பொங்கலோ பொங்கல் : பனித்துளி சங்கர் சிறப்புக் கவிதை

பூமித் தாயே பெருமிதம்கொள்
ஆயிரம் விதைதான் விதைத்தோம்
ஆனால் நீயோ ஆயிரம்பேர்
உண்ண உணவு கொடுக்கிறாய் .
எங்கள் அறிவியல் உலகம்கூட
இன்னும் இந்த விந்தையின்
வியப்பிலிருந்து மீளாமல்தான் உள்ளது .!

ண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
இதோ இதோ வந்துவிட்டது தை .!

வாருங்கள் இந்த இனிய திருநாளில்
புரிதலின் உறவுகள் கொண்டு
பிரிந்த இதயங்களை ஒன்றாய் இணைத்து ஆழ உழுது
இறந்த இதயங்களில் புது சோலைகள் அமைப்போம் .
பணம் என்னும் காகிதம் மணம் என்னும்
 மகுடத்தின் வேற்றுமை அறிந்து
ஆதிப்பிறப்பிடம் களிமண் கொண்டு
மனிதன் உயிர்க்கொடுத்த மண்பானைகள்
திங்கள் பார்த்து பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .



ன்பின் உறவுகள் அனைவருக்கும்,பனித்துளி சங்கரின் இதயம் கனிந்த " இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !




18 மறுமொழிகள் to பொங்கலோ பொங்கல் : பனித்துளி சங்கர் சிறப்புக் கவிதை :

Jaleela Kamal said...

இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

கவிதை அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

பொங்கல் கவிதை நல்லாயிருக்கு....

உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

செங்கோவி said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்...

ஆமினா said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமை அருமை பானைல பொங்கல் வைக்குறது குறைச்சலும் .... நீங்க சொன்ன கவிதை மூலம் மண்பானைல வச்ச பொங்கல் சாப்ட மாதிரி இருந்துசு...தமிழர் திருநாள் வாழ்த்துகள்

Harini Resh said...

இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்

aavee said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமையான கவிவரிகள்! எதுகை மோனைகள் சிறப்பாக வந்துள்ளன!

'பரிவை' சே.குமார் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கவிதை பூக்கள் பாலா said...

கவிதை அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

கவிதை அருமை

Prabu Krishna said...

உங்களை இங்கே அழைக்கிறேன்.

http://bloggersbiodata.blogspot.com/

ஆயிஷா said...

கவிதை அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்