அரிய தகவல்கள் ஆயிரம் : கைக்குட்டை தோன்றியக் கதை : interesting world articles :30+01+2011


னைத்து நண்பர்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் வாயிலாக மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆடைகளே இல்லாமல் இருந்தான் மனிதன் ஒரு காலத்தில் அதை நாகரிகமற்ற கற்காலம் என்றோம். பின்பு உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் இலை தழைகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டான். ஆஹா..! சிந்திக்கத் தொடங்கிவிட்டான் மனிதன் என்று சொன்னோம். பின்பு இன்னும் வளர்ச்சி அடைந்து ஆடைகள் என்ற பெயரில் பல துணிகளை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டான். ஆஹா..! மனிதன்தான் நாகரிகத்தின் உச்சம் என்றோம். சுற்றிய ஆடைகளை சற்று தேவைகளுக்கு ஏற்ப அழகு படுத்த தொடங்கினான். ஆஹா..! மனிதன்தான் ரசனையின் உச்சம் என்றோம். அதே ஆடை இன்று மெல்ல மெல்ல குறையத் தொடங்கி மீண்டும் ஆதிகாலத்திற்கு சென்று விட்டது.

 கைக் குட்டை அளவில் உடுத்திக் கொள்வதுதான் இன்றைய அதி நவீன வளர்ச்சியின் அழகான மகத்துவம் என்று ரசிக்கத் தொடங்கிவிட்டோம். இனி வரும் காலங்களில் ஆடை என்ற ஒன்று முகவரி இழந்து எங்கேனும் தொலைந்து போகும் நிலை வரலாம். சரி இது ஒருபக்கம் இருக்கட்டும் இன்றையத் தகவலுக்கும் இந்த ஆடைக் குறிப்புக்கும் என்ன இருக்கிறது என்று பலரின் உள்ளங்களில் கேள்விகள் எழலாம். உலகத்தில் இதுவரை உருவாக்காப்பட்ட ஆடைகளின் வடிவமைப்பை கணக்கெடுக்கத் தொடங்கினால் பல நூற்றாண்டுகளைப் பிடிக்கும் என்று ஒரு தகவல் கூறுகிறது. இதுதான் உண்மையும் கூட என்று சொல்லவேண்டும் காரணம் காலத்தின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு மனிதனின் புதுமைகள் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய அவசர உலகத்தில்.

ன்று வட்டமாக இருக்கும் ஆடை ஒன்று நாளை சதுரமாக மாறிவிடுகிறது. நாளைக்கு சதுரமான ஆடை எந்த வடிவத்தில் உருவம் பெரும் என்று யாரும் யூகிக்க முடியாத அளவில் மனிதர்களாகிய நாம் ஆடைகளில் தினமும் ஒரு புதுமையை உருவாக்கி கொண்டே இருக்கிறோம். சரி இனி விஷயத்திற்கு வருவோம். என்னதான் இந்த உலகத்தில் இதுவரை ஒவ்வொரு ஆடையும் பல வடிவங்களைக் கொண்டு திகழ்ந்தாலும் இன்னும் உலகத்தில் ஒரே வடிவத்தை மட்டுமே அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒன்று உள்ளது என்றால் அது கைக் குட்டை ஒன்றுதான் என்று சொல்லவேண்டும். சரி இந்த கைக் குட்டையில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத் தோன்றலாம். நமது மனித இனத்தில் பலர் ஆடைகளை பயன் படுத்துவதற்கு முன்பாகவே இந்த கைக் குட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது உலகில். ஒரு காலத்தில் இன்று மொபைல் போன்களைப் போல அனைவரின் கைவசம் இந்தக் கைக்குட்டைகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. சரி இதன் வடிவத்தில் என்ன சிறப்பு என்று நாம் பார்க்கலாம். பொதுவாக இதுவரை கைக் குட்டைகள் அதிகமாக சதுர வடிவத்தில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமும் அடங்கி இருக்கிறது என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை தெரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இவ்வளவு மாற்றம் கண்ட நமது நாகரீக துணி வகைகளில் நாம் பயன்படுத்தும் கைக் குட்டை மட்டும் இன்னும் அதிக மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு மன்னன்தான் காரணம் என்றால் நம்புவீர்களா..?!!! ஆம் நண்பர்களே..!!. பிரஞ்சு மன்னன் ஒருவர் உலகத்தில் ஆடைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுது மனிதன் உடுத்தும் ஆடைகளில் ஒரு போதும் நாம் மாற்றம் ஏற்படாத வகையில் செய்ய இயலாது என்ற எண்ணிய மன்னன்,

முதன் முதலில் மனிதர்களாகிய நாம் பயன்படுத்தும் கைக்குட்டைகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி கைக்குட்டைக்கு என்று முதன் முதலில் சதுர வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று 1785 ஆம் ஆண்டு இதற்காக ஒரு சட்டமே இயற்றி இருக்கிறார். ஒருவேளை யாரேனும் இதை மீறி வேறு வடிவத்தில் கைக் குட்டைகளைப் பயன்படுத்தினால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற பயங்கர தண்டனையையும் அறிவித்து இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்திற்குப் பிறகுதான் சர்வதேச கைக் குட்டை தயாரிப்பாளர்களும் கைக் குட்டைகளை சதுர வடிவில் மட்டுமே தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடு மட்டும் இல்லாது ஜப்பான் , இலங்கை போன்ற நாடுகளில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்தவர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்ன நண்பர்களே..!! இன்றைய தகவல் உங்கள் அனைவருக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
 
 
ந்தப் பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , இன்டலி , மற்றும் தமிழ் 10 -ல் குத்தவும் .
 

28 மறுமொழிகள் to அரிய தகவல்கள் ஆயிரம் : கைக்குட்டை தோன்றியக் கதை : interesting world articles :30+01+2011 :

சி.பி.செந்தில்குமார் said...

1st cut

சி.பி.செந்தில்குமார் said...

appaadaa.. this is 1st time ha ha ha shankar

MANO நாஞ்சில் மனோ said...

ada vadai poche...

சி.பி.செந்தில்குமார் said...

ok leave it mano.. take it

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான தகவல்..!!!
நன்றி மக்கா சங்கர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//ok leave it mano.. take it//

ha ha ha ha ha ha ha....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Wait i am having lunch and come later

ரேவா said...

இன்றைய தகவல் உங்கள் அனைவருக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்

ஒரு கைக்குட்டைக்குள் காதல் கடிதம் தெரியும்.... இந்த கதை எனக்கு தெரியாதே,...மிகவும் ரசித்தேன்
தகவல் அருமை.. பகிர்வுக்கு நன்றி நண்பா..

வசந்தா நடேசன் said...

Interesting.. கைக்குட்டைக்குள் இத்தனை சமாசாரங்கள் இருக்கிறதா?

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்
பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_30.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள் சங்கர்! கைக்குட்டை உருவானது பிரான்சிலா? ஆனால் இப்போது இங்கு யாருமே கைக்குட்டை பாவிப்பதில்லை! " பப்பியே " ( PAPIER ) எனப்படும் மெல்லிய கடுதாசி தாள்களையே பயன்படுத்துகிறோம்! இதற்கு " மூசுவார்" ( MOUCHOIR ) என்றும் பெயருண்டு!நீங்கள் சொன்னது போல இலங்கையிலும் இந்த கைக்குட்டை மிகப் பிரபலம்! இது அங்கு ' லேஞ்சி ' என்றும் அழைக்கப்படுகிறது! ஷங்கர், இன்னொரு தகவல், இலங்கையில் காதலர்கள் கைக்குட்டைகளை தமக்குள்ள பரிசுப் பொருளாக பரிமாறிக் கொள்வதில்லை! அப்படி பரிமாறினால் காதலர்கள் பிரிந்து விடுவார்களாம்! இப்படி ஒரு நம்பிக்கை அங்கு இருக்கிறது! அது தமிழ்நாட்டிலும் இருக்கிறதா?" எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது? அன்புக் காதலின் சின்னமாய், எந்தன் காதலி தந்தது! " என்ற பாடலை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் அப்படி ஒரு நம்பிக்கை இல்லை என்றே தோன்றுகிறது!

ஸ்வீட் ராஸ்கல் said...

ஷங்கர் சார்,
அருமையான பதிவு.இன்று ஒரு தகவல்,அனைவரும் தெரிந்துக் கொள்ளப்பட வேண்டிய மிக நல்ல தகவல்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் நல்ல தகவல்கள்.

செங்கோவி said...

//இயலாது என்று எண்ணிய மன்னன், // தொடர்பு அறுந்துள்ளது..கவனியுங்கள் ஷங்கர்.

Philosophy Prabhakaran said...

உபயோகமான தகவல்கள்... நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழக்கம் போல அருமையான அறியாத தகவல் நண்பரே..

mamtc said...

thats lot of info about handy:)
As far I knew bra was invented by two handys.
Too bad, I had moved on to tissues long back :)

MURUGESH said...

Superb Story Mr. Sankar, once again thanks to you...

Srini said...

ஒரு கர்சீப் இந்தப்போடு போட்ருக்கா ஹிஸ்டரில ?!!
இத்தனை நாளும் அது சளி சிந்தறதுக்கு மட்டும்தான்னு நெனைச்சதுக்குமாறா இவ்ளோ விஷயம் இருக்கா இதுக்கு பின்னால ?!!
கைக்குட்டையான பதிவு..அதாவது உபயோகமான பதிவு...

Anonymous said...

கைக்குட்டைக்கும் இத்தனை கதை இருக்கா..

'பரிவை' சே.குமார் said...

அருமையான தகவல்..!!!

kobikashok said...

நல்ல அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

டக்கால்டி said...

கைக்குட்டையின் சதுர வடிவத்தின் வரலாறு சுவாரசியம் நண்பா...

செல்வா said...

// மனிதன்தான் ரசனையின் உச்சம் என்றோம். அதே ஆடை இன்று மெல்ல மெல்ல குறையத் தொடங்கி மீண்டும் ஆதிகாலத்திற்கு சென்று விட்டது.
//

ஆமா ஆமா ..

செல்வா said...

//மனிதர்களாகிய நாம் ஆடைகளில் தினமும் ஒரு புதுமையை உருவாக்கி கொண்டே இருக்கிறோம். சரி இனி விஷயத்திற்கு வருவோம். //

இன்னும் வரலியா ?

செல்வா said...

//ஒருவேளை யாரேனும் இதை மீறி வேறு வடிவத்தில் கைக் குட்டைகளைப் பயன்படுத்தினால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற பயங்கர தண்டனையையும் அறிவித்து இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.//

அட பாவமே , நான் அது மடிச்சு வச்சிகரதுக்கு நல்லா இருக்கும்னு தான் அப்படி இருக்குதோன்னு நினைச்சேன் .. ஹி ஹி

ஆயிஷா said...

கைக்குட்டைக்கும் இத்தனை கதை இருக்கா.நல்ல தகவல்.

தெய்வசுகந்தி said...

Interesting!!!

Unknown said...

கைக்குட்டைக்குள் இத்துணை கருத்துக்களா???????