசியத் தொடங்கிவிட்டது
இவளின் கண்ணீர்த் துளிகள்...!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
Tweet |
36 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : கண்ணீர் இரவுகள் ! ( Love Poem ) :
//தூக்கி எரியும் குப்பையென சில நாட்கள்,
துரத்திப் பிடிக்கும் பட்டமென சில நாட்கள்
நிரந்தரமின்றி நகர்கிறது வாழ்க்கை....!!!//
nice lines
//சாயம் பூசிய புன்னகைகளிலும்
சாட்டை வீசும் வார்த்தைகளிலும்
காட்சிப் பிழையென அவ்வப்பொழுது
எட்டிப் பார்க்கிறது கண்ணீர் துளி...!//
Really superb lines :)
துள்ளி திரிந்ததொரு காலம்,
பள்ளி பயின்றதொரு காலம்.... என தொடங்கும் பிள்ளை பருவத்திலிருந்து, கண்ணீர் துளிகளை கோர்த்து இணைக்கும் இளமை பருவம் வரை நடை பயில்கிறது உங்கள் கவிதை... அருமை...
அற்புதமான கருத்துக்கள் ஆழமான சிந்தனைகள் இதோ இந்த ஆயிரம் பொற்காசும் உங்களுக்கு தான் ஏற்ற்றுகொல்லுங்கள் தருமியே
கவிதை அருமை
சில கவிதைகள் படிக்கும்போதே ஒரு வித மனசஞ்ஜலத்தால் சந்தோஸப்படும்.. உங்கள் கவிதைகள் அந்த வகை..
அருமை...
கவிதை அருமை...
அருமை..//தூக்கி எரியும் குப்பையென சில நாட்கள்,துரத்திப் பிடிக்கும் பட்டமென சில நாட்கள்நிரந்தரமின்றி நகர்கிறது வாழ்க்கை....!!!//நெஞ்சில்..யதார்த்தமாக..
கவிதை அருமை.
//அவிழ்ந்து போகாத மவுனம் // பாவம்...
நல்ல கவிதை
உங்கள் கவிதை ரொம்ப நல்லா இருக்கு
//சாயம் பூசிய புன்னகைகளிலும் சாட்டை வீசும் வார்த்தைகளிலும் காட்சிப் பிழையென அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கிறது கண்ணீர் துளி...!//
ஒவ்வொரு வரியும் "நச்".. வாழ்த்துக்கள்....
//காலத்தின் வேகத்தில்
புதுப்பிக்க முயற்சித்து
தோற்றுப் போகிறது இளமை..!
//
அடடா ,, அழகான கற்பனை அண்ணா ..
//சாயம் பூசிய புன்னகைகளிலும்
சாட்டை வீசும் வார்த்தைகளிலும்
காட்சிப் பிழையென அவ்வப்பொழுது
எட்டிப் பார்க்கிறது கண்ணீர் துளி...!
///
இந்த வரிகளும் எனக்கு பிடிச்சிருக்கு
கவிதை மிக தெளிவா நகர்கிறது...
பாராட்டுக்கள்...
இந்த நெடுங்கவிதைக்கு ஹைக்கூ என போட்டிருக்க வேண்டாமே.... நாளை யாராவது ஹைக்கூ என தேடினால் .... புரியாதவருக்கு குழப்பம் ஏற்படும் அல்லவா? நன்றி.
வரிகளில் வலிகள் ம்ம்ம்ம்....மனதுக்குள் லேசான கனம்
அருமையான வரிகள் எப்போவும் போல
நல்ல கவிதை கனவில் தான் நிஜம் அனைத்தும் ..
காலத்தின் வேகத்தில்
புதுப்பிக்க முயற்சித்து
தோற்றுப் போகிறது இளமை.
காலத்தால் அழியாத
கவிதை வரிகளால்
வெற்றி பெறுகிறது இளமை.
இது எப்படி இருக்குது
” அவிழ்ந்து போகாத மவுனம் “
===============================
என்னே அற்புதமான வரிகள்..!!
அனைத்து கவிதகளும் அருமை
சில வரிகளை தேர்ந்தெடுத்து இவை மிகவும் அழகு என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை
பனித்துளியில் சொட்டுகிற கவித்துளிகள் மனித வாழ்கையின் உயிர்த்துளிகள்
அமைதியாக வீசும் பெரும் புயல் போல அடிமனசு வரை தடவிச்செல்கிறது உங்கள் அழுத்தமான கவிதை!
நல்லாயிருக்கு நண்பரே
இதயும்பாருங்க
http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_9863.html
நல்லாகீது மன்னியுங்கள் உங்கள் கவிதை அருமையாக உள்ளது
அண்ணே சூப்பராயிருக்கு!
கண்ணீரின் கதை
புவியின் ஈர்ப்புவிசையில்
எப்போதாவது தவறி விழுந்து இருக்கிறேன்
உன் விழியின் ஈர்ப்பு விசையால்
எப்போதும் தவறாமல் விழுந்து கொண்டிருக்கிறேன்
///தூக்கி எரியும் குப்பையென சில நாட்கள்,துரத்திப் பிடிக்கும் பட்டமென சில நாட்கள்நிரந்தரமின்றி நகர்கிறது வாழ்க்கை....!!!//// அருமையான வரிகள்
அடுத்த பதிவு எப்பங்க?
அருமையா இருக்குது....
அருமையா இருக்குது....
அருமையான வரிகள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
களைந்து போகாத ஆடை,குறைந்து போகாத புன்னகை,அவிழ்ந்து போகாத மவுனம் - எனமீண்டும் ஒரு இரவிற்குள்சத்தமின்றி கசியத் தொடங்கிவிட்டதுஇவளின் கண்ணீர்த் துளிகள்...!!parattugal
அருமையான கவிதை..
mihavum alahana kavi.........
ungal kavi thuligal athanayum mihavu arumayanavai,alahanavai.......
Post a Comment