அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் புது வருடத்தின் முதல் வாரத்தில் இன்று ஒரு தகவல் பதிவின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் அனைவரும் பார்க்க இருப்பது அழகு பற்றிய ஒரு தகவல்தான்.
சரி உலகத்தில் என்னதான் ”அழகு” என்ற வார்த்தைக்கு ஆயிரம் விளக்கங்கள் தந்து தெளிவுபடுத்தி இருந்தாலும், இன்னும் நாம் புற அழகு ஒன்றே சிறந்த அழகாக எண்ணி அந்த நிரந்தரமற்ற அழகிற்கு மேலும் அழகு சேர்க்க பல ஆராய்சிகளும், ஆபரணங்களும் தினந்தினம் ஒரு புதுமையை நம்மில் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. அழகு என்பதே ஆபத்தான ஒன்றுதான் என்ற போதும் அதை ரசிக்க மறுக்கும் இதயம் நம்மில் யாருக்கும் இல்லை என்றே சொல்லவேண்டும் . ”அழகு” என்ற வார்த்தையை நாம் அழகாக உச்சரிப்பதே ஒரு அழகுதான். சரி. இந்த அழகிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்னதான் தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எழலாம் இதோ சொல்கிறேன்.
இப்படித்தான் ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஷிடம், ஒரு பெண் சென்று ”உலகத்தில் சிறந்த அழகென்பது எது?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கொடுத்த தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் ”ஒரு பானை நிறைய சோறு இருக்கிறது. அதை எடுத்து உண்பதற்கு நமக்கு பயன்படுவது தங்கக் கரண்டியா !? இல்லை மர கரண்டியா !?” என்றுக் கேட்டாராம். அதற்கு அந்தப் பெண் ”அதெப்படி சோற்றை எடுப்பதற்கு தங்கக் கரண்டியை பயன்படுத்துவது. மர கரண்டியைதான் பயன்படுத்துவோம்” என்று அந்தப் பெண் சொன்னாராம்.
அதற்கு பதில் தந்த சாக்ரடீஸ் ”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!” என்று அந்தப் பெண்ணின் வினாவிற்கு விளக்கம் தந்தாராம். என்ன நண்பர்களே..! இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய சிறந்தத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
30 மறுமொழிகள் to அறிந்துகொள் அரியத் தகவல்கள் ஆயிரம் : உலகில் அழகு உள்ளத்தில் ( சாக்ரடீஸ் - 03*01*2011 ) :
பயனுள்ள பகிர்வு
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
//பயனுள்ள பகிர்வு//
repeatu
Nice post.
உண்மைதான் அழகுக்கு வரைவிலக்கணம் யாராலும் சொல்ல முடியாது என படித்திருந்தேன் மனதின் ஆழுமையில்தான் அத்தனை அழகும் தங்கியிருக்கும் ஏனென்றால் எமது மனங்கள் ஒத்துக்கொண்ட அழகுகளைக்கூட மனக்கவலையின் நேரத்தில் காணும்போது அது அழகற்றதாக தோணலாம் ஆக ஒரு விடயத்தை பார்ப்பவரின் மனதின் நிலையைப்பொறுத்துத்தான் அழகு தீர்மானிக்கப்படுகிறது என்ற எனது கருத்துடன் தங்களின் விளக்கத்தையும் ஆதரிக்கிறேன் நன்றி
எல்லோரும் சிந்திக்க வேண்டிய தகவல்... பகிர்ந்தமைக்கு நன்றி... :)))
”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!”//உண்மை தான்... அதன் உங்க ப்ளாக் அழகா இருக்கோ !!!!
உலகில் அழகான பூ எது? பருத்தி பூ தான் அதை விட பயன் உள்ள பூ இருந்தால் சொல்லுங்கள் .........
அழகின் உண்மையை உணர்ந்தேன் இன்று
பயனுள்ள பதிவு. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
அழகாகக் கூறியுள்ளீர்கள்
நல்ல பகிர்வு.
நல்ல பதிவு அருமை சகோ
நன்று .
சிந்தனையைச் சீராக்க, சிறந்த ஒரு தகவல்.
எல்லோரும் சிந்திக்க வேண்டிய தகவல்...
உண்மைதானுங்கோ
நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ......
நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...
பயனுள்ள தகவல்.... பகிர்வுக்கு மிக்க நன்றி...
பயனுள்ள தகவல்.... பகிர்வுக்கு மிக்க நன்றி...
பயனுள்ள பதிவு அதனால் மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி
அருமையாக இருக்கிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
அத்தனையும் அருமை . திறம்பட நடத்தும் உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள்
//”அழகு” என்ற வார்த்தையை நாம் அழகாக உச்சரிப்பதே ஒரு அழகுதான். சரி. இந்த அழகிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்னதான் தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எழலாம் இதோ சொல்கிறேன். //
இனிமேல் தான் சொல்லப்போறீங்களா ..?
//அதற்கு பதில் தந்த சாக்ரடீஸ் ”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!”//
அதுவும் சரிதான் ..!!
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!” அழகுக்கு அழகான விளக்கம்
MIGA ALGAGA IRUKIRATHU
அருமை!
Post a Comment