உயரத்தில் பறக்க கொடி தைக்கும் எனக்கு
உடலில் உடுத்த ஒரு உடை இல்லை .
குடியரசு தினம் கொண்டாடும் நம்மில் பலருக்கு
குடியிருக்க வீடில்லை !.
வீடுள்ள நம்மில் பலர் ஏனோ இந்தியாவில் இல்லை
ஆண்டுக்கு ஒரு முறை அழகான அணிவகுப்பு
ஆடையில் குத்திக்கொள்ள அழகழகான கொடிகள்
நல்ல வியாபாரம் நாட்டில் !
கொடியேற்ற வருபவனுக்கோ கோட்டையில் இடம் இருக்கு
ஆனால் இந்தக் கொடியை தைக்கும் எனக்கோ
குடிசையில் கூட இடமில்லை !.
இறந்தவனும் ,இருப்பவனும்
என் நாட்டில் இருப்பதையெல்லாம் சுருட்டிகொண்டான்
இன்னும் எஞ்சி இருப்பது இந்த ஒட்டுப்போட்ட கொடியும்
இன்னும் ஓட்டுப் போட்டு ஒட்ட இயலாத
கிழிந்து போன இதயமும்தான் !
இடுப்பில் கட்டி இருக்கும்
கோவணமும் பறிக்கப்படுமுன்
பாடையில் படுத்துவிட்டால்
சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை !......
* * * * * * *
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * * *
Tweet |
32 மறுமொழிகள் to குடியரசு தந்த சுதந்திர வறுமை : பனித்துளி சங்கர் கவிதைகள் ஜனவரி 26 :
சரியான சாட்டையடி இந்த கவிதை....
வடையும் எனக்கா.....பனித்துளி...
அடடே வடைபோச்சே..
சரியான சாட்டையடி இந்த கவிதை....
என்னை ஞாபகம் இருக்கா?
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)நன்றி
இடுப்பில் கட்டி இருக்கும்கோவணமும் பறிக்கப்படுமுன்பாடையில் படுத்துவிட்டால்சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை !......வறுமையின் வலியை உணர வைத்தது உங்கள் கவிதை வாழ்த்துக்கள் நண்பா
ஆண்டுக்கு ஒரு முறை அழகான அணிவகுப்புஆடையில் குத்திக்கொள்ள அழகழகான கொடிகள்நல்ல வியாபாரம் நாட்டில் !super
சரியான கேள்விகள்...விடை கிடைக்குமா
அருமையான் கவிதை மிக அழகாக எழுதி இருக்கீங்க\
பனித்துளி பொழிந்த கவிதை ஒண்ணொண்ணும் அக்கினித் துளி!
ஆண்டுக்கு ஒரு முறை குடியரசு தினத்தன்று இது போன்ற சிறந்த ஒப்பாரிக் கவிதைகளை பிரசரித்து மக்களை மகிழ்ச்சி மயக்கத்தில் இருந்து விழிக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு எனது மனம் கனிந்த பாராட்டுகள்.
சத்தியமான கேள்விகள்-இன்னும்
சரியான பதிலற்ற கேள்விகள்
இது எனது முதல் வருகை
தங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன
***************************
எனது வலையில் நினைவாஞ்சலி வெளியிட்டுள்ளேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்
super! i really appreciate it.
அந்த பெரியவரின் படமே நெஞ்சை உலுக்கிவிட்டது..வெளியேறுகிறேன் கவிதையை படித்தால் மேலும் வலிக்கும் என்பதால்..
கவிதை அருமை,அழகாக எழுதி இருக்கீங்க
ஷங்கர் சார்,
வறுமை வார்த்தைகளில் தெறிக்கிறது.படத்தில் இருக்கும் அந்த பெரியவரின் படமே நெஞ்சை உலுக்குகிறது.
//இடுப்பில் கட்டி இருக்கும்
கோவணமும் பறிக்கப்படுமுன்
பாடையில் படுத்துவிட்டால்
சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை !......//
மரணம் தான் எல்லாவற்றிற்கும் முடிவு.அந்த வறுமைக்கும் சேர்த்து தான் என்று அருமையான முடிவு என்று சொல்லி இப்படி ஒரு வலியை மன்னிக்கவும் வறுமையை வரிகளில் சொல்லி எனக்கும் வலியை ஏற்படுத்திவிட்டீர்கள்.அழுத்தமான கவிதை.தொடர்ந்து எழுதுங்கள் உங்களின் ரசிகர்களான எங்களுக்காக.
ஷங்கர் சார் முதல் முறை வந்திருக்கிறேன். இனி தொடர்ந்து வருவேன்.
என்ன பண்றது சொல்லுங்க இப்படி இருந்தா தான் அரசியல் வாதிகள் நல்லா இருக்க முடியும்
www.athiradenews.blogspot.com
www.athiradeenglishnews.blogspot.com
அய்யய்யோ...புர்ச்சிக் கவிதை....ஓடுங்க..ஓடுங்க.
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது தலைவரே... நடக்கட்டும்...
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)நன்றி
சாட்டையடிக் கவிதை.
//இடுப்பில் கட்டி இருக்கும்
கோவணமும் பறிக்கப்படுமுன்
பாடையில் படுத்துவிட்டால்
சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை//
எதார்த்தமான உண்மை
நீங்கள் சொல்லியுள்ள உண்மை மனதை வலிக்கச்செய்கிறது. அதிகமான யதார்த்த நிகழ்வுகள் மனதை கனக்கச்செய்வது ஏனோ
அருமை
ஓட்டுப் போட்டு ஒட்ட இயலாத
கிழிந்து போன இதயமும்தான் !
---------------------------
டச் பண்ணிட்டீங்க...!!
quite an interesting poem.
Me and my thinking cap
மனம் வலித்தாலும், வாழ்த்துக்கள் கவிதைக்கும், கவிதை படைத்த தங்களுக்கும் .
//பாடையில் படுத்துவிட்டால்
சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை !......//
சுடும் உண்மை!!!
சாட்டையை விளாசுவது போல் விளாசி விட்டீர்கள்.
கவிதை அருமை. கொடி பிடிக்க தானே நமக்கு தெரியும் அதானால் தான் இந்த நிலமை. வாழ்த்துக்கள்
இ ன்று சுதந்திரம் அரசியல் வாதிகள் கையில் மட்டும்தான்..
ஏழைகளுக்கு இல்லை
கவிதை அருமை...
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
Post a Comment